news

News April 15, 2024

மாணவர்களுடன் உரையாடுகிறார் ராகுல்

image

நீலகிரியில் தனியார் கல்லூரி மாணவர்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று கலந்துரையாட உள்ளார். தான் போட்டியிடும் வயநாடு தொகுதியில் இன்று அவர் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனிடையே, கேரள எல்லையில் உள்ள தாளூரில் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். தொடர்ந்து, தேவாலயம் ஒன்றில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகளையும் அவர் சந்திக்க உள்ளார்.

News April 15, 2024

ED கைதுக்கு எதிரான கெஜ்ரிவால் மனு விசாரணை

image

ED கைதுக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் கெஜ்ரிவால், தனது கைது சட்ட விரோதம் எனக்கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, ஏப்ரல் 9இல் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவரின் மேல்முறையீட்டு மனுவை, உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது. இந்த வழக்கில் மார்ச் 21இல் அவர் கைது செய்யப்பட்டார்.

News April 15, 2024

விமானக் கட்டணம் பலமடங்கு உயர்வு

image

சென்னையிலிருந்து முக்கிய நகரங்களுக்கான விமானக் கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளது. கோடை விடுமுறையில் பொழுது போக்குவதற்கு பலர் வெளியூர்களுக்கு செல்வதாலும், விஸ்தாரா விமான சேவை பாதிக்கப்பட்டிருப்பதாலும், டிக்கெட் விலை அதிகரித்துள்ளது. டெல்லிக்கான கட்டணம் ₹8,000 வரை அதிகரித்துள்ளது. ஸ்ரீநகர், ஜெய்ப்பூருக்கான கட்டணம் ₹10,000-ஐ தாண்டிவிட்டது. மதுரைக்கான கட்டணம் ₹5,000- ₹8,000ஆக உயர்ந்துள்ளது.

News April 15, 2024

ஈரான்: அமெரிக்காவுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை

image

ஈரான்-இஸ்ரேல் மோதலில் அமெரிக்கா தலையிட்டால், ஈரானுக்கு ஆதரவாக போரில் ரஷ்யா களமிறங்கும் என்று புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிரியாவில் உள்ள ஈரானிய தூதரகம் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிடக்கூடாது என்றும், அப்படி தலையிட்டால், ஈரானுக்கு ஆதரவாக போரில் ரஷ்யா குதிக்கும் என்றும் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News April 15, 2024

ரோஹித்தின் சதம் சுயநலமானது

image

சென்னை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சதம் விளாசிய ரோஹித் சர்மா, அணியின் வெற்றிக்கு முயற்சிக்கவில்லை என்று மும்பை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இதையொட்டி, ட்விட்டரில் #Selfish என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. அதேசமயம், ரோஹித் தனித்து நின்றாலும், மற்ற வீரர்களிடம் இருந்து அவருக்கு எந்த ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை என ரோஹித் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

News April 15, 2024

சசிகுமார் நடிக்கும் புதிய படம்

image

கழுகு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் நடிகர் சசிகுமார் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ‘ஃப்ரீடம் ஆகஸ்ட் -14’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கதாநாயகியாக லிஜோமோல் ஜோஸ் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் உருவாக உள்ளது. ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

News April 15, 2024

4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

image

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு வானிலை மையம் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. அடுத்த 2 மணி நேரத்திற்கு ( 10 மணி) சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, குமரியில் மழை பெய்யும். மழை காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கலாம் என எச்சரித்துள்ளது. கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் பூமி குளிர்ச்சியடைந்து, வெப்பம் தணிந்துள்ளது. ஆனால், இனி நிலைமை மாறி மீண்டும் வெப்பம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News April 15, 2024

ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்கள்

image

அசாமில் ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்கள் உள்ளனர். சோனிட்புர் மக்களவைத் தொகுதியில் வசிக்கும் ரோன் பகதூருக்கு 5 மனைவிகள், 12 மகன்கள், 9 மகள்கள், 56 பேரன்கள், 12 சகோதரர்கள், 9 சகோதரிகள் உள்ளனர். அவர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் சேர்த்து, 1,200 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 350 பேர் இந்த தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர். அதே தொகுதியில் மற்றொரு குடும்பத்துக்கு 300 வாக்குகள் உள்ளன.

News April 15, 2024

பாண்டியாவின் கேப்டன்சியை விமர்சித்த கவாஸ்கர்

image

மும்பை கேப்டன் பாண்டியாவின் தலைமைப் பண்பு குறித்து கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். சிஎஸ்கேவுக்கு எதிராக பாண்டியாவின் பந்துவீச்சும், கேப்டன்சியும் அனுபவ வீரரை போல் இல்லை. தோல்விக்கு இதுவும் ஒரு காரணம் என பாண்டியாவை அவர் விமர்சித்துள்ளார். முன்னதாக சிஎஸ்கேவுக்கு எதிராக 3 ஓவர் பந்துவீசிய பாண்டியா, 43 ரன்களை விட்டுக்கொடுத்தார். குறிப்பாக அவரின் 20ஆவது ஓவரில், தோனி 3 சிக்சர்களை பறக்க விட்டார்.

News April 15, 2024

என்ன செய்ய போகிறார் இபிஎஸ்?

image

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அமமுக போட்டியிடுகிறது. இந்நிலையில் தேனி பிரசாரக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு டிடிவி தினகரன் வசம் அதிமுக செல்லும் என பேசினார். தற்போது அதிமுக பொதுச் செயலாளராக இருக்கும் இபிஎஸ் வசமே, அக்கட்சி அலுவலகங்கள் உள்ளன. அண்ணாமலை இவ்வாறு கூறியிருப்பதற்கு இபிஎஸ் என்ன பதிலடி கொடுப்பார்? என அறிய தமிழக மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

error: Content is protected !!