news

News April 15, 2024

குறுக்கு வழியில் ஆட்சிக்கு வருவதுதான் பாஜக வேலை

image

தேர்தலை சந்திக்காமல் குறுக்கு வழியில் ஆட்சிக்கு வருவதுதான் பாஜகவின் வேலை என காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். புதுச்சேரி பரப்புரையில் பேசிய அவர், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதில் காங்., உறுதியாக உள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுப்போம் என பாஜக தேர்தல் அறிக்கையில் கூட கூறவில்லை. சர்வாதிகார பாஜக அரசை தூக்கி எறியவே இந்த தேர்தல் நடைபெறுகிறது எனக் கூறியுள்ளார்.

News April 15, 2024

விஜய் மீது போலீஸில் புகார்

image

நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி டிஜிபி அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார். அவர் நடித்துவரும் G.O.A.T படத்தின் முதல் பாடல் நேற்று வெளியானது. இந்தப் பாடல், இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள், ரவுடியிசத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, விஜய் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News April 15, 2024

துறவிகளாக மாற ₹200 கோடி சொத்துகளை துறந்த தம்பதி

image

குஜராத்தை சேர்ந்த தம்பதி, துறவிகளாக மாற ₹200 கோடி சொத்துகளை தானமாக அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்டுமான நிறுவன அதிபரான பாவேஸ் பண்டாரியும், அவரது மனைவியும் பிப்ரவரி மாதம் 4 கி.மீ. தூரம் ஊர்வலமாக சென்று, சொத்துகளை தானம் அளித்தனர். இந்த மாத இறுதியில் 2 பேரும் ஜைன துறவறம் காணவுள்ளனர். 2022இல் மகளும், மகனும் சிறுவயதில் துறவறம் பூண்டதை பின்பற்றி, இவர்களும் துறவறம் காணவுள்ளனர்.

News April 15, 2024

ஈரானிடம் அணுகுண்டுகள்?

image

ஏவுகணை, ட்ரோன் தாக்குதலுக்கு பிறகும் இஸ்ரேல் அமைதி காப்பதன் பின்னணியில், ஈரானிடம் அணுகுண்டுகள் இருக்கலாம் என்று சந்தேகிப்பதே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் முதல்முறையாக நேரடியாக தாக்குதல் நடத்தியும், அதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கவில்லை. இதை வைத்து ஈரானிடம் அணுகுண்டுகள் இருக்கலாம் என்று இஸ்ரேல் சந்தேகிப்பதே காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

News April 15, 2024

நயன் – விக்கி ஜோடியின் புத்தாண்டு கிளிக்…

image

நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி தங்களது குழந்தைகளுடன் தமிழ் மற்றும் மலையாள புத்தாண்டை கொண்டாடினர். பாரம்பரிய முறையில் உடை அணிந்து குழந்தைகளுடன் நயன் – விக்னேஷ் சிவன் ஜோடி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ள அவர்கள், ரசிகர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர். இந்நிலையில், அவர்கள் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

News April 15, 2024

‘2021இல் அதிமுக, 2024இல் பாஜக’ உதயநிதி வேண்டுகோள்

image

பிங்க் பேருந்துகளை ஸ்டாலின் பஸ் எனப் பொதுமக்கள் அழைப்பதாக உதயநிதி தெரிவித்துள்ளார். நீலகிரியில் ஆ.ராசாவை ஆதரித்து பேசிய அவர், 2021இல் அடிமைகளை விரட்டியது போல, தற்போது அவர்களது எஜமானர்களை விரட்ட வேண்டும் என்ற அவர், கடந்த 10 வருடமாக தமிழகத்துக்கு மோடி எதுவும் செய்யவில்லை என்று கூறினார். முன்னதாக 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆ.ராசா வெற்றிபெற வேண்டும் எனவும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

News April 15, 2024

காதலனை கரம்பிடித்த சீரியல் நடிகை!

image

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘கனா’ தொடரில் கதாநாயகியாக நடித்தவர் தர்ஷனா அசோகன். சமீபத்தில் அத்தொடரில் இருந்து விலகினார். இந்நிலையில், இன்று தர்ஷனாவிற்கும், அபிஷேக் என்பவருக்கும் நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. சில ஆண்டுகள் இருவரும் காதலித்து வந்த நிலையில், இன்று மணவாழ்க்கையில் இணைந்துள்ளனர். புதுமணத் தம்பதிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிகிறது.

News April 15, 2024

GST: வரி அல்ல.. வழிப்பறி

image

₹1.45 லட்சம் கோடி கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால் ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64% அடித்தட்டு மக்களிடம் இருந்தும், 33% நடுத்தர மக்களிடம் இருந்தும், 3% பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைப்பதாக தெரிவித்தார். மேலும், ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா? என்று அவர் சாடினார்.

News April 15, 2024

மின்தடையை ஏற்படுத்தி திமுக பணப்பட்டுவாடா

image

அதிகாலை வேளையில் மின்தடையை ஏற்படுத்தி, திமுக பணப்பட்டு வாடா செய்வதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், காலை 4 முதல் 6 மணி வரை மின்தடை செய்யப்படுவதாகவும், இதையடுத்து வீடு வீடாக ₹500, ₹1,000 பட்டுவாடா செய்யப்படுவதாகவும் விமர்சித்தார். பணத்தை அளித்து வாக்கு பெறும் நிலைக்கு திமுக தள்ளப்பட்டு உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

News April 15, 2024

ஷங்கர் மகள் திருமணத்தில் திரைப் பிரபலங்கள்

image

இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா – தருண் கார்த்திகேயன் திருமண விழா சென்னையில் இன்று நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்தார். இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பிரபலங்களுக்கு நேரில் சென்று ஷங்கர் அழைப்பிதழ் வழங்கினார். இந்நிலையில், இன்று ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர்.

error: Content is protected !!