India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் ஏப்ரல் 17ஆம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், கடைசி நாள் பிரசாரத்தன்று கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். கோடை வெயிலை கருத்தில் கொண்டு கடைசி நாளன்று மாலை 6 மணி வரை பிரசாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் எது கிடைக்கிறதோ, இல்லையோ போதைப்பொருள் தாராளமாக கிடைப்பதாக இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை புரசைவாக்கத்தில் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசுக்கு திறமையில்லை. அரசு ஊழியர்களுக்கு நாமம் போட்ட கட்சி திமுக எனவும் சாடினார்.
பாஜக ஆட்சியிலிருந்து துடைத்தெறியப்படும் என சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், இந்தியா கூட்டணிக்கு விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் அமோக ஆதரவு அளித்து வருவதாகத் தெரிவித்தார். கொள்ளை அடிப்பதும், பொய் சொல்வதும்தான் பாஜக அரசின் கொள்கை. இதைத் தவிர அவர்களிடம் வேறு எந்த அடையாளமும் இல்லை எனக் கூறினார்.
நடிகர் தனுஷ், இயக்குநர் ஐஸ்வர்யா அக்டோபர் 7ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்களின் திருமண பதிவை ரத்து செய்யக் கோரி தனுஷ், ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவரையும் நேரில் ஆஜராக உத்தரவிட்டு, வழக்கை அக்டோபர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 2022ஆம் ஆண்டு இருவரும் பிரிய முடிவெடுத்துள்ளதாக அறிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் நீதி கிடைக்காததால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வேங்கைவயல் கிராமத்தின் குடிநீர் தொட்டியில் மனித மலம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை குடிநீரில் கலந்தது யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாமென ஆடியோ வெளியிட்டவரை திமுகவினர் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. சில தினங்களுக்கு முன் தஞ்சாவூர் அடுத்த பாபநாசத்தை சேர்ந்த சீதாராமன் “திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம். பாஜகவுக்கு வாக்களியுங்கள்” எனப் பேசி சமூக வலைதளத்தில் ஆடியோ வெளியிட்டிருந்தார். இதனால், ஆத்திரமடைந்த திமுக அனுதாபிகள், நடைப்பயிற்சிக்கு சென்ற தன்னை தாக்கியதாக சீதாராமன் பரபரப்பாக குற்றம்சாட்டியுள்ளார்.
‘என் இனிய சகோதர, சகோதரிகளே வணக்கம்’ என தமிழில் உரையைத் தொடங்கினார் பிரதமர் மோடி. நெல்லையில் தேர்தல் கூட்டத்தில் பேசிவரும் அவர், கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு நலத் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம். பாஜக தேர்தல் அறிக்கையில் மீனவர்கள், விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பாஜகவிற்கு கூடும் மக்கள் கூட்டத்தைப் பார்த்து INDIA கூட்டணிக்கு தூக்கம் தொலைந்துவிட்டது என விமர்சித்துள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோஹித் ஷர்மாவை வாங்கத் தயாராக இருப்பதாக பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், எங்கள் அணிக்கு நிலைத்தன்மையும், சாம்பியன் மனநிலையும் கொண்ட கேப்டன் தேவை. ரோஹித்திடம் அவை அனைத்தும் உள்ளன. 2025 மெகா ஏலத்தில் அவர் வந்தால், எவ்வளவு தொகை வேண்டுமானாலும் செலவழித்து அவரை வாங்கத் தயாராக உள்ளோம் எனக் கூறியுள்ளார்.
சொந்த ஊர்களுக்கு வாக்களிக்க செல்வோர் முன்கூட்டியே திட்டமிட்டு செல்லுமாறு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை வருவதால் மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு 10,000 சிறப்பு பேருந்துகளை போக்குவரத்துத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.20,00,000க்கு மேல் சம்பளம் வாங்குபவர்களின் வேலைவாய்ப்பு மார்ச் மாதத்தில் அதிகரித்துள்ளது. அதே நேரம், ரூ.12,00,000க்கும் குறைவான சம்பளம் வாங்குவோரின் வேலைவாய்ப்பு குறைந்துள்ளதாக அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. அதிகபட்சமாக ஆயில் துறையின் வேலைவாய்ப்பு 22% வளர்ச்சி கண்டுள்ளது. ஐடி, பிபிஓ மற்றும் சில்லறை விற்பனை துறைகளின் வேலைவாய்ப்பு முறையே 16%, 6%, 5% சரிவை சந்தித்துள்ளன.
Sorry, no posts matched your criteria.