news

News March 25, 2024

இயக்குநர் அவதாரமெடுக்கும் சாய் பல்லவி

image

முன்னணி நடிகை சாய் பல்லவி, திரைப்பட இயக்குநராக அவதாரமெடுக்கிறார். சிவகார்த்திகேயன், நாக சைதயன்யா படங்களில் தற்போது அவர் நடித்து வருகிறார். நிதிஷ் கல்யாண் இயக்கவுள்ள ராமாயணம் படத்தில் சீதையாகவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதையடுத்து புதிய படத்தை இயக்க போவதாக சாய் பல்லவி அறிவித்துள்ளார். தயாரிப்பாளர் கிடைத்ததும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News March 25, 2024

திருஷ்டி போக்கும் பல்லி வழிபாடு

image

மனிதர்களோடு உரையாட கந்தர்வர்களை பல்லி உருவத்தில் இறைவன் அனுப்புவதாக கௌரி சாஸ்திரம் கூறுகிறது. அத்தகைய பல்லியை வணங்குவதற்காகவே செளந்தர்ய கயிலாயம் என்று ஞானநூல்கள் போற்றும் நெல்லையை அடுத்துள்ள முன்னீர்பள்ளம் ஸ்ரீபரிபூரண கிருபேஸ்வரர் கோவில் அம்பாள் கருவறையின் மேல் கூரையில் தனி சந்நிதானம் உள்ளது. இந்தப் பல்லியை தரிசித்தால் திருஷ்டிகள், தீவினைகள் போன்றவை முற்றிலும் நீங்கும் என்பது நம்பிக்கை.

News March 25, 2024

ஒரே நேரத்தில் ட்ரெண்டிங் ஆகும் ஹேஷ்டேக்

image

டிவிட்டரில் (எக்ஸ்) ஒரே நேரத்தில் திமுக, அதிமுக, நாதகவினர் மூன்று ஹேஷ்டேக்குகளை ட்ரெண்டிங் செய்கின்றனர். இபிஎஸ்ஸின் #ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம் என்ற வாசகத்தை குறிப்பிட்டு அதிமுகவினரும், அதற்கு அடுத்தபடியாக பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற கேள்விகளுடன் திமுகவினர் #NoVoteToBJP, நாதகவினர் #சீமானே_எங்கள்_சின்னம் என்ற ஹேஷ்டேக்குகளை ட்ரெண்டிங் செய்கின்றனர்.

News March 25, 2024

தினம் ஒரு தொகுதி: இன்று திருநெல்வேலி

image

அதிகளவில் கல்வி நிறுவனங்கள் உள்ள தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என்றழைக்கப்படும் தொகுதி திருநெல்வேலி. ஆலங்குளம், நெல்லை, அம்பை, பாளையங்கோட்டை, நாங்குனேரி, ராதாபுரம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக, திமுக வசம் தலா 2 தொகுதிகள் உள்ளன. இதுவரை இங்கு நடந்த 17 தேர்தல்களில் அதிமுக 7, காங். 6, திமுக 3, சிபிஐ ஒருமுறை வென்றுள்ளன. 2019 தேர்தலில் திமுக 1, 85,457வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது.

News March 25, 2024

அன்று வடிவேலு, இன்று கமல்

image

2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து வடிவேலு பிரசாரத்தில் ஈடுபட்டார். அதேபோல், இந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்யப் போவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 2011 தேர்தலில் வடிவேலு பிரசாரத்தால் திமுகவுக்கு எந்தப் பயனும் இல்லை. ஆனால் இப்போது நடப்பது மக்களவைத் தேர்தல் என்பதால், கமல் பிரசாரம் என்ன தாக்கம் ஏற்படுத்தும் என பொருத்திருந்து பார்ப்போம்.

News March 25, 2024

விற்பனை கட்டணத்தை உயர்த்தும் அமேசான்

image

இணையவழி வர்த்தகத் தளமான அமேசான், தனது விற்பனையாளர்களுக்கான புதிய கட்டண முறைகளை ஏப்ரல் 7ஆம் தேதி முதல் அமல்படுத்தவுள்ளது. அதன்படி, நீண்ட கால கிடங்குக் கட்டணம், திரும்பி அனுப்பப்பட்ட பொருள்களுக்கான பணத்தை அளிப்பதற்கான கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை உயர்த்த உள்ளது. இந்தக் கட்டண உயர்வால் அமேசான் மூலம் விற்கப்படும் பொருள்களின் விலை 5%-11% வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News March 25, 2024

பாஜக வேட்பாளர் திடீர் விலகல்

image

மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் தொகுதி பாஜக எம்.பி சத்யதேவ் பச்செளரி அறிவித்துள்ளார். வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பின்பு தற்போது அவர் இவ்வாறு அறிவித்திருப்பது பாஜகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போட்டியிட மறுத்து பாஜக தலைமைக்கு பச்செளரி கடிதம் அனுப்பியுள்ளார். இதனையடுத்து புதிய வேட்பாளரை தேடுகிறது பாஜக.

News March 25, 2024

PBKS Vs RCB: வெல்லப்போவது யார்?

image

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் PBKS 17 முறையும், RCB 14 முறையும் வென்றுள்ளன. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் PBKS, RCB அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி பெங்களூரு மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? என்று இங்கே குறிப்பிடவும்.

News March 25, 2024

தினம் ஒரு பொன்மொழி!

image

✍விரக்தி என்ற மலையிலிருந்து நம்பிக்கை என்ற கல்லை நாம் வெட்டியெடுக்க முடியும்.✍ஒரு எதிரியை நண்பனாக மாற்றக்கூடிய ஒரே சக்தி அன்பு மட்டுமே. ✍தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதியாகும்.✍நாங்கள் நினைவில் வைத்திருப்பது எங்கள் எதிரிகளின் வார்த்தைகளை அல்ல, எங்கள் நண்பர்களின் மெளனத்தை தான்.✍நாம் வரையறுக்கப்பட்ட ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ளலாம்; ஆனால், நம்பிக்கையை ஒருபோதும் இழந்துவிடக்கூடாது.
– மார்ட்டின் லூதர் கிங்

News March 25, 2024

உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்

image

உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து ரஷ்யா மீண்டும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக அந்நாட்டின் ராணுவ தலைமை நிர்வாகி செர்ஹெய் போப்கோ தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “மேற்கு உக்ரைனை தாக்கும் நோக்கில் கடந்த நான்கு நாள்களில், மூன்றுமுறை ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. போலந்து வான்வழியில் செலுத்தப்பட்ட இந்த ஏவுகணைகளால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை” என்றார்.

error: Content is protected !!