India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காங்கிரஸ் இந்த எம்.பி தேர்தலில் 300க்கும் குறைவான இடங்களில் போட்டியிட உள்ளது. இதுவரை 27 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 278 வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது. இன்னும் 20க்கும் குறைவான இடங்களே அறிவிக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் 298 இடங்களில் அக்கட்சி போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. முன்னதாக 2019- 421 இடங்கள், 2014-464 இடங்கள், 2009-440 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட்டது.
புயல், வெள்ளம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களின்போது, செல்போன் கோபுரங்கள் பாதிக்கப்படுவதால் தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்படுகின்றன. இதனால், மீட்புப் பணிகளில் சிரமங்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையை சரிசெய்ய செயற்கைக்கோள்கள் வழியாக அழைப்பை மேற்கொள்ளும் தொழில்நுட்பத்தை சீனாவைச் சேர்ந்த ஹூவாய் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது படிப்படியாக பொதுப் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 98 கிலோமீட்டர் ஆழத்தில் கினியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5ஆக பதிவாகியுள்ளது. இதனால், கட்டடங்கள் குலுங்கியதால், மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளில் இருந்து வெளியேறி சாலையில் தஞ்சமடைந்துள்ளனர். இதன் பாதிப்பு குறித்தும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதா என்பது குறித்தும் உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்ததை சுட்டிக்காட்டி, அக்கட்சியை ஓபிஎஸ் உரிமை கொண்டாடுகிறார். இந்நிலையில், தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, டிடிவி தினகரனிடம் அதிமுக செல்லும் என பேசினார். ஓபிஎஸ்.க்கு ஆதரவாக எதுவும் கூறவில்லை. இதை சுட்டிக்காட்டி, அதிமுக விவகாரத்தில் டிடிவி தினகரனை ஆதரிக்கவும், ஓபிஎஸ்சுக்கு குட்பை சொல்லவும் பாஜக முடிவு எடுத்து விட்டதாக மக்கள் பேசி வருகின்றனர்.
ஐபிஎல் வரலாற்றில் சேசிங்கில் இதுவரை 3 வீரர்களின் சதம் அந்த அணிகளின் வெற்றிக்கு உதவாமல் போய் உள்ளது. 2021இல் பஞ்சாப்புக்கு எதிராக சஞ்சு சாம்சன் 119 ரன்கள் அடித்தும் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தது. அதைப்போல, நேற்றைய சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித்தின் சதமும் 105 வீணானது. மேலும், 2010இல் மும்பைக்கு எதிராக யூசுப் பதான் 100 ரன்கள் அடித்தும் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
2ஜி குறித்து பேசும் அண்ணாமலை 5ஜி ஊழல் குறித்து பேசத் தயாரா என ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார். நீலகிரியில் பேசிய அவர், அண்ணாமலை ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி. அவர் அறியாமையில் பேசுகிறார் என சொல்லக்கூடாது. ஆனால், அறிவிலித்தனமாக பேசுகிறார். 2ஜி தீர்ப்பை படிக்க வேண்டும். அந்த வழக்கில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது. அதனை எதிர்கொள்ள நான் தயார். அதிமுகவினர் 2ஜி விவகாரத்தில் எதுவும் தெரியாமல் பேசுகின்றனர் என்றார்.
தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம், 1467இல் அரிகேசரி பராக்கிரம பாண்டிய மன்னரால் கட்டப்பட்டதாக கல்வொட்டு ஒன்று கூறுகிறது. கனவில் வந்து ஆலயம் கட்டும்படி அவரிடம் முருக பெருமான் கூறியதால், அங்கு கோயிலை அவர் கட்டியதாகவும், இதற்காக காசியிலிருந்து லிங்கத்தை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்ததாகவும் கூறப்படுகிறது. காசி ஆலயத்தில் வழிபட்டதற்கு இணையான பலன், இங்கு வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் காயத்தால் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளார். ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியபோது, ஷிகர் தவானுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். காயத்திலிருந்து குணமாக 7 நாள்கள் வரை ஓய்வு எடுக்க வேண்டியிருப்பதால், மும்பை, குஜராத் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் எனக் கூறப்படுகிறது.
தமாகாவின் முன்னாள் எம்எல்ஏ மணிவர்மா (தண்டராம்பட்டு), அக்கட்சியைச் சேர்ந்த 2500 பேர்களுடன் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். தேர்தலுக்கு இன்னும் 4 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில், பாஜக உடனான கூட்டணியில் அவர்களுக்கு உடன்பாடு இல்லை. இதனால், அக்கட்சியில் இருந்து விலகி EX எம்எல்ஏ தனது ஆதாரவாளர்களுடன் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளனர். இது பாஜக கூட்டணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் 19ம் தேதி நடைபெறும் நிலையில், தேர்தல் பிரசாரம் 17ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, பிரதமர் மோடி இன்று 8வது முறையாக தமிழகம் வருகிறார். திருவனந்தபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஹெலிகாப்டர் மூலம் மாலை 4.10 மணிக்கு நெல்லை அம்பாசமுத்திரம் வருகிறார். அங்கு, நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு அவர் வாக்கு சேகரிக்கிறார்.
Sorry, no posts matched your criteria.