India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், குஜராத் கேப்டன் ஷுப்மன் கில் புதிய சாதனை படைத்துள்ளார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அவர், பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் என விளாசிய அவர், 72(44) ரன்கள் குவித்தார். இதனால் ஐபிஎல் வரலாற்றில் வேகமாக 3,000 ரன்களை கடந்த 4ஆவது வீரர் மற்றும் முதல் இளம்வீரர் என்ற பெருமைகளை பெற்றார். அவரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
பிரதமர் மோடியை நோக்கி கேள்வி கேட்டு தன்னை முன்னிலைப்படுத்த முதல்வர் ஸ்டாலின் முயற்சிக்கிறார் என்று எல்.முருகன் விமர்சித்துள்ளார். பிரதமர் மீண்டும் மீண்டும் தமிழகம் வருவதால் திமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் வரும் தேர்தலில் திமுகவுக்கு டெபாசிட் கூட மிஞ்சாது; படுதோல்வி அடையும் எனக் கூறிய அவர், மெட்ரோ திட்ட மதிப்பீடு குறித்த ஆய்வு பணி முடிந்தபின் விரைவாக நிதி அளிக்கப்படும் என உறுதியளித்தார்.
வெயில் காலத்தில் ஏற்படும் மூலச்சூடு, மலச்சிக்கல், குடலில் புண் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் ஆற்றல் ரோஜாப்பூவுக்கு உண்டு. மேனியை மின்ன வைக்கும் ரோஸ் சர்பத் செய்வது எப்படி என பார்க்கலாம். பன்னீர் ரோஜா இதழ்கள், முந்திரி, ஏலக்காய், இளம் தேங்காய் துண்டுகள், தேன் ஆகியவற்றை கூழ் போல அரைக்கவும். பின்னர் அதனை வடிக்கட்டி சாறாக எடுத்து, அதில் நட்ஸ் & சப்ஜா விதை சேர்த்தால் சுவையான சர்பத் ரெடி.
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தருமபுரம் ஆதீனம் வெள்ளிச் செங்கோலை அளித்தது தற்போது பேசும் பொருளாகியுள்ளது. அண்மையில், பிரசாரத்துக்காக கடலூருக்கு வந்த முதல்வரை தனது சொந்த விருப்பத்தின் பேரில் தருமபுரம் ஆதீனம் சந்தித்து பேசியுள்ளார். அப்போது 40 தொகுதியிலும் வெற்றிபெற வாழ்த்தியிருக்கிறார். புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவின்போது, மோடியிடம் செங்கோல் தமிழக ஆதினங்கள் அளித்தது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் டிராபிக் சிக்னல், வீடுகள், கடைகளில் யாசகம் கேட்க திருநங்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறை சட்டம் 144 பிரிவின்கீழ், இந்தத் தடை உத்தரவை காவல்துறை பிறப்பித்துள்ளது. இதை மீறும் திருநங்கைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள காவல்துறை, முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி, கண்காணிப்பு பணியையும் மேற்கொண்டுள்ளது.
RR-GT இடையேயான ஐபிஎல் போட்டியில், மெதுவாக பந்துவீசியதால் ராஜஸ்தான் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் விதிப்படி, நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீசும் அணி 20 ஓவர்களை வீசியிருக்க வேண்டும். ஆனால், நேற்றை போட்டியில் குறித்த நேரத்திற்குள் பந்துவீச்சை முடிக்காததால், ராஜஸ்தான் அணிக்கு ₹12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக, டெல்லி, குஜராத்துக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
ஆபரணத் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியதால், பொதுமக்கள் கிறுகிறுத்துப் போயிருக்கிறார்கள். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.53,800க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,725க்கும் விற்பனையாகிறது. அதே நேரம், வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.88.50க்கும், கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ.88,500க்கும் விற்பனையாகிறது.
ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களுக்கு 10 ஆண்டு தடை விதிக்க வேண்டுமென சீமான் வலியுறுத்தியுள்ளார். திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், ஓட்டுக்கு பணம் கொடுப்பதில் இருந்துதான் ஊழல் விதை ஊன்றப்படுகிறது என்றார். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்க்கு 10 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும், அப்படி செய்தால் யாரும் பணம் கொடுக்க மாட்டார்கள் என்றும் சீமான் குறிப்பிட்டார்.
ஹிட் படங்களை கொடுத்து உச்சத்தில் இருந்த விஜய், திடீரென தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கினார். திரைத்துறையில் அவரின் தந்தை சந்திரசேகர் இருந்ததால், எளிதில் விஜய்யால் அறிமுகமாக முடிந்தது. ஆனால் அரசியலில் எந்த பின்னணியும் இல்லாமல் சாதிப்பது அரிதாகும். விஜய்யின் தந்தை சந்திரசேகர், திமுகவில் இருந்த காரணத்தால் அவரின் தாக்கம் இதற்கு காரணமாக இருக்கலாம் என்ற ஒரு கருத்தும் உள்ளது.
கருணாநிதி தலைமையிலான திமுக அரசு ஆட்சியிலிருந்தபோது குருவி படத்தில் நடித்த விஜய்க்கும், தயாரிப்பு நிறுவனமான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்டுக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதனால் அடுத்த தேர்தலில் அதிமுகவுக்கு விஜய் ஆதரவு தெரிவித்தார். பிறகு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தலைவா பட பிரச்னை ஏற்பட்டது. இந்த 2 பிரச்னைகளாலும் அரசியல் கட்சியை தொடங்கும் முடிவை அவர் எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.