news

News April 14, 2024

IPL: கொல்கத்தா அணி பவுலிங்

image

கொல்கத்தாவின் ஈடன் காடன் மைதானத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்றுள்ள KKR அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் LSG அணி பேட்டிங்கை தொடங்க உள்ளது. புள்ளிப் பட்டியலில் KKR 2ஆவது இடத்திலும், LSG 4ஆவது இடத்திலும் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?

News April 14, 2024

பகுதி நேர வேலை பார்ப்போர் எப்படி தனிநபர் கடன் பெறுவது?

image

பகுதி நேர வேலை பார்ப்போர், பின்வரும் 2 ஆலோசனைகளை கடைபிடித்தால், முழுநேர வேலை பார்ப்போர் போல தனிநபர் கடனை எளிதில் பெற முடியும். *கிரெட்டிட் ஸ்கோர் 750 புள்ளிகளுக்கும் அதிகமாக இருக்கும்படி பார்த்து கொண்டால், தனிநபர் கடன் வழங்க வங்கிகள், நிதி நிறுவனங்கள் முன்வரும் *வருமானம் ஈட்டக்கூடிய குடும்ப உறுப்பினர் ஒருவரை கூட்டு சேர்த்து விண்ணப்பித்தால் தனிநபர் கடன் கிடைக்கும்.

News April 14, 2024

‘தலைவர் 171’இல் ஸ்ருதிஹாசன்?

image

ரஜினி, லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாக உள்ள ‘தலைவர் 171’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி வைரலானது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் டீசர் ஏப்.22ல் வெளியாகும் என படக்குழு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதனிடையே, படத்தில் மைக் மோகன் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், ஸ்ருதிஹாசனும் ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News April 14, 2024

நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்?

image

தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் மேலாளர் சதீஷிடம் இருந்து ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க பாஜக நிர்வாகி கோவர்த்தனுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்நிலையில், நயினார் நாகேந்திரனுக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

News April 14, 2024

பெட்ரோல், டீசல் குறித்து பாஜக சொல்வதென்ன?

image

எரிப்பொருள் உற்பத்தியில் இந்தியா 2047ஆம் ஆண்டுக்குள் தன்னிறைவு அடையும் என பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியை அதிகரிப்போம். எத்தனால் மூலம் எரிப்பொருள்களின் செயல்திறனை அதிகரிப்போம். சார்ஜிங் நிலையங்கள் அமைப்போம் என பாஜக தெரிவித்துள்ளது. இந்தியா, கச்சா எண்ணெய் தேவையில் 85%-ஐ இறக்குமதி செய்யும்போது எரிபொருள் தன்னிறைவு சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

News April 14, 2024

இஸ்ரேல் – ஈரான் போர்! இந்தியாவின் நிலைப்பாடு?

image

இஸ்ரேல், ஈரான் இடையேயான போர் கவலை அளிப்பதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் மோதலை நிறுத்தி, அமைதி நிலைக்குத் திரும்ப வேண்டும் என இந்தியா விரும்புகிறது. இஸ்ரேல் – காஸா போரிலும் இதே நிலைப்பாடு கொண்டிருக்கும் இந்தியா, இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா.வில் வாக்களிக்க மறுத்து நடுநிலை காத்தது குறிப்பிடத்தக்கது. நடுநிலை என்பதே இந்தியாவின் தற்போதைய நிலைப்பாடாக இருக்கிறது.

News April 14, 2024

இந்திய முறை திருமணத்திற்கு மோடியின் கேரண்டி

image

இந்திய கலாசாரத்தை பாதுகாக்க பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் இடங்களை தேர்ந்தெடுத்து திருமணம் நடத்துவதற்கான இடங்களாக மேம்படுத்தப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. திருமணங்களை வெளிநாடுகளில் நடத்துவதை விட்டுவிட்டு இந்தியர்கள் தங்கள் திருமணங்களை இந்தியாவிலேயே நடத்த வேண்டுமென கருத்து தெரிவித்துள்ளார்.

News April 14, 2024

எங்கள் காதுகள் பாவமில்லையா?

image

எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? எங்கள் காதுகள் பாவமில்லையா? என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ₹10.76 லட்சம் கோடியை அள்ளிக்கொடுத்ததாம் மத்திய பாஜக அரசு. மதுரை எய்ம்ஸ்க்கு 1,960 கோடி, சாகர் மாலா திட்டத்திற்கு 2 லட்சம் கோடி என தமிழக மக்கள் காதில் பூச்சுற்ற நினைக்கிறது பாஜக அரசு என்று சரமாரியாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

News April 14, 2024

காப்பி அடித்து இனி திரைப்படங்கள் எடுக்க முடியாது

image

காப்பி அடித்து இனி படங்கள் எடுக்க முடியாதென நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து பேசிய அவர், தற்போது ஓடிடி தளங்களில் அனைத்து படங்களையும் மக்கள் பார்த்து விடுகிறார்கள் என்றும், ஆதலால் முன்பு போல பிற படங்களை காப்பி அடித்து படங்கள் எடுக்க முடியாதென்றும் கூறினார். இதையும் மீறி காப்பி அடித்து படம் எடுத்தால், மக்கள் கண்டுபிடித்து விடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

News April 14, 2024

என்ன நடக்கப்போகிறதோ..?

image

இஸ்ரேல் – காஸா போர், பணவீக்கம், பொருளாதார மந்த நிலை என அச்சத்தில் இருந்த இந்திய பங்குச்சந்தை, தற்போது வேகமாக உயர்ந்து தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் – ஈரான் இடையே போர் வெடித்துள்ளது முதலீட்டாளர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. இன்று விடுமுறை என்பதால், நாளை சந்தை தொடங்கும்போது என்ன நடக்குமோ? என்ற அச்சத்தில் முதலீட்டளர்கள் இருக்கின்றனர்.

error: Content is protected !!