India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக கோரி மாநில பாஜக தலைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து பேசிய பாஜக எம்எல்ஏ ராம்வீர் சிங் பிதுரி, சிறை நெறிமுறைகள் அவரை சிறையில் இருந்து ஆட்சி செய்ய அனுமதிக்காது. அதனால், அவர் உடனடியாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார். இல்லையெனில், சட்டம் தன் கடமையை செய்யும் என எச்சரித்தார்.
பெங்களூருவில் சுத்தமான ஆடை அணியாத இளைஞரை மெட்ரோ ரயிலில் ஏற அதிகாரிகள் அனுமதி மறுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டையின் மேல் பட்டன் அணியும்படி அறிவுறுத்திய அதிகாரிகள், சுத்தமான ஆடை அணிந்து வரும்படி வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த நபர் போதையில் இருந்ததாக அதிகாரிகள் சந்தேகித்ததாகவும், பிறகு அனுமதித்ததாகவும் மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 2 வாரமாக வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில் அடுத்த 5 நாளுக்கு வெப்பநிலை 2 டிகிரி – 5 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என மக்களுக்கு நிம்மதியான செய்தியை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. மேலும், நாளை தென் தமிழகம், டெல்டா, அதையொட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் ஏப்.13 முதல் 3 நாள்களுக்கு மழை தொடரும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால், வெயிலின் தாக்கம் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.
செல்போனுக்கு அழைக்கும் நபரை அடையாளம் கண்டுபிடிக்க புதிய இணையதள பக்கத்தை ட்ரூ காலர் அறிமுகம் செய்துள்ளது. ட்ரூ காலர் செயலி, ஆன்ட்ராய்டு தள இணையதள பக்கம் மட்டும் தற்போது உள்ளது. இந்நிலையில் அனைத்து ப்ரவுசர்களிலும் செயல்படும் இணையதள பக்கத்தை ட்ரூ காலர் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதை பயன்படுத்தி, செல்போனுக்கு அழைப்போரை அடையாளம் காண முடியும். இதில் குறுந்தகவல் வசதியும் உள்ளது.
2011ஆம் ஆண்டு இதே நாளில், ரோஹித் ஷர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முதல் முறையாக களமிறங்கினார். ஹைதராபாத் அணியில் விளையாடி கொண்டிருந்த அவரை, ஐபிஎல் ஏலத்தில் சுமார் 2 மில்லியன் டாலருக்கு மும்பை அணி வாங்கியது. 2013இல் மும்பை அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற அவர், பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். குறிப்பாக, 5 முறை (2013, 2015, 2017, 2019, 2020) ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை பெற்று கொடுத்துள்ளார்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைத்து சொத்து விவரங்களையும் வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வேட்பாளர்களுக்கும் தனிநபர் சுதந்திரம் உள்ளதாக கூறிய நீதிமன்றம், விலை உயர்ந்த முக்கிய சொத்துகள் குறித்து மட்டும் தெரிவித்தால் போதும் என தெரிவித்துள்ளது. வேட்பாளரின் விவரங்களை வாக்காளர் அறிய வேண்டுமென்றாலும், தனியுரிமையையும் கருத்தில் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளது.
பிரித்தாலும் சூழ்ச்சியை மக்கள் புரிந்துக் கொண்டால் திமுகவிற்கு ஒரு ஓட்டுக் கூட கிடைக்காது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வேலூரில் பிரசாரம் செய்த அவர், கைது செய்யப்பட்ட போதைப்பொருள் மாஃபியாக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது யார்? என கேள்வி எழுப்பினார். இனம், மதம், சாதியின் பெயரால் திமுக மக்களை தூண்டி விடுகிறது. திமுகவின் மோசமான அரசியலை மக்கள் மத்தியில் தொடர்ந்து அம்பலப்படுத்துவேன் என சூளுரைத்தார்.
விளம்பர வழக்கில் பதஞ்சலி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்காத உத்தராகண்ட் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பதஞ்சலி மீதான அனைத்து புகார்களையும் மாநில அரசுக்கு அனுப்பியதாக தெரிவித்த நீதிபதிகள், புகார் குறித்து ஆய்வாளர்கள் அறிக்கை அளிக்காமல் அமைதி காப்பதைக் கண்டித்தனர். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக சஸ்பெண்ட் செய்யும்படி மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அடுத்த ஐபிஎல் போட்டிக்கு டெல்லி அணியில் ரோஹித் ஷர்மா சேர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதையடுத்து 2 பேருக்கும் கருத்து வேறுபாடு நிலவுவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அண்மையில் டெல்லி அணி உரிமையாளர் பர்த் ஜிண்டால், பண்ட் உடன் ரோஹித் பேசியதை வைத்து, அவர் டெல்லி அணியில் சேரலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் பிலிப்பித்தில் பிரதமர் மோடியின் கூட்டத்தை பாஜக மூத்த தலைவர்கள் மேனகா காந்தி, மகன் வருண் காந்தி புறக்கணித்தது அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிலிப்பித் எம்பியாக 1996 முதல் இருவரும் மாறி மாறி பதவி வகித்தனர். இம்முறை வருண் காந்திக்கு பாஜக வாய்ப்பளிக்கவில்லை. இதனால் அவர் அதிருப்தியில் உள்ள நிலையில், மோடியின் நேற்றைய கூட்டத்தை 2 பேரும் புறக்கணித்தனர்.
Sorry, no posts matched your criteria.