news

News April 14, 2024

காப்பி அடித்து இனி திரைப்படங்கள் எடுக்க முடியாது

image

காப்பி அடித்து இனி படங்கள் எடுக்க முடியாதென நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து பேசிய அவர், தற்போது ஓடிடி தளங்களில் அனைத்து படங்களையும் மக்கள் பார்த்து விடுகிறார்கள் என்றும், ஆதலால் முன்பு போல பிற படங்களை காப்பி அடித்து படங்கள் எடுக்க முடியாதென்றும் கூறினார். இதையும் மீறி காப்பி அடித்து படம் எடுத்தால், மக்கள் கண்டுபிடித்து விடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

News April 14, 2024

என்ன நடக்கப்போகிறதோ..?

image

இஸ்ரேல் – காஸா போர், பணவீக்கம், பொருளாதார மந்த நிலை என அச்சத்தில் இருந்த இந்திய பங்குச்சந்தை, தற்போது வேகமாக உயர்ந்து தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் – ஈரான் இடையே போர் வெடித்துள்ளது முதலீட்டாளர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. இன்று விடுமுறை என்பதால், நாளை சந்தை தொடங்கும்போது என்ன நடக்குமோ? என்ற அச்சத்தில் முதலீட்டளர்கள் இருக்கின்றனர்.

News April 14, 2024

புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது ராஜஸ்தான்

image

பஞ்சாப் அணிக்கு எதிரான வெற்றியைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. அந்த அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5இல் வெற்றி பெற்றுள்ளது. KKR 2வது, CSK 3வது, LSG 4வது இடங்களில் உள்ளன. SRH, GT தலா 6 புள்ளிகளுடன் 5&6வது இடங்களிலும் உள்ளன. MI, DC&PBKS அணிகள் தலா 4 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. RCB ஒரு வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

News April 14, 2024

சித்தாந்தம் இல்லாத கூட்டணி I.N.D.I.A கூட்டணி

image

நாகையில் பரப்புரை மேற்கொண்ட சீமான், கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம் இல்லாத கூட்டணி I.N.D.I.A கூட்டணிதான் என்று விமர்சித்துள்ளார். கேரளாவுக்குள் எதிர்க்கட்சிகள் ( காங்., கம்யூ.), கேரளாவுக்கு வெளியே கூட்டணி, இதுதான் I.N.D.I.A கூட்டணியா என்றும் காவிரியில் தண்ணீர் தரமுடியாது என்று சொன்ன கட்சியுடன் திமுக கூட்டணி வைக்கிறது; அப்போ விவசாயிகள் முக்கியம் இல்லையா எனவும் கேள்வி எழுப்பினார்.

News April 14, 2024

BREAKING: தென் தமிழகத்தில் இன்று மழை

image

தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 17ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 18ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும், வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

News April 14, 2024

ஈரானிலுள்ள இந்தியர்களுக்கு மீண்டும் எச்சரிக்கை

image

இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றத்தை சுட்டிக்காட்டி, ஈரானில் வாழும் இந்தியர்களுக்கு அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதரகம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், அமைதி காக்கும்படியும், பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றும்படியும் கேட்டுக் கொண்டுள்ளது. 2 அவசர கால எண்களை அறிவித்த இந்தியத் தூதரகம், ஈரானிலுள்ள இந்தியர்கள் அனைவரும் தூதரகத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்யும்படியும் கேட்டுக் கொண்டுள்ளது.

News April 14, 2024

I.N.D.I.A. கூட்டணிக்குள் மோதல் (1)

image

மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள், I.N.D.I.A. என்ற பெயரில் கூட்டணி அமைத்து ஒரே அணியாக களமிறங்கியுள்ளன. ஆனால் இக்கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், காங்கிரஸ் ஆகிய கட்சிகள், மேற்கு வங்கம், கேரளா ஆகிய 2 மாநிலங்களில் எதிரெதிராக போட்டியிடுகின்றன.

News April 14, 2024

I.N.D.I.A. கூட்டணிக்குள் மோதல் (2)

image

மேற்கு வங்க மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. அங்கு முன்பு ஆட்சியிலிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி, காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதனால் தேசிய அரசியலில் இணைந்து செயல்படும் அக்கட்சிகள், மேற்குவங்கத்தில் 2 பிரிவாக பிரிந்து ஒன்றை ஒன்று எதிர்த்து போட்டியிடும் நிலை காணப்படுகிறது.

News April 14, 2024

I.N.D.I.A. கூட்டணிக்குள் மோதல் (3)

image

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி ஆட்சியில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி, எதிரணியாக உள்ளது. இதனால் பிரசாரத்தில் 2 அணிகளும் மாறி மாறி குற்றம் சுமத்துகின்றன. குறிப்பாக பினராயி விஜயன், காங்கிரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த முரண்பாடான அரசியலை ஏற்கெனவே கண்டதால், காங்கிரசை எதிர்த்து மக்கள் வாக்களித்திருக்கின்றனர். அது இம்முறை எதிரொலிக்குமா, மாறுமா என்பது தெரியவில்லை.

News April 14, 2024

உயிர்த்தெழ தயாரானார் சேனாதிபதி

image

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இந்நிலையில், தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள படக்குழு, புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. சமரசம் இல்லாத சேனாதிபதி உயிர்த்தெழ தயாராகிவிட்டார். ஜூன் மாதம் திரையங்குகளில் காண தாயாராகுங்கள் எனக் குறிப்பிட்டு வெளியான அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

error: Content is protected !!