India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடப்பு ஐபிஎல் தொடரின் SRH – RCB அணிகள் இடையிலான 29ஆவது லீக் போட்டியானது பல சாதனை பட்டியல்களில் இடம்பிடித்துள்ளது. அவை விவரம் பின்வருமாறு:- 1.ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவிக்கப்பட்ட ஆட்டங்களின் பட்டியலில் முதலிடம் (549 ரன்கள்). 2. அதிக சிக்சர்கள் (38) அடிக்கப்பட்ட ஆட்டங்களில் முதலிடம். 3. அதிக பவுண்டரிகள் 4+6 (43 ஃபோர்ஸ், 38 சிக்ஸர்கள் மொத்தம் 81) அடிக்கப்பட்ட ஆட்டங்களின் பட்டியலில் முதலிடம்.
இன்று (ஏப்ரல் 16) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
ஐபிஎல் வரலாற்றில் 250+ என்ற ரன்களை இலக்கை அதிவேகமாக சேஸ் செய்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி என்ற சாதனையை படைத்திருக்கிறது. SRH அணிக்கு எதிரான 29ஆவது லீக் போட்டியில், சேஸிங் செய்த RCB அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 262 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சேஸிங்கில் அதிக ரன்கள் எடுத்த அணிகளின் பட்டியலில் MI அணியை (SRHக்கு எதிராக MI 246 ரன்கள் எடுத்தது) பின் தள்ளி RCB அணி முதலிடம் பிடித்துள்ளது.
இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஒழித்துவிட்டு, சர்வாதிகார ஆட்சியை நிறுவும் நோக்கத்தை மோடி கொண்டுள்ளதாக என்சிபி தேசியத் தலைவர் சரத் பவார் குற்றம்சாட்டியுள்ளார். சோலாபூரில் பேசிய அவர், ஜனநாயக நாட்டில் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் சம அளவில் முக்கியத்துவம் இருக்க வேண்டும். ஆனால், மோடியோ எதிர்க்கட்சிகள் இருக்கவே கூடாது என்ற எண்ணத்தோடு செயல்படுகிறார் எனக் கூறினார்.
*நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்க பாஜக அரசை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் – மம்தா பானர்ஜி
*10 ஆண்டுகளில் விவசாயிகள் நலனுக்கு மோடி அரசு செய்தது என்ன? – கமல்
*பாமக இல்லாவிட்டால் திராவிட ஆட்சியாளர்கள் டெல்டாவை அழித்திருப்பர் – அன்புமணி
*5 ஆண்டுகளில் மூத்த குடிமக்களின் வைப்புத்தொகை 150% உயர்ந்துள்ளது – எஸ்பிஐ
*RCB அணிக்கு எதிரான ஆட்டத்தில் SRH அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இன்று (ஏப்ரல் 16) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகள் நலனுக்கு மோடி அரசு செய்தது என்ன? என மநீம தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். பொள்ளாச்சியில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட கமல், டெல்லியில் மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆணிப்படுக்கை போட்டு வரவேற்றது. ஆனால் முதல்வராக இருந்த போது உழவர் சந்தைகள் அமைத்த கலைஞர், ரூ.7,000 கோடிக்கு விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தவரென புகழாரம் சூட்டியுள்ளார்.
5 ஆண்டுகளில் மூத்த குடிமக்களின் வைப்புத்தொகை சுமார் 150% உயர்ந்துள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. 2018இல் 4.1 கோடியாக இருந்த மூத்த குடிமக்களின் FD கணக்குகள் 2023 டிசம்பரில் 7.4 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்த வைப்புத்தொகை 2018இல் ₹13.72 லட்சம் கோடியிலிருந்து 2023இல் ₹34.36 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு 0.5% அதிக வட்டி வழங்குவதே இதற்குக் காரணம்.
பூமியின் மிக அழகான இடம் வயநாடு என ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார். வயநாடு தொகுதிக்கு உள்பட்ட சுல்தான் பத்தேரியில் ராகுல் காந்தி ரோடு ஷோ நடத்தினார். அப்போது தொண்டர்களிடம் பேசிய அவர், வயநாடு வரும்போதெல்லாம் சொந்த வீட்டிற்கு வருவது போல உணர்வதாகத் தெரிவித்தார். தனது தாய் சோனியாவை ஒரு வாரம் வயநாடு வரும்படி அழைத்தாக தெரிவித்த அவர், சோனியாவுக்கு ஈரப்பதத்தில் சில பிரச்னை இருப்பதாக கூறினார்.
*கூந்தலை எண்ணெய் மசாஜ் செய்வது தலைப்பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இது கூந்தல் நீண்டு வளர ஊட்டச்சத்து அளிக்கும்.
*6 முதல் 8 வாரங்களுக்கு ஒரு முறை கூந்தலை ட்ரிம் செய்வது அவசியம்.
*வைட்டமின் B, ஆன்டிஆக்ஸிடென்ட் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.
*நல்ல ஷாம்புவை பயன்படுத்த வேண்டும்.
*குளிர்ந்த நீரில் தலைக்குளிக்கவும்.
*முடியை கலர் செய்வதை தவிர்க்கவும்.
Sorry, no posts matched your criteria.