news

News March 21, 2024

கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி மாற்றப்பட்டது ஏன்?

image

CSK அணியின் எதிர்காலத்தை கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அணியின் பயிற்சியாளர் பிளமிங் விளக்கமளித்துள்ளார். “புதிய கேப்டனை நியமிக்க இதுவே சரியான நேரம் என தோனி கருதியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2022இல் ஜடேஜாவை கேப்டனாக்கியதில் இருந்து நிறைய கற்றுக் கொண்டோம். ருதுராஜை கேப்டனாக்கும் முடிவுக்கு ஜடேஜாவும் ஆதரவு தெரிவித்தார். தோனி முழு சீசனிலும் விளையாடுவார்” எனத் தெரிவித்துள்ளார்.

News March 21, 2024

இதுதான் எனக்கு கடைசி தேர்தல்

image

2024 நாடாளுமன்றத் தேர்தல் தான், நான் கடைசியாக போட்டியிடும் தேர்தல் என புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “2019ஆம் ஆண்டு தேர்தலில் வெறும் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தேன். வீட்டில் தூங்கியவர்களை கூட்டி வந்து பூத்துக்கு இரண்டு வாக்கு போட்டிருந்தால் கூட வெற்றி பெற்றிருப்பேன். ஆனால் அது நடக்காமல் போனது வருத்தமாக இருந்தது” என்றார்.

News March 21, 2024

ஏப்ரல் 1 முதல் புதிய விதிகள்

image

புதிய நிதியாண்டில், கிரெடிட் கார்டு சேவையில் பல மாற்றங்கள் வரவுள்ளன. * SBI கார்டு மூலம் வாடகை செலுத்துவதற்கான ரிவார்டு பாயிண்ட்கள் நிறுத்தப்படுகிறது. *ICICI கார்டில் லவுஞ்ச் அணுகலைப் பெற, 3 மாதங்களில் ரூ.35,000, யெஸ் வங்கி கார்டில் ரூ.10,000 உபயோகித்திருக்க வேண்டும். *AXIS வங்கி ரிவார்டு பாயிண்ட்களை நிறுத்துகிறது. மேலும், லவுஞ்ச் அணுகலுக்கு 3 மாதங்களில் ரூ.50,000 உபயோகித்திருக்க வேண்டும்.

News March 21, 2024

இதுவரை போட்டியிட்ட அனைத்திலும் தோல்வி

image

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை தோல்வியை தழுவினார். எல்.முருகன் 2011 சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரம், 2012இல் சங்கரன்கோவில் இடைத்தேர்தல், 2021இல் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தமிழிசை சட்டமன்றத் தேர்தலில் 2006, 2011, 2016 மூன்று முறையும், மக்களவைத் தேர்தலில் 2009, 2019 என இரண்டு முறையும் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

News March 21, 2024

+2 பொதுத்தேர்வு நாளையுடன் நிறைவு

image

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வுகள், நாளையுடன் (மார்ச் 22) நிறைவடைகிறது. தேர்வுகள் எளிமையாக இருந்ததால் பலர் சதம் அடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. நாளை உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. விடைத்தாள் மதிப்பீட்டை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மே 6ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும்.

News March 21, 2024

நான்கு தொகுதிகளில் திமுக – பாஜக நேருக்கு நேர்

image

தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் 4 தொகுதிகளில் திமுகவுடன் நேருக்கு நேர் மோதுகிறது. கோவை – அண்ணாமலை vs கணபதி ராஜ்குமார், தென் சென்னை – தமிழிசை vs தமிழச்சி தங்கப்பாண்டியன், நீலகிரி – எல்.முருகன் vs ஆ.ராசா, மத்திய சென்னை – வினோஜ் செல்வம் vs தயாநிதி மாறன்.

News March 21, 2024

20 தொகுதிகளில் பாஜக போட்டி என அறிவிப்பு

image

தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் பாஜக நேரடியாக போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அதன்படி, பாஜக – 20, பாமக 10, அமமுக -2, ஐஜேகே -1, புதிய நீதிக் கட்சி – 1, ஜான் பாண்டியன் – 1, தேவநாதன் – 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தமாகாவிற்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும், 4 கூட்டணி கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News March 21, 2024

தமிழக பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

image

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, கோவை – அண்ணாமலை, நீலகிரி – எல்.முருகன், தென் சென்னை – தமிழிசை செளந்தரராஜன், நெல்லை – நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி – பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய சென்னை – வினோஜ் பி.செல்வம், கிருஷ்ணகிரி – நரசிம்மன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதே போல பெரம்பலூர் – பாரிவேந்தர், வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகின்றனர்.

News March 21, 2024

முட்டை தோசையை விரும்பும் தோனி

image

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி முட்டை தோசையை விரும்பி உண்பார் என லீலா பேலஸ் சமையல் கலைஞர் நகுல் புராணிக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “தோனி சென்னை வரும் போதெல்லாம் இங்கு அடிக்கடி உணவருந்துவார். குறிப்பாக, தோசையை விரும்பி சாப்பிடுவார். முட்டை தோசை என்றால் ரசித்து சாப்பிடுவார். தனக்கு எப்படிபட்ட தோசை வேண்டும் என்பதையும் சில நேரம் முன்கூட்டியே சொல்லிவிடுவார்” என்றார்.

News March 21, 2024

மாரடைப்பை ஏற்படுத்தும் ஐஸ் வாட்டர் குடிக்கும் பழக்கம்

image

ஐஸ் வாட்டர் குடிப்பதால் மாரடைப்பு ஏற்படும் என்ற அதிர்ச்சித் தகவலை சீன மருத்துவ அறிவியல் அகாடமி வெளியிட்டுள்ளது. “கோடையில் ஃபிரிட்ஜில் வைத்த நீரை அருந்துவது கொழுப்புகள் கரைவதை தடுக்கும். உடலில் எதிர்ப்பு சக்தியை குறைப்பதோடு ரத்த நாளங்களையும் சுருக்கும். அத்துடன் செரிமான உறுப்புகள், ஊட்டச்சத்துகளை சுவீகரிக்கும் ஆற்றலையும் பாதிக்கிறது” எனக் கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!