news

News April 15, 2024

உலகின் பரபரப்பான விமான நிலையம் எது?

image

உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் டெல்லி விமான நிலையம் 10ஆவது இடம் பிடித்துள்ளது. ஏசிஐ வெளியிட்டுள்ள தரவுகளின்படி, முதல் 10 பரபரப்பான விமான நிலையங்களில் 5 அமெரிக்காவில் உள்ளன. அமெரிக்காவின் அட்லாண்டா சர்வதேச விமான நிலையம் 2023இல் 10.46 கோடி பயணிகளைக் கையாண்டு முதல் இடம் பிடித்துள்ளது. துபாய் விமான நிலையம் 8.69 கோடி பயணிகளைக் கையாண்டு 2ஆவது இடம் பிடித்துள்ளது.

News April 15, 2024

பிரதமரை கடுமையாக சாடிய முதல்வர்

image

பிரதமர் மோடி வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். சென்னை மாதவரத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், ஒரே இரவில் ஊழலை ஒழிக்கப் போவதாகக் கூறி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். ஜிஎஸ்டியை அமல்படுத்தி மக்களையும் கொடுமைப்படுத்தினார். கொரோனாவை ஒழிக்க விளக்கு ஏற்றக் கூறியும், மணி அடிக்கக் கூறியும் ஏதோ விஞ்ஞானி போல பேசினார் என சாடியுள்ளார்.

News April 15, 2024

6 ஆண்டுகள் மோடி தேர்தலில் போட்டியிட தடைக் கோரி மனு

image

பிரதமர் மோடி 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனந்த் ஜோந்தலே என்பவர் தொடர்ந்த வழக்கில், உ.பி., பிரசாரத்தில் பிரதமர் மோடியின் பேச்சு சாதி, மத வெறுப்புணர்வை தூண்டும் வகையில் இருந்ததெனவும், மேலும் அரசுக்கு சொந்தமான விமானம், ஹெலிகாப்டர்களை பிரசாரத்திற்கு மோடி பயன்படுத்துவது தேர்தல் விதிமீறல் எனவும் அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

News April 15, 2024

தமிழ்நாட்டு மக்கள் எங்கள் பக்கம்

image

சனாதன தர்மத்தின் மீது திமுக வெறுப்பை விதைப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். ANI ஊடகத்திற்குப் பேட்டி அளித்த அவர், தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு மீது மக்களுக்கு அபரிமிதமான கோபம் இருப்பதாகத் தெரிவித்தார். தமிழ்நாட்டு மக்கள் தற்போது பாஜக நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். அண்ணாமலை சிறப்பாகச் செயல்படுகிறார். ஐபிஎஸ் வேலையை விட்டுவிட்டு அவர் பாஜகவில் பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார்.

News April 15, 2024

இன்னும் இரண்டு நாள்களில் ‘சியான் 62’ அப்டேட்…

image

‘தங்கலான்’ படத்தையடுத்து ‘சித்தா’ படத்தை இயக்கிய அருண் குமார் இயக்கும் புதிய படத்தில் விக்ரம் நடிக்க உள்ளார். இதில் விக்ரமுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். இப்படத்தின் ப்ரமோ வீடியோ விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு நாளை மறுநாள் (ஏப்ரல் 17) வெளியாகும் என கூறப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் விதமாக 2 நாள்களில் அப்டேட் வர உள்ளதாக நடிகர் விக்ரம் ட்வீட் செய்துள்ளார்.

News April 15, 2024

ஜூன் 4க்கு பின் உதய சூரியன் மறைந்து போகும்

image

ஜூன் 4ஆம் தேதிக்குப் பின் தமிழ்நாட்டில் உதய சூரியன் மறைந்து போகும் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். நெல்லை பிரசார கூட்டத்தில் பேசிய அவர், தற்போது நெல்லைக்கு மோடி வருகை தந்த காரணத்தால் சூரியன் அஸ்தமித்துள்ளது. இதேபோல் ஜூன் 4க்குப் பின் உதய சூரியன் மறைந்து போகும் என திமுகவைத் தாக்கியுள்ளார். மேலும், ஜூன் 4 ஆம் தேதி 400க்கும் மேற்பட்ட எம்பிக்கள் மோடியின் காலடியில் இருப்பார்கள் என்றார்.

News April 15, 2024

IPL: பெங்களூரு அணி பவுலிங்

image

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற RCB கேப்டன் டு ப்ளஸி பவுலிங் தேர்வு செய்துள்ளார். நடப்பு தொடரில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள RCB ஒரு வெற்றியை மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதே நேரம் SRH அணி 3 வெற்றிகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டி சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறுவதால் RCB வெற்றிக்காக கடுமையாக போராடும். இன்று எந்த அணி வெற்றிபெறும்?

News April 15, 2024

அம்ரித் கலாஷ் திட்டம் நீட்டிப்பு

image

எஸ்பிஐ வங்கி வழங்கிவரும் ‘அம்ரித் கலாஷ்’ என்ற சிறப்புத் திட்டம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் 400 நாட்கள் fixed deposit செய்து கொள்ளலாம். அதற்கு 7.10% வட்டி (ஆண்டுக்கு) வழங்கப்படும். மூத்த குடிமக்கள் இத்திட்டத்தின்கீழ் 0.50% அதிகமாக 7.60% வட்டி பெறுவார்கள். இந்தாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை இத்திட்டம் நடைமுறையில் இருக்கும் என்று எஸ்பிஐ அறிவித்துள்ளது.

News April 15, 2024

அமலாக்கத்துறை சிறப்பாக பணியாற்றுகிறது

image

அமலாக்கத்துறை சிறப்பாக பணியாற்றுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ANI ஊடகத்திற்கு பேட்டி அளித்த அவர், எதிர்க்கட்சி தலைவர்களை பாஜக சிறைக்கு அனுப்புவதாகக் கூறப்படுவதை மறுத்தார். நேர்மையானவர்கள் பயப்படத் தேவையில்லை. நான் முதலமைச்சராக இருந்தபோது எனது உள்துறை அமைச்சரை சிறைக்கு அனுப்பினார்கள். அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்குகளில் 3% மட்டுமே அரசியல்வாதிகள் மீதான வழக்குகள் என்றார்.

News April 15, 2024

₹25,000 கோடிக்கு Green Bond வெளியாக வாய்ப்பு

image

நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு ₹20,000 கோடி முதல் ₹25,000 கோடி வரையிலான பசுமைப் பத்திரங்களை வெளியிட வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். இந்திய அரசின் பத்திரங்கள் மீது உலக முதலீட்டாளர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், முதல் அரையாண்டில் பசுமைப் பத்திரங்கள் மூலம் ₹12,000 கோடி கடன் வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது ஆண்டு இறுதியில் ₹25,000 கோடி வரை இருக்கலாம்.

error: Content is protected !!