India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேர்தல் நடத்தை விதி மீறல் புகாரில் பாஜகவின் மாநில துணை தலைவரும், வடசென்னை பாஜக வேட்பாளருமான வழக்கறிஞர் பால் கனகராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்தியதாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் தேர்தல் அதிகாரி புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் பால் கனகராஜ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவன் கோயிலில் பக்தர்கள் வழிபட சில வழிமுறைகள் உள்ளன. கோயிலுக்குள் நுழைந்ததும், நந்தியையும், அதன்பிறகு விநாயகரையும் வணங்க வேண்டும். பின்னர் சிவன் சந்நிதிக்கு சென்று வழிபட வேண்டும். அதையடுத்து அம்பாள் சந்நிதியில் வழிபட வேண்டும். அதைத் தொடர்ந்து, நவகிரக வழிபாடு செய்ய வேண்டும். பிறகு சந்நிதியை சுற்றிவர வேண்டும். இப்படி செய்வதால், சிவன் அருள் நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
முதல்வர் ஸ்டாலினுக்குத் தான் தோல்வி பயம் வந்துவிட்டது; மீண்டும் மோடிதான் பிரதமர் என்ற பதற்றத்தில் அவர் ஏதேதோ பேசி வருகிறார் என்று வானதி பதிலடி கொடுத்துள்ளார். பிரதமர் மோடிக்கு எப்போதும் வெற்றிதான். ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு முதல்வர் உட்பட INDIA கூட்டணி தலைவர்கள் தூக்கத்தை தொலைக்கப் போகிறார்கள். தமிழக அரசியல் களம் திமுக – பாஜக என மாறிவிட்டது முதல்வரின் பேச்சு மூலம் உறுதியாகியுள்ளது என கூறினார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கம்பம் நகர துணை செயலாளர் சாதிக்ராஜா கட்சியின் அடிப்படை உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி அமைத்து, தேனி தொகுதியில் டிடிவி களமிறங்குகிறார். அவர் இன்று தனது பிரசாரத்தை தொடங்கிய நிலையில், பதவியை ராஜினாமா செய்வதாக தேனி மாவட்டம் முழுவதும் சாதிக்ராஜா போஸ்டர்களை ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அருணாச்சலை சீனா உரிமை கொண்டாடுவது கேலிக்குரியது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்துள்ளார். அருணாச்சலை உரிமை கொண்டாடி வரும் சீனா, பிரதமர் மோடி அண்மையில் அங்கு சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து ஜெய்சங்கர் கூறுகையில், “அருணாச்சல் இந்தியப் பகுதிகளில் ஒன்று. அதை சீனா தனது பகுதி என கூறி உரிமை கொண்டாடுவது கேலிக்குரியது” எனக் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் விருதுநகரில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமாரும், அதிமுக கூட்டணியில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனும், திமுக கூட்டணியில் காங்., எம்.பி மாணிக்கம் தாகூரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், பரப்புரையை தொடங்கிய ராதிகா, பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என்ற நம்பிக்கையில் தான் வந்துள்ளதாக கூறினார். மேலும், அரசியலும், விருதுநகரும் தனக்கு புதிதல்ல எனவும் அவர் தெரிவித்தார்.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மலர் சந்தைகளில் பூக்களின் விலை கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. மல்லிகை பூ ₹300லிருந்து ₹750க்கு, பிச்சிப்பூ ₹400லிருந்து ₹1250க்கும், மஞ்சள் கேந்தி ₹40லிருந்து ₹60க்கும், சிவப்பு கேந்தி ₹50லிருந்து ₹80க்கும் வாடாமல்லி ₹40லிருந்து ₹70க்கும், செவ்வந்தி ₹150லிருந்து ₹250க்கும், ரோஜா ₹80லிருந்து ₹150க்கும், சம்பங்கி ₹200லிருந்து ₹350க்கும் விற்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்றிரவு 1 மணி நேரம் புவி நேரம் கடைபிடிக்கப்பட்டது. இரவு 8.30 முதல் 9.30 மணி வரை அவசியமின்றி எரியும் விளக்குகளை அணைத்து வைக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் வேண்டுகோள் விடுத்தது. அதன்படி, கொல்கத்தா, மும்பை, டெல்லி, சென்னை உள்பட நாட்டின் பல பகுதிகளில் ஒரு மணி நேரம் மின் விளக்குகள் அணைத்து வைக்கப்பட்டது.
சேலத்தில் அதிமுக வேட்பாளர் விக்னேஷூக்கு ஆதரவாக துண்டறிக்கைகளை வழங்கி இபிஎஸ் வாக்குசேகரித்தார். அங்குள்ள பெரியசோகரை பெருமாள் கோயிலில் வழிபட்டு பரப்புரையை தொடங்கிய அவர், தேவைகளின் பிரதிபலிப்பே அதிமுக தேர்தல் அறிக்கை என்றும், திமுகவின் தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கை எனவும் விமர்சித்தார். தொடர்ந்து, இன்று மாலை திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இபிஎஸ் பங்கேற்க உள்ளார்.
தெலுங்கு தயாரிப்பாளரும், நடிகை அஞ்சலியும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்காடித் தெரு, கற்றது தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அஞ்சலி, தெலுங்கு திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார். அவர் தற்போது காதலில் விழுந்துள்ளதாகவும், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரும் அவரும் ஒருவரையொருவர் காதலிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை அஞ்சலி மறுக்கவோ, உறுதி செய்யவோ இல்லை.
Sorry, no posts matched your criteria.