news

News April 11, 2024

மார்ட்டினுக்கு எதிராக ED விசாரிக்க இடைக்காலத் தடை

image

தேர்தல் பத்திர சர்ச்சையில் சிக்கிய லாட்டரி கிங் மார்ட்டினுக்கு எதிரான ED வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஏற்கெனவே தனக்கு எதிராக CBI பதிவு செய்த வழக்கு விசாரணை முடியும் வரை, ED விசாரிக்கக் கூடாதென உத்தரவிடக்கோரி மார்ட்டின் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ED விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

News April 11, 2024

ரம்ஜான் : இன்று பொதுவிடுமுறை

image

நோன்புக் கடமைகளை முடித்து, ஈகைப் பண்பு சிறக்க ரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகள். இல்லாதோருக்கு உதவுவதையும் அனைவரிடத்தும் அன்பு செலுத்துவதையும் போதித்து, மனித குலத்துக்கு மகத்தான எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் நபியடிகள். அனைவருக்கும் உதவி செய்யும் இந்த நாளை சிறப்பாக கொண்டாட தமிழக அரசு இன்று பொதுவிடுமுறை அறிவித்துள்ளது.

News April 11, 2024

முக்கியத்துவம் பெறும் குலதெய்வ வழிபாடு

image

குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வத்தை குலதேவதை என்றும் அழைப்பர். குடும்பத்தில் ஒரு கஷ்டம் எனில், கூப்பிட்ட குரலுக்கு ஏன் கூப்பிடாமலே கூட வந்து உங்கள் துக்கங்களை போக்குவது உங்கள் குலதெய்வமே. ஆண்டுக்கு ஒருமுறையாவது குலதெய்வ கோயிலுக்கு சென்று வரவேண்டும். ஆறு பெளர்ணமிகள் தொடர்ந்து குலதெய்வ வழிபாடு செய்து வந்தால் கடன் தொல்லைப் படிப்படியாகக் குறையும் என்பது ஐதீகம்.

News April 11, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ தேர்தலுக்கு பின் அதிமுக காணாமல் போகும் – அண்ணாமலை
➤ டெல்லி அமைச்சர் திடீர் ராஜினாமா
➤ ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு அரசு மரியாதை
➤ அதிமுகவை சீண்டிப் பார்க்க வேண்டாம் – வைகை செல்வன்
➤ ‘ஜோக்கர் 2’ படத்தின் டிரைலர் வெளியானது
➤ முதலிடத்தில் நீடிக்கும் தமிழக வீரர் குகேஷ்

News April 11, 2024

களத்தில் இருக்கும் வரை நாங்க தான் கிங்…

image

ராஜஸ்தான் அணிக்கு எதிரான வெற்றி, தங்களின் உழைப்புக்கு கிடைத்த பரிசு என குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். குஜராத் டைட்டன் அணி களத்தில் இருக்கும் வரை போட்டி முடிந்துவிட்டதாக எந்த தருணத்திலும் யாரும் நினைத்துவிட கூடாது. இறுதி வரை போராடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வோம் என்பதை அணி வீரர்கள் நிரூபித்துள்ளார்கள் என்ற அவர், அடுத்தடுத்த போட்டிகளிலும் தொடர்ந்து வெல்வோம் என்றார்.

News April 11, 2024

திமுக இரட்டை வேடம் போடுகிறது

image

தமிழகத்தில் பாஜகவை வளர விட மாட்டேன் என சீமான் தெரிவித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களுக்கு கூட மோடி இத்தனை முறை சென்றதில்லை. ஆனால், தமிழ்நாட்டுக்கு பிரதமர், இத்தனை முறை வருவது ஏன்? என்று கேள்வி எழுப்பிய அவர், எதிர்க்கட்சியாக இருக்கும்போது மோடியை எதிர்ப்பதும், ஆளும் கட்சியாக இருக்கும்போது ஆதரவு தெரிவிப்பதும் திமுகவின் பாணி என்றார். ரோடு ஷோ நடத்தும் மோடி மக்களிடம் பேசுவாரா? என்றும் அவர் வினவினார்.

News April 11, 2024

இந்தியா வர நாள் குறித்த எலான் மஸ்க்

image

எலான் மஸ்க் விரைவில் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக பணக்காரரும், X வலைதளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் வருகிற ஏப்ரல் 22இல் இந்தியா வர உள்ளார். இந்த வருகையின் போது பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேச உள்ளார். இது தொடர்பாக X-இல் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், “இந்தியாவில் பிரதமர் மோடியுடனான சந்திப்பை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

News April 11, 2024

இன்றைய நல்ல நேரம்

image

ஏப்ரல் – 11 | பங்குனி – 29
▶கிழமை: வியாழன்
▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM,
▶கெளரி நேரம்: 12:30 PM – 01:30PM,
6:30 PM – 7:30 PM
▶ராகு காலம்: 01:30 PM – 03:00 PM
▶எமகண்டம்: 06:00 AM – 07:30 AM
▶குளிகை: 09:00 AM – 10:30 AM
▶சூலம்: தெற்கு
▶பரிகாரம்: தைலம்
▶ திதி – திரிதியை

News April 11, 2024

தோல்வி குறித்து பேச கடினமாக உள்ளது

image

தோல்வி பற்றி விளக்கமளிக்க கடினமாக இருப்பதாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். நேற்றைய போட்டிக்கு பிறகு பேசிய அவர், “எந்த ஒரு அணியின் கேப்டனுக்குமே ஏன் தோல்வி அடைந்தோம், எந்த இடத்தில் வெற்றியை தவறவிட்டோம் என்று கூறுவதற்கு சங்கடமாக இருக்கும். அதே போன்ற ஒரு மன நிலையில் தான் இருக்கிறேன்” என அவர் வேதனை தெரிவித்தார். முன்னதாக குஜராத் அணிக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் அணி வெற்றியை நழுவ விட்டது.

News April 11, 2024

70 ஆண்டுகளாக முடியாததை மோடி முடித்து காட்டினார்

image

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவே, பயங்கரவாதம் பெருகுவதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளதாக யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். 70 ஆண்டுகளாக 370 சட்டப்பிரிவை ரத்து செய்ய காங்கிரசால் முடியவில்லை. பயங்கரவாதத்தின் மூலத்தை அடியோடு அழித்து, 370வது பிரிவை பிரதமர் மோடி நீக்கியதாக கூறிய அவர், அதனால் தான் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் நம்மை கண்டு பயந்து நடுங்குவதாகவும் தெரிவித்தார்.

error: Content is protected !!