news

News April 15, 2024

சாய் பல்லவியின் படங்களை விரும்பி பார்ப்பேன்

image

சாய் பல்லவியின் நடித்த படங்களை விரும்பி பார்ப்பேன் என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மனம்திறந்து கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “நல்ல கதையம்சம் உள்ள படங்களை சாய் பல்லவி தேர்ந்தெடுத்து நடிக்கிறார். நல்ல ஸ்கிரிப்ட், நல்ல கன்டென்ட் வரும் வரை பொறுமையாக காத்திருக்கிறார் இருக்கிறார். அவரை போல் நானும் இப்போது ஸ்கிரிப்ட் செலக்‌ஷனில் அதிக கவனம் செலுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

News April 15, 2024

30 மாதங்களில் இல்லாத உயர்வு

image

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 30 மாதங்களில் இல்லாத அளவுக்கு 64,856.2 கோடி டாலராக உயர்ந்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட குறிப்பில், “ஏப்ரல் 5ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு 298 கோடி டாலர் உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய அதிகபட்சமாக கடந்த 2021 அக்டோபரில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 64,245.3 கோடி டாலரை எட்டியது” எனக் கூறப்பட்டுள்ளது.

News April 15, 2024

தினம் ஒரு திருக்குறள்!

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: கடவுள் வாழ்த்து ▶ குறள் எண்: 2
▶குறள்:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
▶பொருள்:
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கல்வி கற்றிருந்தாலும் அதனால் எந்தப் பயனும் இல்லை.

News April 15, 2024

வெளிநாடுகள் அதிகாரம் செலுத்துவதை ஏற்க முடியாது

image

மாலத்தீவில் இருந்து 2ஆவது கட்டமாக இந்திய படைகள் வெளியேறி உள்ளதாக அந்நாட்டு அதிபர் முகமது முய்சு தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த 9ஆம் தேதி, இரண்டாவது குழுவினரும் மாலத்தீவில் இருந்து வெளியேறி விட்டனர். இன்னும் ஒரேயொரு குழுவினர் தான் உள்ளனர். அவர்களும் மே 10ஆம் தேதிக்குள் வெளியேறிவிடுவர். எங்கள் மீது வெளிநாடுகள் அதிகாரம் செலுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது எனக் கோரினார்.

News April 15, 2024

போதைப்பொருள் விற்றுவரும் பணத்தில் செயல்படும் திமுக

image

மது விற்பனையில் வரும் நிதியில் தமிழக அரசும்; போதைப் பொருள் விற்று வரும் பணத்தில் திமுகவும் செயல்படுவதாக சீமான் காட்டமாக விமர்சித்துள்ளார். பெரம்பலூரில் தேர்தல் பிரசாரம் செய்த அவர், “திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளால் பணம் கொடுக்காமல் ஒரேயொரு வாக்கையாவது பெற முடியுமா? மக்களுக்கு ஏதாவது நல்லது செய்திருந்தால் இப்படி ஓட்டுக்கு பணம் தர வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது” என்றார்.

News April 15, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (ஏப்ரல் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News April 15, 2024

பாலியல் தொழிலாளியாக நடித்த சோபிதா

image

பொன்னியின் செல்வன் படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை சோபிதா துலிபாலா. பாலியல் தொழிலாளியை மையப்படுத்திய ‘மங்கி மேன்’ என்ற இந்திப் படத்தில் அவர் நடித்துள்ளார். அவர்களைப் பற்றி அறிய ரெட் லைட் பகுதி ஒன்றுக்கு நேரடியாக சென்ற அவர், அவர்களின் கஷ்டங்களைக் கேட்டறிந்து நடித்துள்ளாராம். அவர்களின் வலியை திரையில் வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது மனநிறைவை தந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

News April 15, 2024

விவசாயிகளை சுட்டுக்கொன்ற திமுக அரசு

image

1972இல் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு 1 பைசா குறைக்க கோரி போராடிய விவசாயிகளை திமுக அரசு சுட்டுக்கொன்றதை தமிழகம் இன்னும்
மறந்துவிடவில்லை என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் பேசிய அவர், ஸ்டெர்லைட் விவகாரத்தைப் பற்றி பேச திமுகவுக்கு அருகதை இல்லை. கூலி உயர்வுக் கேட்டு போராடிய மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி, 14 பேரை ஆற்றில் தள்ளிக்கொன்றது திமுக அரசு என்றார்.

News April 15, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (ஏப்ரல் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News April 15, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

*ஏழைகளின் சொத்துகளை கொள்ளையடித்த ஊழல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் – மோடி
*தமிழகத்திற்கு ₹10.76 லட்சம் கோடி தந்ததாக பாஜக பொய் கூறுகிறது – ஸ்டாலின்
*ஈரானுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்கா பங்கேற்காது – ஜோ பைடன்
*அதானி குழுமத்தின் 7 நிறுவனங்களில் எல்.ஐ.சி.யின் முதலீடு 59% அதிகரித்துள்ளது.
*MI அணிக்கு எதிரான ஆட்டத்தில் CSK அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

error: Content is protected !!