India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஊழலை எதிர்த்த ஆம் ஆத்மி தற்போது ஊழல் புகாரில் சிக்கித் தவிப்பதாக ராஜ்குமார் ஆனந்த் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லி அமைச்சர் பதவி, ஆம் ஆத்மி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவர் இன்று விலகினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் மாறினால் நாடு மாறும் என கெஜ்ரிவால் பேசினார். ஆனால், அரசியல் மாறவில்லை. அரசியல்வாதி மாறிவிட்டதால் கட்சியிலிருந்து விலகிவிட்டதாக கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அடிக்கடி தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி வருவதாக தயாநிதி மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார். ANI நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “முன்னர் நீட்டை எதிர்ப்பதாக கூறியவர்,இப்போது நீட் தேர்வை ஆதரிக்கிறார். முன்னர் இந்தி தெரியாது என்றவர், தற்போது இந்தியில் சரளமாக பேசுகிறார். பச்சோந்தியை போல நிறத்தை மாற்றும் அண்ணாமலை, காமெடியன் போல நடந்துகொள்கிறார். இதையே தொடருங்கள்” என்றார்.
தங்களுக்கு ஒதுக்கியது போலல்லாமல் வேறு மாதிரியான மைக் சின்னத்தை வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒட்டுவதாக நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், ஸ்விட்ச் இல்லாத மைக் தங்களுக்கு ஒதுக்கப்பட்டதாகவும், ஸ்விட்ச் உள்ள மைக்கினை வாக்கு இயந்திரங்களில் ஒட்டுவதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் நிலவும் மோதல் காரணமாக 50,000க்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு முகாம்களுக்கு இடம்பெயர்ந்த கர்ப்பிணிகளில் 200 பேருக்கு குழந்தை பிறந்துள்ளது. கடுமையான சூழலை எதிர்கொண்ட அந்தப் பெண்கள், குழந்தையின் முகத்தை கண்டு பெருமூச்சு விடுவதாக நெகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். மேலும், விரைவில் சூழல் மாறும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
புலம்பெயர் பெண் எழுத்தாளரான முத்தம்மாள் பழனிசாமி, 1933இல் மலேசியாவில் பிறந்தவர். கோவையை பூர்வீகமாகக் கொண்ட இவரது குடும்பம் மலேசியாவுக்கு கூலி வேலை செய்ய இடம் பெயர்ந்துள்ளனர். சுமார் 35 ஆண்டுகள் மலேசியாவில் ஆசிரியராக பணிபுரிந்த அவர், 1950ஆம் ஆண்டு ‘ஷோர் டு ஷோர்’ என்ற பெயரில் தன்வரலாற்று நூலை ஆங்கிலத்தில் எழுதினார். பின் நாளில் அதனை தமிழில் ‘நாடு விட்டு நாடு’ என்ற பெயரில் மொழிப்பெயர்த்தார்.
மலேசிய தமிழ் எழுத்தாளர் முத்தம்மாள் பழனிசாமி, வயது மூப்பு காரணமாக காலமானார். ‘நாடு விட்டு நாடு’ ‘நாட்டுப்புற பாடல்களில் என் பயணம்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர் முத்தம்மாள். குறிப்பாக ‘நாடு விட்டு நாடு’ நூலில், கோவையில் இருந்து மலேசியாவுக்கு கூலித் தொழிலாளியாக இடம்பெயர்ந்து முன்னேறியக் குடும்பத்தின் கதையை பதிவு செய்திருந்தார். இவரது மறைவுக்கு இலக்கியவாதிகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கோடீஸ்வரர்களில் ஒருவரும், பயோடெக் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியுமான பிரையன் ஜான்சன் 6 ஆண்டுகளில் உடல் தோற்றத்தின் மூலம் வயதை குறைத்து அசத்தியுள்ளார். அவரது தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. 46 வயதான அவர், வயதை குறைக்க ஆண்டுக்கு 2 மில்லியன் டாலருக்கு மேல் செலவிட்டதாக தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு கேட்டு தேமுதிக மனு அளித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்த விஜயகாந்தின் உடல், தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. நாள்தோறும் மக்கள் அங்கு சென்று வரும் நிலையில், காவலர்கள் பற்றாக்குறை எனக் கூறி போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தேமுதிக மனு அளித்துள்ளது.
கன்னியாஸ்திரி ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து பாடகி ரிஹானா சர்ச்சையில் சிக்கியுள்ளார். ‘இண்டர்வியூ’ இதழின் முகப்பு பக்கத்தில் இடம்பெற்ற ரிஹானாவின் புகைப்படம் கிறிஸ்தவ மதத்தை புண்படுத்துவது போல இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். அதே போல, தனது அந்தரங்கப் பகுதிகளை கைகளால் மறைத்து ரிஹானா போஸ் கொடுத்த புகைப்படமும் சர்ச்சையாகியுள்ளது.
பிரதமர் மோடியின் ஏமாற்று வேலை தமிழகத்தில் எடுபடாது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். விமானத்தில் இருந்து இறங்கி வந்து வாகனப் பேரணி நடத்தினால் மக்கள் ஓட்டுப் போட்டு விடுவார்களா எனக் கேள்வி எழுப்பிய அவர், டெல்லியில் இருந்து அடிக்கடி பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருவதால் யாருக்கும் எந்த பலனும் இல்லை என்றார். மேலும், யார் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது எனவும் அவர் உறுதிபட தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.