India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாட்டின் சுதந்திரத்தை பாதுகாக்க பாஜக அரசை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டுமென மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்த அவர், பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் எதிர்காலத்தில் இந்தியாவில் தேர்தலே நடக்காது என்றார். பாஜக அரசு ஒரு எதேச்சதிகார அரசு. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே உணவு என்பதுதான் அவர்களது கொள்கை என்றார்.
நாக் அஸ்வின் இயக்கி பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘கல்கி 2898 ஏடி’. அமிதாப் பச்சன், கமல்ஹாசன், ராணா, துல்கர் சல்மான் என நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வரும் இப்படம் ஜூன் 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், VFX பணிகள் நிறைவடையாததால் ஜூன் 20ஆம் தேதிக்கு ரிலீஸை தள்ளிவைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பிரபாஸ் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் மேலும் ஒருவர் பிறழ்சாட்சியம் அளித்திருக்கிறார். ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் சின்னசாமி இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகி பிறழ்சாட்சியம் அளித்தார். டிஜிபி அலுவலகத்தில் வைத்து தன்னிடம் கையெழுத்து பெறப்பட்டதாகவும், வழக்கு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் சின்னசாமி தெரிவித்துள்ளார். இதனால் வழக்கு, பொன்முடிக்கு சாதகமாக மாறுகிறது.
பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை பொதுவாக 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். பசிபிக் பெருங்கடலில் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட அதிகரிப்பது ‘எல் நினோ’ என்று அழைக்கப்படுகிறது. இதனால் இயல்பை விட மழைப்பொழிவு குறையும். இதற்கு நேர்மாறாக, பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட குறைவது ‘லா நினா’ என அழைக்கப்படுகிறது. இதனால் இயல்பை விட மழைப்பொழிவு அதிகமாக இருக்கும்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்துக் கொண்டிருந்த சரக்கு கப்பலை ஈரான் இஸ்லாமிய புரட்சி படையினர் சிறை பிடித்துள்ளனர். அதில் இந்தியாவைச் சேர்ந்த 17 மாலுமிகள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25 மாலுமிகள் சிக்கியுள்ளனர். இந்நிலையில் ஈரான் அதிகாரிகளுடன் இந்திய வெளியுறவுத் துறை தொடர்பு கொண்டு பேசியது. இதன் விளைவாக இந்திய மாலுமிகளை இந்திய அதிகாரிகள் சந்திக்க ஈரான் அனுமதி அளித்துள்ளது.
ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் ஸ்மார்ட்ஃபோன்கள் ஏற்றுமதியில் ஆப்பிள் நிறுவனத்தை, சாம்சங் நிறுவனம் முந்தியுள்ளது. IDC வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்தாண்டு இதே காலத்தோடு ஒப்பிடுகையில், சாம்சங் ஸ்மார்ட்ஃபோன்களின் ஏற்றுமதி 7.8% அதிகரித்து, 20.8% சந்தையை கைப்பற்றியுள்ளது. அதே நேரம், ஆப்பிள் நிறுவனத்தின் ஏற்றுமதி 9.6 % சரிந்து, 17.3% சந்தையை மட்டுமே கைப்பற்றி 2ஆவது இடத்தை பிடித்தது.
பாலியல் புகாரில் சிக்கிய ஒருவருக்கு எப்படி சலுகை காட்ட முடியும் என்று ராஜேஷ் தாஸ் வழக்கில் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பாலியல் புகார் மீதான வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அது தனக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்பதால் அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் ராஜேஷ் தாஸ் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் ஏப்ரல் 17ஆம் தேதி தீர்ப்பளிக்கவுள்ளது நீதிமன்றம். அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரிய மனுவின் மீது மீண்டும் தனது தரப்பு வாதத்தை முன் வைக்க அனுமதி கேட்டிருந்தார் செந்தில் பாலாஜி. இது தொடர்பாக ஏப்ரல் 17ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படவுள்ளது. இந்த தீர்ப்பு வழக்கின் போக்கினை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் நடப்பாண்டு பருவமழை இயல்பை விட அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், நீண்டகால அடிப்படையில் சராசரி மழைப்பதிவு 106% ஆக பதிவாகும் எனவும் தெரிவித்துள்ளது. நடப்பாண்டு பருவமழை அதிகரிப்பதற்கு, இந்திய பெருங்கடல் இருமுனை உருவாக்கம் மற்றும் பசிபிக் பகுதியில் உருவாகும் ‘லா நினா’ காரணமென வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
கோடைகாலங்களில் அதிகமாக விளையும் முலாம் பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு ரத்த அழுத்தத்தை குறைப்பதாகவும் கூறுகிறார்கள். ஜப்பானின் யுபாரி என்ற பகுதியில் விலையுயர்ந்த யுபாரி கிங் முலாம் பழங்கள் விளைகின்றன. ஒரு ஜோடி முலாம் பழத்தின் விலை இந்திய மதிப்பில் ரூ.31.6 லட்சம். சிறந்த முறையில் விளைவிப்பதால் இவற்றின் சுவையும், நறுமணமும் வேற லெவலில் இருக்குமாம்.
Sorry, no posts matched your criteria.