news

News April 12, 2024

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி

image

வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய பங்குச் சந்தைகளில் இன்று கடும் வீழ்ச்சி காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தைகள் நிஃப்டி, 235 புள்ளிகள் குறைந்து 22,520 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. பவர் க்ரிட், ஓஎன்ஜிசி, ஐஓசி ஆகிய பங்குகளின் மதிப்பு அதிகளவு குறைந்தது. அதேநேரம், டாடா மோட்டார்ஸ், நெஸ்ட்லே ஆகிய பங்குகளின் விலை ஏறுமுகத்தில் இருந்தது.

News April 12, 2024

கவிதாவுக்கு ஏப்ரல் 15 வரை சிபிஐ காவல்

image

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை வரும் 15ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பான வழக்கில் கவிதாவை நேற்று கைது செய்த சிபிஐ, 5 நாள்கள் விசாரிக்க அனுமதி கோரியிருந்தது. இதற்கு முன்னதாக, சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அவரை மார்ச் 15ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்திருந்தது.

News April 12, 2024

சென்னையில் விபத்தில் சிக்கிய சின்னத்திரை நடிகை

image

சென்னை போரூர் அருகே சின்னத்திரை நடிகை சைத்ரா ரெட்டி காரில் பயணித்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்ததால், வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றுள்ளன. அப்போது அதிக அளவிலான சிமெண்ட் கலவை அவரது காரில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அவருக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றாலும், கார் மிகவும் சேதமடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

News April 12, 2024

தமிழ்நாட்டில் உதயசூரியன் உதிக்கக் கூடாது

image

தமிழ்நாட்டில் உதயசூரியன் உதிக்கக் கூடாது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஓசூரில் பிரசாரம் செய்த அவர், போதைப் பொருள்கள் மூலம் கிடைக்கும் ஆதாயத்தில் பிழைக்கக் கூடிய எந்தக் குடும்பமும் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. போதைப்பொருள்களை இறக்குமதி செய்து இளைஞர்களின் வாழ்க்கையை பாழாக்க நினைக்கும் முதல்வரின் குடும்பத்தை மீண்டும் ஒரு முறை மக்கள் தேர்ந்தெடுக்கக் கூடாது என்றார்.

News April 12, 2024

தேர்தல் விதிமீறலில் ஈடுபட்ட வீடியோவை வெளியிடுங்கள்

image

திமுக டெபாசிட் இழக்க கூடிய முதல் தொகுதி கோவையாக இருக்குமென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை தொகுதிக்கு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய அவர், “வேட்பாளர் மக்களை சந்திக்கக் கூடாது என எந்த விதியும் கிடையாது. ஆவாரம்பாளையம் பகுதியில் காவல்துறை அனுமதி கொடுத்த இடங்களுக்கு தான் நேற்று சென்றேன். 10 மணிக்கு மேல் நான் மைக்கை எடுத்து பிரசாரம் செய்த வீடியோக்களை வெளியிட வேண்டும்” என்றார்.

News April 12, 2024

அறிகுறியே இல்லாமல் கண் பார்வை போகலாம்

image

கிளாக்கோமா என்பது கண்களை பாதிக்கும் ஒரு வகை நோய். இதன் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறிகளும் தெரிவதில்லை. பரிசோதனையின் மூலமே இந்த நோயை கண்டறிய முடியும். தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால் முழுமையான பார்வை இழப்பு ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வயது வித்தியாசம் இன்றி பாதிக்கும் இந்நோய் படிப்படியாக அதிகரித்து வருகிறது. 70 முதல் 80 வயதுடையவர்களுக்கு அபாயம் அதிகம்.

News April 12, 2024

தமிழகத்தில் கனமழை கொட்டுகிறது

image

கோடை வாட்டி வதைத்துவந்த சூழலில் இரண்டு நாள்களாக கிழக்கு காற்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், விருதுநகர், புதுக்கோட்டை, நாகை, நீலகிரி, மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மழை இல்லாத பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News April 12, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

மாலை 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், நெல்லை, குமரி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

News April 12, 2024

OnThisDay: பிரைன் லாராவின் மிகப்பெரிய சாதனை

image

2004ஆம் ஆண்டு இதே நாளில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் பிரைன் லாரா, டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனையை படைத்தார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், 43 பவுண்டரிகள், 4 சிக்சர்களை விளாசிய அவர், ஒரே இன்னிங்ஸில் 400* ரன்கள் குவித்து அசத்தினார். அதுவரை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்தவொரு வீரரும் 400 ரன்கள் அடித்ததில்லை. இதனால் அணியின் மொத்த ஸ்கோர் கியகியே

News April 12, 2024

இது நடந்தால் எல்லாம் சாத்தியம்

image

ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு இந்தியாவிற்கே விடியல் பிறக்கப்போவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நிதி நெருக்கடியில் புதிய அறிவிப்புகள் சாத்தியமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழ்நாட்டை வளப்படுத்த முடியாத அளவில் இடைஞ்சலாக இருக்கும் மோடி அரசை அகற்றினாலே அனைத்தும் சாத்தியம் என்றார். மேலும், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழ்நாட்டின் விடியல் இன்னும் பிரகாசமாக இருக்கும் என்றார்.

error: Content is protected !!