news

News March 22, 2024

ஆப்பிள் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த அமெரிக்கா!

image

அமெரிக்க ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் ஏகபோகத்துடன், போட்டியைச் சீர்குலைப்பதாக ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் அமெரிக்க அரசின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், இதில் வாடிக்கையாளர்கள் மற்றும் டெவலப்பர்கள் உள்நுழைய கட்டுப்பாட்டை ஆப்பிள் நிறுவனம் தவறாகப் பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் அரசின் குற்றச்சாட்டுகளுக்கு ஆப்பிள் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

News March 22, 2024

நீரின்றி அமையாது உலகு..!

image

நீரின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. பூமியில் உள்ள அனைத்து உயிரினங்கள் உயிர் வாழத் தண்ணீர் அவசியம். தண்ணீரிலிருந்து தான் உயிரின தோற்றங்கள் உருவாகியதாக ஆராய்ச்சிகளில் கூறப்படுகிறது. இயற்கையின் கொடையான தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தத் தவறினால், எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கை கேள்விக்குறி தான்.!

News March 22, 2024

சிறையில் இருந்து முதல்வராக கெஜ்ரிவால் தொடர முடியுமா?

image

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டாலும், டெல்லி முதல்வராக கெஜ்ரிவால் தொடர்வாரென ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. சிறையில் இருந்து முதல்வராக கெஜ்ரிவால் பணியாற்றுவது நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்று. இருப்பினும், 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, ஏதேனும் வழக்குகளில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டால் மட்டுமே பதவியை விட்டு நீக்க முடியும். அதுவரை கெஜ்ரிவால் முதல்வராக தொடர தடை இருக்காது.

News March 22, 2024

வரலாற்றில் இன்று!

image

➤1945 – அரபு கூட்டமைப்பு கெய்ரோவில் அமைக்கப்பட்டது. ➤ 1960 – ஆர்தர் ஷாவ்லொவ் மற்றும் சார்லஸ் டவுன்ஸ் ஆகியோர் லேசருக்கான முதலாவது காப்புரிமத்தை பெற்றனர். ➤1982 – நாசாவின் கொலம்பியா விண்ணோடம் ஏவப்பட்டது. ➤1993 – இன்டெல் நிறுவனம் முதல் பென்டியம் சிப்-ஐ அறிமுகம் செய்தது. ➤1995 – சோவியத் விண்வெளி வீரர் வலேரி பொல்யாக்கொவ் விண்ணில் 438 நாட்கள் கழித்துவிட்டு பூமி திரும்பினார்.

News March 22, 2024

தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

image

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகிறது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட 9 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நேற்று காங்கிரஸ் மத்திய குழு கூட்டத்தில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் அஜய்குமார் வெளியிடுகிறார்.

News March 22, 2024

எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்த பாஜக முயற்சி

image

மக்களவைத் தேர்தலுக்கு முன் அனைத்து வழிகளிலும் எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்த பாஜக முயற்சித்து வருவதாக காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே குற்றம்சாட்டியுள்ளார். கெஜ்ரிவால் கைது குறித்து தனது X பக்கத்தில் வெளியிட்ட பதிவில் அவர், ‘தேர்தல் முடிவுகளை பற்றி தெரிந்து, பாஜக முன்பே பயந்து போய் விட்டது. அந்த அச்சத்தினால் எதிர்க்கட்சிகளுக்கு அனைத்து வழிகளிலும் தொந்தரவுகளை கொடுத்து கொண்டே இருக்கிறது’ என்றார்.

News March 22, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

◾பால்: அறத்துப்பால்
◾ இயல் : இல்லறவியல்
◾அதிகாரம்: பொறையுடைமை
◾குறள்: 155
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
◾விளக்கம்: தனக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரைப் பெரியோர் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்; பொறுத்துக் கொண்டவரையோ பொன்னாகக் கருதி மதிப்பர்.

News March 22, 2024

மம்தா கட்சிக்கு கோடிகளை அள்ளி இறைத்த மார்ட்டின்!

image

அதிக தேர்தல் பத்திரங்கள் வாங்கிய நிறுவனங்களில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான பியூச்சர் கேமிங் நிறுவனம் (ரூ.1,368 கோடி) முதலிடம் பிடித்துள்ளது. அதில் அந்நிறுவனம் அதிகபட்சமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.542 கோடியும், திமுகவுக்கு ரூ.503 கோடியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ரூ.154 கோடியும், பாஜகவுக்கு ரூ.100 கோடியும், காங்கிரஸ் கட்சிக்கு ரூ.50 கோடியும் நன்கொடையாக அளித்துள்ளது.

News March 22, 2024

இது மட்டும் 6,000 ஈபிள் டவர் எடைக்கு சமம்!

image

உலகம் முழுவதும் மின்னணு கழிவுகள் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு அதிகரித்து வருவதாக புதிய ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. UTI & UNITAR அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், 2022இல் மட்டும் உலகளவில் 62 மில்லியன் டன் மின்னணு கழிவுகள் உருவாகியுள்ளன. இது 6,000 ஈபிள் டவர் எடைக்கு சமம். மேலும் மின்னணு கழிவுகள் ஆண்டுக்கு 2.6 மில்லியன் டன் அதிகரித்து, 2030க்குள் 82 மில்லியன் டன்னாக அதிகரிக்குமென கூறப்பட்டுள்ளது.

News March 22, 2024

கெஜ்ரிவாலுக்கு மருத்துவப் பரிசோதனை

image

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட கெஜ்ரிவாலுக்கு, டாக்டர்கள் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனர். இதனிடையே, அமலாக்கத்துறையால் சட்டவிரோதமாக கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இன்று முறையிட இருப்பதாக அம்மாநில அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!