India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை அணிக்கு எதிராக அபாரமாக ஆடிவரும் ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார். இன்றைய போட்டியில் 3 சிக்ஸர்களை அடித்தபோது டி20 போட்டிகளில் 500 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக 1,056 சிக்சர்களுடன் கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார். பொல்லார்ட்(860), ரசல்(678), கொலின் முன்ரோ(548) ஆகியோர் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.
உ.பி.,யில் அகிலேஷ் யாதவின் போஸ்டர் மீது சிறுநீர் அபிஷேகம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர். வாரணாசியைச் சேர்ந்த படே லால் செளஹான் என்பவர் போஸ்டர் மீது சிறுநீர் கழித்தப்படி, அவதூறாக பேசி, அதனை தனது பேஸ்புக் நேரலையிலும் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து, சமாஜ்வாதி கட்சியின் புகாரின் பேரில், செளஹானை சோலாப்பூர் போலீசார் கைது செய்தனர்.
MI அணிக்கு எதிரான ஆட்டத்தில் CSK அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 17ஆவது ஐபிஎல் தொடரின் 29ஆவது போட்டியில், டாஸ் வென்ற MI பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த CSK அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 207 ரன்கள் இலக்கை துரத்திய MI அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோல்வியடைந்தது.
ஈரானுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்கா பங்கேற்காதென இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக நேற்றிரவு இஸ்ரேல் நிலைகள் மீது ஈரான் ட்ரோன்கள், ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், இஸ்ரேல் ஆதரவில் இருந்து அமெரிக்கா பின்வாங்கியுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘GOAT’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘விசில் போடு’ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. புத்தாண்டு பரிசாக யுவன் சங்கர் ராஜா இசையில், விஜய் குரலில் வெளியான இந்த பாடல் ரசிகர்களிடம் கலவையான வரவேற்பை பெற்றுள்ளது. ‘விசில் போடு’ பாடல் வெளியாகி 5 மணி நேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்துள்ளதாக இயக்குநர் வெங்கட் பிரபு தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்தியதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், சுதந்திரம் கிடைத்து பல ஆண்டுகள் ஆன நிலையிலும் மே.வங்கம் வளர்ச்சியடையவில்லை. இந்த முறை பாஜக மே.வங்கத்தில் அதிக இடங்களில் வெற்றிபெறும் என்றார்.
மூன்று கிரகங்கள் சேர்ந்து உண்டாகும் திரிகிரஹி யோகத்தால் வெற்றி கைகூடும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்த வகையில் சூரியன், புதன், சுக்கிரன் ஆகியோர் மீன ராசியில் சஞ்சரித்துள்ளதால் மேஷம், சிம்மம், துலாம், விருச்சிக ராசியினருக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப் போகிறது. தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி, இரட்டிப்பு ஊதிய உயர்வு, பங்கு முதலீடுகளில் லாபம் என பல்வேறு பலன்களை மேற்கண்ட ராசியினர் அனுபவிக்க உள்ளனர்.
அரசியலில் பாஜக இருக்கும்வரை இடஒதுக்கீட்டிற்கு ஒன்றும் ஆகாதென மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரின் கைராகார்க்கில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், இடஒதுக்கீட்டை பாஜக ஒழித்துவிடுமென காங்கிரஸ் பொய் பிரசாரம் செய்து வருவதை வழக்கமாக வைத்திருப்பதாகவும், மகாதேவ் செயலியின் கோபத்தை மனதில் வைத்து தேர்தலில் தாமரை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுகொண்டார்.
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடிவரும் மும்பை வீரர் ரோஹித் ஷர்மா அரை சதம் கடந்துள்ளார். 30 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் விளாசி அரை சதத்தை (51*) பதிவு செய்துள்ளார். தற்போது வரை மும்பை அணி 9 ஓவரில் 81/2 ரன்கள் எடுத்துள்ளது. திலக் வர்மா 6* ரன்களுடன் களத்தில் உள்ளார். சிறப்பாக பந்துவீசிய பதீரனா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
மக்களவைத் தேர்தலில் டெல்லி, பஞ்சாப் மற்றும் உ.பி-யில் ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதில், வடகிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட, அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவராக விளங்கிய கன்னையா குமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் 3 தொகுதிகளில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.