India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாலியல் புகாரில் சிக்கிய ஒருவருக்கு எப்படி சலுகை காட்ட முடியும் என்று ராஜேஷ் தாஸ் வழக்கில் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பாலியல் புகார் மீதான வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அது தனக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்பதால் அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் ராஜேஷ் தாஸ் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் ஏப்ரல் 17ஆம் தேதி தீர்ப்பளிக்கவுள்ளது நீதிமன்றம். அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரிய மனுவின் மீது மீண்டும் தனது தரப்பு வாதத்தை முன் வைக்க அனுமதி கேட்டிருந்தார் செந்தில் பாலாஜி. இது தொடர்பாக ஏப்ரல் 17ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படவுள்ளது. இந்த தீர்ப்பு வழக்கின் போக்கினை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் நடப்பாண்டு பருவமழை இயல்பை விட அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், நீண்டகால அடிப்படையில் சராசரி மழைப்பதிவு 106% ஆக பதிவாகும் எனவும் தெரிவித்துள்ளது. நடப்பாண்டு பருவமழை அதிகரிப்பதற்கு, இந்திய பெருங்கடல் இருமுனை உருவாக்கம் மற்றும் பசிபிக் பகுதியில் உருவாகும் ‘லா நினா’ காரணமென வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
கோடைகாலங்களில் அதிகமாக விளையும் முலாம் பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு ரத்த அழுத்தத்தை குறைப்பதாகவும் கூறுகிறார்கள். ஜப்பானின் யுபாரி என்ற பகுதியில் விலையுயர்ந்த யுபாரி கிங் முலாம் பழங்கள் விளைகின்றன. ஒரு ஜோடி முலாம் பழத்தின் விலை இந்திய மதிப்பில் ரூ.31.6 லட்சம். சிறந்த முறையில் விளைவிப்பதால் இவற்றின் சுவையும், நறுமணமும் வேற லெவலில் இருக்குமாம்.
தேர்தலை சந்திக்காமல் குறுக்கு வழியில் ஆட்சிக்கு வருவதுதான் பாஜகவின் வேலை என காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். புதுச்சேரி பரப்புரையில் பேசிய அவர், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதில் காங்., உறுதியாக உள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுப்போம் என பாஜக தேர்தல் அறிக்கையில் கூட கூறவில்லை. சர்வாதிகார பாஜக அரசை தூக்கி எறியவே இந்த தேர்தல் நடைபெறுகிறது எனக் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி டிஜிபி அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார். அவர் நடித்துவரும் G.O.A.T படத்தின் முதல் பாடல் நேற்று வெளியானது. இந்தப் பாடல், இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள், ரவுடியிசத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, விஜய் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குஜராத்தை சேர்ந்த தம்பதி, துறவிகளாக மாற ₹200 கோடி சொத்துகளை தானமாக அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்டுமான நிறுவன அதிபரான பாவேஸ் பண்டாரியும், அவரது மனைவியும் பிப்ரவரி மாதம் 4 கி.மீ. தூரம் ஊர்வலமாக சென்று, சொத்துகளை தானம் அளித்தனர். இந்த மாத இறுதியில் 2 பேரும் ஜைன துறவறம் காணவுள்ளனர். 2022இல் மகளும், மகனும் சிறுவயதில் துறவறம் பூண்டதை பின்பற்றி, இவர்களும் துறவறம் காணவுள்ளனர்.
ஏவுகணை, ட்ரோன் தாக்குதலுக்கு பிறகும் இஸ்ரேல் அமைதி காப்பதன் பின்னணியில், ஈரானிடம் அணுகுண்டுகள் இருக்கலாம் என்று சந்தேகிப்பதே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் முதல்முறையாக நேரடியாக தாக்குதல் நடத்தியும், அதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கவில்லை. இதை வைத்து ஈரானிடம் அணுகுண்டுகள் இருக்கலாம் என்று இஸ்ரேல் சந்தேகிப்பதே காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி தங்களது குழந்தைகளுடன் தமிழ் மற்றும் மலையாள புத்தாண்டை கொண்டாடினர். பாரம்பரிய முறையில் உடை அணிந்து குழந்தைகளுடன் நயன் – விக்னேஷ் சிவன் ஜோடி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ள அவர்கள், ரசிகர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர். இந்நிலையில், அவர்கள் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பிங்க் பேருந்துகளை ஸ்டாலின் பஸ் எனப் பொதுமக்கள் அழைப்பதாக உதயநிதி தெரிவித்துள்ளார். நீலகிரியில் ஆ.ராசாவை ஆதரித்து பேசிய அவர், 2021இல் அடிமைகளை விரட்டியது போல, தற்போது அவர்களது எஜமானர்களை விரட்ட வேண்டும் என்ற அவர், கடந்த 10 வருடமாக தமிழகத்துக்கு மோடி எதுவும் செய்யவில்லை என்று கூறினார். முன்னதாக 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆ.ராசா வெற்றிபெற வேண்டும் எனவும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.