India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கேரளாவின் திருச்சூரில் பிரதமர் மோடியும், வயநாட்டில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் ஒரே நேரத்தில் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். திருச்சூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் மோடி ஆதரவு திரட்டுகிறார். வயநாடு தொகுதியில் ராகுல் ரோடு ஷோ சென்று வாக்கு சேகரிக்கிறார். தமிழகத்தில் இன்று காலை ராகுல் பரப்புரையை முடித்து சென்ற நிலையில், மோடி கேரளாவில் பிரசாரத்தை முடித்துவிட்டு மாலையில் தமிழகம் வருகிறார்.
ஹர்திக் பாண்டியா களத்தில் அதிகம் நடிப்பதாக கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். மும்பை அணி ரசிகர்களின் கோபம் பாண்டியாவை அதிகம் பாதித்துள்ளது. அதனால் தான் டாஸ் போடும் போது கூட அதிகம் சிரித்து மகிழ்ச்சியாக இருப்பதை போல் காட்டிக்கொள்கிறார். இந்த நிலையில் நானும் சில காலம் இருந்துள்ளேன். கிரிக்கெட்டில் சரியான முடிவுகளை எடுக்காத போது இத்தகைய சிக்கல் எழுவது சாதாரணமான ஒன்றுதான் என்றும் அவர் கூறியுள்ளார்.
மோடி எத்தனை முறை தமிழகம் வந்தாலும் பாஜக வெற்றி பெறாது என வைகோ தெரிவித்துள்ளார். வெள்ளம் வந்த போது எட்டிப் பார்க்காத பிரதமர் தேர்தல் வந்ததும் 9 முறை தமிழகம் வந்துள்ளதாக விமர்சித்துள்ள அவர், எத்தனை முறை யார் வந்தாலும் தேர்தல் களத்தில் பாஜகவுக்கு தோல்வி மட்டுமே கிடைக்கும் என்றார். முன்னதாக மறைந்த மதிமுக எம்.பி கணேச மூர்த்தி இல்லத்திற்கு சென்ற வைகோ அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலையொட்டி வரலாறு காணாத அளவில் நாடு முழுவதும் ₹4,650 கோடிக்கு நகை, பணம், போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் நாடு முழுவதுமே ₹3,745 கோடி அளவுக்கு நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்தமுறை முதற்கட்ட தேர்தல் தொடங்குவதற்கு முன்பே, முன்பை விட கூடுதலாக ₹905 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் ₹450 கோடி.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழகத்தில் தேர்தல் பரப்புரை உச்சகட்டத்தில் உள்ள நிலையில், ஆளுநரின் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மாதந்தோறும் டெல்லி சென்று தமிழக அரசியல் நிலவரம் குறித்து உள்துறை அமைச்சகத்திடம் அவர் தகவல்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வரும் 17ஆம் தேதி மாலை அவர் சென்னை திரும்ப உள்ளார்.
குறுகிய அரசியல் நலனுக்காக தவறான தகவல்களை வெளியிட்டு நீதித்துறையை சிறுமைப்படுத்தும் முயற்சியில் சில சக்திகள் ஈடுபட்டிருப்பதாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்டுக்கு 21 முன்னாள் நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளனர். அண்மையில் இதே குற்றச்சாட்டுடன் 600 வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியிருந்தனர். இதையடுத்து 4 உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகள், 17 உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
சிஎஸ்கேக்கு எதிராக சதம் அடித்தும் ரோஹித் கொண்டாடாமல் இருந்ததாக ஆஸி. முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ புகழ்ந்துள்ளார். 63 பந்துகளில் 105 ரன்களுடன் ரோஹித் அவுட் ஆகாமல் இருந்தார். இதுகுறித்து பேட்டியளித்த பிரட் லீ, முதல் பந்தில் இருந்தே வெற்றி என்ற லட்சியத்துடன் ரோஹித் விளையாடியதாகவும், இதனால் சதம் அடித்தபிறகு பேட்டை உயர்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தவில்லை என்றும் பாராட்டினார்.
நாட்டின் பன்முகத்தன்மையை பிரதமர் மோடி புரிந்துகொள்ளவில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நீலகிரியில் பரப்புரை மேற்கொண்ட அவர், ஜனநாயகத்தை காக்க பெரும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். மேலும், ஒரு நாடு, ஒரு தலைவர் என மோடி தவறாக வழிநடத்தப் பார்ப்பதாக கூறிய அவர், பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ஏழை மக்களுக்கு எந்த திட்டமும் இல்லை என்றும் சாடினார்.
நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். பாஜக நிர்வாகி குஷ்புவின் கணவரான இவர், 2021 சட்டசபைத் தேர்தலில் மனைவிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். இதனிடையே, குஷ்பு தனது உடல்நிலையை காரணம் காட்டி தேர்தல் பிரசாரத்தில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில், எந்த கட்சியும் சாராத சுந்தர்.சி தற்போது பாஜகவுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
I.N.D.I.A அணி தலைவர்கள் இல்லாத கூட்டணி என அண்ணாமலை விமர்சித்துள்ளார். பல்லடத்தில் அவர் தனக்கு ஆதரவு திரட்டி பரப்புரையில் ஈடுபட்டார்.
10 செம்மறி ஆடுகள் ஒன்றாக இருந்தால் கூட தனக்கான தலைவனை தேர்ந்தெடுக்கும். ஆனால், I.N.D.I.A கூட்டணியால் அதுகூட முடியவில்லை என்று விமர்சித்த அவர், திமுக போல் தொகுதிக்கு ஒளித்து வர மாட்டேன், வாக்குறுதிகளை நிறைவேற்றி கெத்தாக வருவேன் என்றும் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.