India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாரடைப்பு காரணமாக நகைச்சுவை நடிகர் சேஷு இன்று காலமானார். ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற இவர், 2002இல் ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் அறிமுகமானார். பின், சந்தானத்துடன் இணைந்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். மேலும், கொரோனா மற்றும் வெள்ள பாதிப்பின் போது மக்களுக்கு தேவையான பல்வேறு நிவாரண உதவிகளை செய்து வந்தார். அவரது மறைவு ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மகளிருக்கு வழங்கும் உரிமைத் தொகையை எப்போது வேண்டுமானாலும் திமுக அரசு நிறுத்திவிடுமென அண்ணாமலை பொய் பிரசாரம் செய்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றம்சாட்டியுள்ளார். ஒரத்தநாட்டில் திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அவர், ‘தஞ்சாவூரில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றுத் தரும் திமுக மாவட்டச் செயலாளருக்கு, எனது செலவில் 6 பவுன் சங்கிலி பரிசாக வழங்கப்படும்’ என்றார்.
கடந்தாண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் CSK அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஜடேஜாவுக்கு, ரசிகர்கள் இன்று மரியாதை செலுத்தவுள்ளனர். குஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசி பந்தில் பவுண்டரியை விளாசி சென்னை அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். இந்நிலையில், இன்று நடைபெறும் குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று ஜடேஜாவை கைதட்டி வரவேற்க திட்டமிட்டுள்ளனர்.
லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் சேஷு, உடல் நலக் குறைவால் காலமானார். 10 நாள்களுக்கு முன் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதயத்தில் மூன்று அடைப்புகள் இருந்ததால் சிகிச்சை பலனின்றி சேஷு இன்று காலமானார். கடைசியாக இவர் நடித்த ‘வடக்குப்பட்டி ராமசாமி’ மிகுந்த வரவேற்பை பெற்றது.
மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்குவது குறித்து நாளை காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பம்பரம் சின்னம் கோரி வைகோ தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பம்பரம் சின்னம், அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பொதுச்சின்னம் பட்டியலில் இல்லை. எனவே இதுகுறித்து தேர்தல் அலுவலர் முடிவெடுப்பார் என தேர்தல் ஆணையம் சார்பில் பதிலளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அடுத்தடுத்து சிக்கல் எழுந்துள்ளது. ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் நேற்று ஒருவர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று அதே பெயர் கொண்ட மேலும் 3 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஒரே பெயர் கொண்ட 5 சுயேச்சை வேட்பாளர்கள் தனி சின்னத்தில் போட்டியிடுவதால் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.
விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ எப்போது வெளியாகும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு, ஒரு நல்ல தகவல் இணையத்தில் பரவி வருகிறது. மக்களவைத் தேர்தல் பணிகள் நடந்து வருவதால் எந்த ஒரு பெரிய படங்களும் வெளியாகாமல் இருகின்றன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி, ரமலான் பண்டிகை அன்று படத்தை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
பாஜகவை வீட்டுக்கு அனுப்பும் வரை தூங்கப் போவதில்லை என்பதால் திமுகவிற்கு தூக்கம் போய்விட்டதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சியில் கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துவிட்டதாகவும், தற்போது சிலிண்டர் விலையை பிரதமர் மோடி ₹100 குறைத்துள்ளது தேர்தல் நாடகம் என்றும் விமர்சித்தார். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலையை மேலும் ₹500 உயர்த்தி விடுவார்கள் என்றும் அவர் கூறினார்.
சர்ச்சைக்குரிய தென்சீனக்கடலில் பிலிப்பைன்ஸ் ராணுவக் கப்பல் மீது சீன கடலோர காவல்படை நடத்திய நீர் தாக்குதலுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. அரசு முறைப் பயணமாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிலிப்பைன்ஸ் சென்றுள்ளார். மணிலாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ‘பிலிப்பைன்ஸ் தனது இறையாண்மையை நிலைநிறுத்துவதற்கு இந்தியாவின் முழு ஆதரவு உறுதியாக இருக்கும்’ என்றார்.
ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் வீடியோ பாடல், நாளை காலை 9 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ‘ஜர்கண்டி’ என்ற இந்தப் பாடலுக்கு தமன் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் பாடலில், ராம் சரண் டான்ஸ் இடம்பெற்றிருக்கும் என்பதால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் உள்ளனர். ஷங்கர் இயக்கும் இப்படம், வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது.
Sorry, no posts matched your criteria.