news

News April 14, 2024

திரையில் ஜொலித்தார், அரசியலில் ஜொலிப்பாரா?

image

கிழக்கே போகும் ரயில் மூலம் திரைத்துறையில் அறிமுகமான ராதிகா சரத்குமார், சித்தி உள்ளிட்ட தொடர்கள் மூலம் சின்னத் திரையிலும் நுழைந்து இல்லத் தரசிகளை கட்டிப் போட்டார். அவர் தற்போது விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். திரைத் துறை பிரபலங்கள் அரசியலில் சாதிக்கவும் செய்துள்ளனர், தோல்வியும் அடைந்துள்ளனர். இதில் எந்த வரிசையில் ராதிகா சேர்வார்? என்பதை அத்தொகுதி மக்களே அறிவர்.

News April 14, 2024

விஜய பிரபாகருக்கு கை கொடுக்குமா அனுதாப அலை ?

image

விஜயகாந்தின் சொந்த ஊர், விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டை வட்டம் இராமானுஜபுரம் ஆகும். ஆதலால் 2024 மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரை துணிந்து வேட்பாளராக தேமுதிக நிறுத்தியுள்ளது. விஜயகாந்த் மறைவால் நிலவும் அனுதாப அலை அவரை வெற்றி பெறச் செய்யும் என தேமுதிக நம்புகிறது. ஆனால் மற்றொரு பக்கம், விஜய பிரபாகர் இன்னும் பக்குவமில்லாமல் பேசுகிறார் என்ற கருத்தும் நிலவுகிறது.

News April 14, 2024

21 ஆண்டுகளுக்கு பிறகு… என்ன நண்பா ரெடியா?

image

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘GOAT’ படத்தின் முதல் பாடலான “விசில் போடு…” இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ‘புதிய கீதை’ படத்திற்கு பிறகு விஜய், யுவன் சங்கர் ராஜாவின் கூட்டணியில் இப்படத்தின் பாடல்கள் தயாராகியுள்ளன. 21 ஆண்டுகளுக்கு பிறகு சேர்ந்துள்ள இந்த கூட்டணியின் வெற்றியை கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்பாடலை விஜய் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 14, 2024

லோகேஷின் அடுத்தப்படம் இதுதான்

image

தனித்துவமான ஸ்கிரீன்பிளே மூலம் தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து பல படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். ‘ஃபைட் கிளப்’ படத்தை அவரது ஜி ஸ்குவாட் நிறுவனம் வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், சுல்தான் படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘Benz’ படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 14, 2024

ஆபரணத் தங்கம் ரூ.55,000ஐ நெருங்கியது

image

ஆபரணத் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்வு ரூ.55,000ஐ நெருங்கியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.54,840க்கும், கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.6,855க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராமுக்கு ரூ.89க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாள்களில் மட்டும் தங்கத்தின் விலை ரூ.2,760 உயர்ந்துள்ளது.

News April 14, 2024

பாஜக தேர்தல் வாக்குறுதியில் ராமர்…

image

அயோத்தியில் குழந்தை ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றதை நினைவுகூரும் வகையில் உலகம் முழுவதும் ராமாயண உற்சவ விழாவை கொண்டாட திட்டமிட்டுள்ளதாக பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. ராமாயணம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் கொண்டாடப்படுகிறது. அதனால், ராமரின் வரலாறை உலகம் முழுவதும் ஆவணப்படுத்துவோம் என பாஜக வாக்குறுதியாகத் தெரிவித்துள்ளது.

News April 14, 2024

சங்கல்ப் பத்திரம் இல்லை, சங்கட பத்திரம்

image

சங்கல்ப் பத்திரம் என்பதற்குப் பதில், சங்கட பத்திரம் என்று தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டிருக்க வேண்டுமென காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இளைஞர்கள் வேலையில்லாமல் தவிப்பதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதோடு, மக்களிடையே பீதி நிலவுகிறது என்றும், இந்த சூழலை ஏற்படுத்தியற்காக மன்னிப்பு பத்திரம், (அ) சங்கடப் பத்திரம் என்ற பெயரில் அறிக்கையை வெளியிட்டிருக்கலாம் என அக்கட்சி கூறியுள்ளது.

News April 14, 2024

இந்தியாவில் 6ஜி இணைய சேவை

image

தொலைத்தொடர்பு துறை தொடர்பாக பாஜக பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளது. அதன்படி, இந்தியாவில் 5ஜி சேவையைத் தொடர்ந்து, 6ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும். 2 லட்சம் கிராமங்களுக்கு பாரத்நெட் என்ற அதிவேக Broadband இணைய சேவை வழங்கப்படும். அரசு அலுவலகங்களை டிஜிட்டல் மயமாக்குவோம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல இளைஞர்களை கவரும் வகையிலான பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

News April 14, 2024

ஏப்.17 காலை 10 டூ 19 இரவு 12 மணி வரை TASMAC இயங்காது

image

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக டாஸ்மாக் கடைகள் இன்னும் 2 நாள் மட்டுமே இயங்கும். அதனைத்தொடர்ந்து ஏப்.17ஆம் தேதி காலை 10 முதல் 19ஆம் தேதி இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும். விடுமுறை நாட்களில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சிலர் முன்கூட்டிய அதிகளவில் மது பாட்டில்களை வாங்கி பதுக்குவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

News April 14, 2024

மோடியின் கேரண்டியை நம்பாதீர்கள்..!

image

பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். பாஜக தேர்தல் அறிக்கை குறித்து பேசிய அவர், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம், குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்வோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த மோடி வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. 10 ஆண்டுகளாக மோடி அரசு ஏழைகளுக்கு எதையும் செய்யாதபோது, தற்போதைய வாக்குறுதிகளை நம்புவது சரியல்ல என்றார்.

error: Content is protected !!