India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 2 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தமிழகம் முழுதும் பூத் சிலிப் வழங்கும் பணிகள் நிறைவு பெற்றுவிட்டது; விடுபட்டவர்களுக்கு இன்றைக்குள் பூத் சிலிப் வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வீடுவீடாக வந்து பூத் சிலிப் விநியோகம் செய்யப்படுகிறது. ஒருவேளை அதை வாங்க முடியவில்லை என்றால், Voter Helpline என்ற மொபைல் செயலியில் பூத் சிலிப்-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 2.30 மணி நேரத்திற்கு ( காலை 10 மணி வரை) மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையும், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என தெரிவித்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் உள்ள நிலையில், அவரை எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு தொடுத்துள்ளார். அதிமுகவுக்காக சசிகலாவும் தனியே
வழக்கு நடத்தி வருகிறார். அவர்கள் 3 பேர் இடையே அதிமுகவுக்கு இதுவரை போட்டி நிலவி வந்தது. அண்மையில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, டிடிவி வசம் அதிமுக செல்லும் என கூறியிருந்தார். இதனால் அதிமுகவுக்கு இனி 4 முனைப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து போராடி உயிர் நீத்த வீரபாண்டிய கட்டபொம்மனை பிரதமர் மோடி புகழ்ந்து பேசியுள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், வெள்ளையரை எதிர்த்து வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு நாச்சியார், முத்துராமலிங்க தேவர் ஆகியோர் துணிச்சலாக போராடியதாகவும், அதுபோல நமது நாட்டின் எதிரிகளுக்கு எதிராக பாஜக போராடுகிறது என்றும் குறிப்பிட்டார்.
சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கியால் சுட்ட 2 பேரை மும்பை போலீஸ் கைது செய்துள்ளது. பாந்த்ரா பகுதியில் உள்ள சல்மான் கான் வீட்டுக்கு வெளியே அண்மையில் 2 பேர் வந்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் சல்மான் கானின் வீட்டு சுவரில் தோட்டா பாய்ந்து துளை விழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தி, விக்கி குப்தா, சாகர் பால் ஆகியோரை போலீஸ் கைது செய்துள்ளது. அவர்களின் பின்னணி குறித்து தகவல் இல்லை.
ஹைதராபாத்துக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், பெங்களூரு வீரர் தினேஷ் கார்த்திக் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய அவர், 5 Four, 7 Six என விளாசி 23 பந்துகளில் அரைசதம் கடந்தார். கடைசி வரை விடாமல் முயற்சி செய்த அவர், 83(35) ரன்கள் குவித்து 19ஆவது ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவரது அதிரடியான ஆட்டத்தை ஒட்டுமொத்த பார்வையாளர்களும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினர்.
இபிஎஸ் தான் தமிழகத்திலேயே மிகப்பெரிய அரசியல் துரோகி. அவரது சிரிப்பு துரோகத்தின் சிரிப்பு தான் என்று திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆறுகுட்டி விமர்சித்துள்ளார். 50 ஆண்டுகாலம் அதிமுகவில் இருந்த என்னை தூக்கி எறிந்து விட்டார். கடந்த தேர்தலில் கூட சீட் கொடுக்கவில்லை. மரியாதை இல்லாத கட்சியில் இருக்கக்கூடாது என நினைத்து, திமுகவில் இணைந்தேன். இந்த தேர்தலில் திமுக அபார வெற்றி பெறும் என்றார்.
நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் வாக்கு சேகரிக்க உள்ளார். வட சென்னை வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ஜிகேஎம் காலணி பகுதியில் பரப்புரை செய்கிறார். அதனை தொடர்ந்து மாலை 7 மணிக்கு காஞ்சிபுரம் வேட்பாளர் செல்வம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் டி.ஆர்.பாலு ஆகியோரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட உள்ளார்.
ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர்களின் பட்டியலில் 255 போட்டிகளில் 5,121 ரன்களுடன் CSK அணியின் ஆஸ்தான விக்கெட் கீப்பர் தோனி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக உள்ள 4 வீரர்களின் விவரம் பின்வருமாறு: தினேஷ் கார்த்திக் – 4,659 ரன்கள் (248), குயின்டன் டி காக் – 3,071 ரன்கள் (101), ரிஷப் பந்த் – 3,032 ரன்கள் (104), ராபின் உத்தப்பா – 3,011 ரன்கள் (114).
நவகிரகங்களைச் சுற்றி வழிபடும் போது அந்தந்த கிரகத்திற்கும் உரிய எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும். அதாவது முதலில் 9 முறை சுற்றி வணங்கி பின் அந்த கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாக சுற்றிவந்து வழிபட வேண்டும். சூரியன் 10, சுக்கிரன் 6, சந்திரன் 11, சனி 8, செவ்வாய் 9, ராகு 4, புதன் 5, கேது 9, வியாழன் 21 என்ற தனி எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும் என நவகிரக தாந்த்ரீக பரிகாரம் கூறுகிறது.
Sorry, no posts matched your criteria.