news

News April 15, 2024

கவனம் ஈர்த்த சியான் விக்ரம்

image

‘தங்கலான்’ படத்தில் நடித்து முடித்துள்ள விக்ரம், அடுத்ததாக ‘சித்தா’ பட இயக்குநர் அருண் குமார் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் டைட்டில் டீசர் விக்ரமின் பிறந்தநாளான ஏப்ரல் 17ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஷங்கர் மகளின் திருமண நிகழ்ச்சியில் விக்ரம் பங்கேற்றிருந்தார். அவரது லுக் கவனம் ஈர்த்த நிலையில், புதிய படத்திற்கான கெட்டப்பா? என ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்.

News April 15, 2024

நிர்வாகிகளுக்கு இபிஎஸ் உத்தரவு

image

நடைபெற உள்ள தேர்தலில் அர்ப்பணிப்பு, உழைப்பு, ஈடுபாடு பல மடங்கு இருக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், அஞ்சாமல், அயராமல், துவளாமல் வெற்றியை இலக்காகக் கொண்டு பணிகளை தொடர வேண்டும். தேர்தல் களம் நமக்கு சாதகமான நிலையில் இருப்பது அனைவருக்கும் தெரியும். வெற்றியை சிந்தாமல், சிதறாமல் வாக்குகளாக மாற்ற உற்சாகத்துடன் பணியாற்றுங்கள் என உத்தரவிட்டுள்ளார்.

News April 15, 2024

39 பந்துகளில் சதம்… புதிய சாதனை

image

RCB அணிக்கு எதிராக அதிரடியாக ஆடிவரும் SRH வீரர் டிராவிஸ் ஹெட் 39 பந்துகளில் சதம் அடித்துள்ளார். இதன் மூலம் IPL வரலாற்றில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த 4 ஆவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கெயில் 30, யூசுப் பதான் 37, டேவிட் மில்லர் 38 பந்துகளில் சதம் அடித்துள்ளனர். இன்றைய போட்டியில் 9 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் பறக்கவிட்டு நடப்பு தொடரில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்துள்ளார் ஹெட்.

News April 15, 2024

இந்தியாவில் விடியலை ஏற்படுத்தவே I.N.D.I.A கூட்டணி!

image

இந்தியாவில் விடியலை ஏற்படுத்த தான் I.N.D.I.A கூட்டணியை அமைத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை மாதவரத்தில் வடசென்னை திமுக வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற பரப்புரையில், மக்களோடு, மக்களாக இருந்து திமுகவும், காங்கிரஸும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது மாறுபட்ட தேர்தல். ஆனால் முக்கியமான தேர்தல் என குறிப்பிட்ட அவர், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தெற்கின் குரல் எனவும் பாராட்டினார்.

News April 15, 2024

ஈரான் அமைச்சருடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை

image

ஈரான் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட சரக்குக் கப்பலில் சிக்கியுள்ள 3 தமிழர்கள் உட்பட 17 இந்தியர்களை விடுவிப்பது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சருடன், மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது அங்கு நிலவும் சூழல் குறித்து கேட்டறிந்த ஜெய்சங்கரிடம், விரைவில் சரக்குக் கப்பலில் உள்ள இந்தியர்களை, இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதிக்கப்படுமென ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

News April 15, 2024

சின்னசாமி மைதானத்தில் சிக்ஸர் மழை

image

பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் அதிரடியாக ஆடிவரும் SRH வீரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக அரை சதம் கடந்துள்ளார். 20 பந்துகளில் அவர் 5 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 51* ரன்கள் அடித்துள்ளார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா 23* ரன்களுடன் களத்தில் உள்ளார். இவர்களது அதிரடி ஆட்டத்தால் SRH அணி 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 76 ரன்கள் எடுத்துள்ளது.

News April 15, 2024

அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு

image

25% இலவச சேர்க்கை இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பினை அனைத்து தனியார் பள்ளிகளிலும் பெரிய பலகையில் வெளியிட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25% மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசு செலுத்துகிறது. இத்திட்டத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க <>https://tnschools.gov.in/rte<<>> என்ற லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

News April 15, 2024

மணிப்பூரை பிரிக்க விட மாட்டோம்

image

மணிப்பூரை பிரிக்க விட மாட்டோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மணிப்பூரில் பிரசாரம் செய்த அவர், மக்களவைத் தேர்தல் மணிப்பூரை பிரிக்க நினைப்பவர்களுக்கும், ஒற்றுமையை உருவாக்க நினைப்பவர்களுக்கும் இடையிலான போர் என்றார். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட பிரதமர் மோடி முன்னுரிமை அளித்து வருவதாகத் தெரிவித்தார். மணிப்பூர் கலவரத்தில் குறைந்தது 220 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 15, 2024

ரயில்வேயில் 4,660 போலீஸ் பணியிடங்கள்

image

RPFல் உள்ள 4,660 போலீஸ் பணியிடங்களுக்கான (SI-452, Constable-4,208) அறிவிப்பு வெளியாகியுள்ளது. SI பணிக்கு 20 – 28 வயதுடைய, பட்டப்படிப்பு முடித்தவர்களும், Constable பணிக்கு 18 – 28 வயதுடைய, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு அடிப்படையில் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க கடைசித் தேதி: மே 14. இணையதளம்: <>https://www.rrbapply.gov.in/<<>>

News April 15, 2024

உலகின் பரபரப்பான விமான நிலையம் எது?

image

உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் டெல்லி விமான நிலையம் 10ஆவது இடம் பிடித்துள்ளது. ஏசிஐ வெளியிட்டுள்ள தரவுகளின்படி, முதல் 10 பரபரப்பான விமான நிலையங்களில் 5 அமெரிக்காவில் உள்ளன. அமெரிக்காவின் அட்லாண்டா சர்வதேச விமான நிலையம் 2023இல் 10.46 கோடி பயணிகளைக் கையாண்டு முதல் இடம் பிடித்துள்ளது. துபாய் விமான நிலையம் 8.69 கோடி பயணிகளைக் கையாண்டு 2ஆவது இடம் பிடித்துள்ளது.

error: Content is protected !!