news

News March 22, 2024

கட்சி வற்புறுத்தியதால் வேறு வழியின்றி போட்டி

image

கட்சி வற்புறுத்தியதால் வேறு வழியின்றி போட்டியிடுவதாக பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ” எனக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை. ஆனால், பாஜக தலைமை தேர்தலில் போட்டியிட கூறினார்கள், அதனால் நாமக்கல் தொகுதியில் களம் இறங்கியுள்ளேன். நிச்சயம் தேர்தலில் வெற்றி பெறுவேன். தமிழக மக்கள் மோடி மீதுள்ள அன்பின் காரணமாக எனக்கு வாக்களிப்பார்கள்” என்றார்.

News March 22, 2024

சனியால் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்

image

சனிபகவான் சிம்ம ராசிக்கு நேர் எதிரே ஏழாம் வீட்டில் கண்டச்சனியாக பயணம் செய்கிறார். அதோடு சுக்கிரனும் இடமாற்றம் செய்ய விருப்பதால் மேஷம், ரிஷபம், மகரம், மிதுனம் ஆகிய 4 ராசியினருக்கு ராஜயோகம் கிடைக்க இருக்கிறது. நிதி விஷயங்களில் முன்னேற்றம், குடும்பம் செழித்து தழைக்கும், மன நிம்மதி கிடைக்கும், வாழ்வில் இவ்வளவு நாட்கள் ஏன் என்றே தெரியாமல் சந்தித்து வந்த இன்னல்கள் நீங்கி ஒளி பிறக்கும்.

News March 22, 2024

இந்தியா, பூடான் இடையே விரைவில் ரயில் சேவை!

image

பிரதமர் மோடியின் பூடான் பயணத்தில், இந்தியா – பூடான் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. பூடானில் புதிய விமான நிலையம் அமைப்பது, அசாமின் கோக்ரஜார் மற்றும் வங்காளத்தின் பானர்ஹாட் ஆகிய இடங்களில் இருந்து பூடானுக்கு ரயில்கள் இயக்குவதற்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 2019-2024 இல் பூடானுக்கு ரூ.5000 கோடி நிதியுதவி வழங்கிய இந்தியா, அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி வழங்க முன்வந்துள்ளது.

News March 22, 2024

கோவையில் பாஜக வெல்லும்: அண்ணாமலை

image

தமிழகத்தின் அரசியல் மாற்றம் கோவையில் இருந்து தொடங்க உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ” முதல்வர் 40 நாட்கள் தங்கி இருந்து பரப்புரை செய்தாலும் பாஜகவே கோவையில் வெல்லும். டெல்லி அரசியலில் எனக்கு விருப்பம் இல்லை. பிரதமர் மோடி வற்புறுத்திய காரணத்தால் தான் தேர்தலில் போட்டியிடுகிறேன். 2026இல் தமிழகத்தில் பாஜக முதல்வரை உருவாக்கவே பிரதமர் தொடர்ந்து தமிழகம் வருகிறார்” என்றார்.

News March 22, 2024

விவசாயிகளுக்கான 17ஆவது தவணை தாமதமாகும்

image

பிரதமரின் கிஸான் திட்டத்தில் வழங்கப்படும் ₹2000 இந்த முறை காலதாமதாக வரவு வைக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ₹6,000 வழங்கும் இந்தத் திட்டத்தில் இதுவரை 16 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் 17ஆவது தவணை ஜூனில் வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்களவைத் தேர்தல் காரணமாக தள்ளிப் போகலாம் எனக் கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4இல் வெளியாகிறது.

News March 22, 2024

சிஎஸ்கே அணிக்கு எதிராக கோலியின் சாதனை

image

இன்றைய போட்டியில் 21 ரன்கள் அடித்த கோலி, ஐபிஎல்லில் CSK அணிக்கு எதிராக 1006 ரன்கள் அடித்துள்ளார். இதன்மூலம் CSK-க்கு எதிராக 1000 ரன்கள் அடித்த 2ஆவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். முன்னதாக தவான் 1057 ரன்கள் அடித்துள்ளார். ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் வார்னர் முதல் இடத்தில் உள்ளார். இவர் PBKS-க்கு எதிராக 1105, KKR-க்கு எதிராக 1075 ரன்கள் எடுத்துள்ளார்.

News March 22, 2024

மோடியின் ஆணவமே கெஜ்ரிவால் கைதுக்கு காரணம்

image

மோடியின் ஆணவத்தால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரின் மனைவி சுனிதா விமர்சித்துள்ளார். 3 முறை முதல்வராக இருந்த ஒருவரை, அதிகாரப்பசியின் காரணமாக மோடி கைது செய்துள்ளார். அவரை எதிர்ப்பவர்களை நசுக்க பார்க்கிறார். இது டெல்லி மக்களுக்கு செய்யும் துரோகம். கெஜ்ரிவால் உள்ளே இருந்தாலும், வெளியே இருந்தாலும் அவர் மக்கள் பணி தொடரும். அவர் எப்போதும் மக்களுக்கான மனிதர் என சுனிதா தெரிவித்துள்ளார்.

News March 22, 2024

சொன்னதை செய்த லாரன்ஸ்

image

விஜயகாந்த் மறைந்த பின் நடிகர் லாரன்ஸ் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், விஜயகாந்த் எப்படி பிறருக்கு உதவினாரோ, அதேபோல் அவரது மகனுக்கு நாமும் உதவ வேண்டும் எனக் கூறியிருந்தார். மேலும், அவர் நடிக்கும் படத்தில் நானும் நடிக்க ரெடி என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், சண்முகப் பாண்டியன் நடிக்கும் ‘படைத்தலைவன்’ படத்தில் நடிப்பதற்காக லாரன்ஸ் 3 நாள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 22, 2024

இந்தப் பழக்கம் மிகவும் ஆபத்தானது

image

இரவில் தூங்கச் செல்லும் முன் புகைப்பிடிக்கும் பழக்கம் ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். புகைப்பிடித்தல் புற்றுநோயை வரவழைக்கும் எனக் கூறினாலும், அதற்கு அடிமையானவர்கள் கைவிட முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், புகைப்பிடித்த உடனே தூங்கச் செல்வது பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும் எனக் கூறியுள்ள மருத்துவர்கள், குறைந்தது 1 மணி நேரத்திற்கு முன் அதனை தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

News March 22, 2024

சென்னை அணிக்கு 174 ரன்கள் இலக்கு

image

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி 20 ஓவர்களில் 173/6 ரன்கள் குவித்துள்ளது. ஆரம்பத்தில் ஆர்சிபி 78 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் தினேஷ் கார்த்திக் -அனுஜ் ராவத் ஜோடி சென்னை அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கியது. அனுஜ் 48 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் 38 ரன்கள் விளாசினர். சிஎஸ்கே சார்பில் முஸ்தாஃபிர் ரஹ்மான் 4, தீபக் சாஹர் 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

error: Content is protected !!