India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேர்தல் பத்திர திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு உண்மையில் அனைவரும் வருந்துவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சமீபத்தில் தேர்தல் பத்திர திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இது குறித்து ANI-க்கு அளித்த பேட்டியில் மோடி, தேர்தலின் போது கறுப்பு பணப்புழக்கத்தை தடுக்கவே தன்னுடைய அரசு இதனை கொண்டு வந்தது. ஆனால் இத்திட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் பொய்யை பரப்பியதாகவும் சாடியுள்ளார்.
மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் புகழை ரசிகர்கள் பாடும் காலம் விரைவில் வருமென அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்டு நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாண்டியா மீதான ரசிகர்களின் அணுகுமுறை குறித்து அவர், கிரிக்கெட் போன்ற குழு விளையாட்டில், தனிப்பட்ட வீரரை கை காட்டுவது எரிச்சலாக உள்ளது. இந்தியாவுக்காக பாண்டியா சிறப்பாக விளையாட ரசிகர்கள் ஊக்குவிப்பதை காண காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும் திமுக இலக்கிய அணியின் தலைவருமாகிய புலவர் இந்திர குமாரி சென்னையில் வயது முதிர்வால் காலமானார். உடல்நிலை பாதிப்பு காரணமாக அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வேலூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட இந்திர குமாரி, 1991 முதல் 96 வரை ஜெயலலிதாவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். பின்னர் 2006ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார்.
இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் உலகளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி வரும் 22ஆம் தேதி பாகிஸ்தான் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு பாகிஸ்தான் ஆட்சியாளர்களை சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. இரு நாடுகளும் முக்கிய பொருளாதார நலன்களைப் பகிர்ந்துகொள்வதால் ஈரானிய அதிபரின் பாகிஸ்தான் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நியூயார்க் தாக்குதலின் போது தான் இறந்து விட்டதாக எண்ணியதாக எழுத்தாளர் சல்மான் ருஷ்டி நினைவலைகளை பகிர்ந்துள்ளார். 2022ஆம் ஆண்டு நியூயார்க்கில் நிகழ்ச்சி ஒன்றில், அவர் மீது பாய்ந்த ஹாதி மடார் என்பவர் கத்தியால் சரமாரியாக குத்தினார். இது குறித்து பிபிசிக்கு அளித்த பேட்டியில், தனது இடது கண் அரைகுறையாக வேகவைத்த முட்டை போன்று இருந்ததாகவும், ஒரு கண்ணை இழந்தது மிகவும் வேதனையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த பெண்ணின் ஸ்கூட்டரை பறிமுதல் செய்த போக்குவரத்து காவலர்கள், அவருக்கு ரூ.1.36 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிப்பது வழக்கம். ஆனால், இந்தப் பெண் ஹெல்மெட் அணியாமல் பயணித்தல், போன் பேசியபடி பயணித்தல், சிக்னலை மதிக்காமல் பயணித்தல் என 270 முறை விதிமீறலில் ஈடுபட்டது சிசிடிவி காட்சிகளில் உறுதியாகியுள்ளது. இந்நிலையில், மொத்தமாக சிக்கியுள்ளார்.
உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, தனது ஊழியர்களில் 10% பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. டிசம்பர் கணக்கீட்டின்படி, இந்நிறுவனத்தில் மொத்தம் 1,40,473 பேர் பணியாற்றுகின்றனர். தற்போதைய தகவலின்படி சுமார் 15,000 பேர் வேலையை இழக்க உள்ளனர். உலக சந்தையில் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்திருந்தாலும், விற்பனையில் போட்டியும் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
RCB அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் SRH அணி 287/3 ரன்கள் அடித்துள்ளது. இதன் மூலம் ஐபிஎல்லில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற தனது பழைய சாதனையை (277) SRH முறியடித்துள்ளது. இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹெட் 102, க்ளாஸன் 67, மார்க்ரம் 32*, சமத் 37* ரன்கள் அடித்தனர். ஒட்டுமொத்தமாக SRH அணி சார்பில் 22 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது. RCB சார்பில் பெர்குசன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தினசரி சாப்பிடும் உணவில் வெங்காயத்தை அதிகம் சேர்த்துக்கொள்வது வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க உதவும் என்கிறார்கள். வெங்காயத்தில் அதிகம் தண்ணீர் உள்ளதால், உடலுக்குத் தேவையான நீர் சத்து கிடைக்கிறது. வெங்காயம் இயற்கையாகவே குளிர்ச்சியான பண்புகளைக் கொண்டது. எனவே இது உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தி, குளிர்ச்சியைக் கொடுக்கும். இதனால்தான் பலரும் பழைய சாதத்துடன் வெங்காயம் எடுத்துக்கொள்கிறார்கள்.
தமிழகத்தில் இன்று இரவு மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், குமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கோவை, திருப்பூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.