news

News April 16, 2024

ராகுல் ஒருமுறை வருவது, மோடி 10 முறை வருவதற்கு சமம்

image

வரலாறு மீண்டும் திரும்பும்; மன்மோகன் சிங் போன்ற ஒரு பிரதமர் நாட்டுக்கு கிடைப்பார் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாஜகவின் சித்தாந்தம் தமிழ்நாட்டு மக்களின் எண்ணங்களுக்கு எதிராக உள்ளதால், அது இங்கு எடுபடவில்லை. இதனால் மோடி, அமித்ஷாவின் ரோடு ஷோ தோல்வியில் முடிந்தது என விமர்சித்த அவர், ராகுல் தமிழ்நாட்டுக்கு ஒருமுறை வருவது, மோடி 10 முறை வருவதற்கு சமம் எனத் தெரிவித்தார்.

News April 16, 2024

ஓபிஎஸ்-ஐ ஆதரித்து பரமக்குடியில் நட்டா பேரணி

image

பாஜக தலைவர் ஜே.பி.நட்டா இன்று பரமக்குடியில் பரப்புரை செய்கிறார். ராமநாதபுரத்தில் போட்டியிடும் ஓபிஎஸ்-ஐ ஆதரித்து அவர் வாகனப் பேரணி மேற்கொள்ள இருக்கிறார். சரஸ்வதி நகரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கும் இந்தப் பேரணி காந்தி சிலை அருகே நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து திறந்த வேனில் ஓபிஎஸ்-ஐ ஆதரித்து அவர் ஆதரவு திரட்ட உள்ளார். இதனால் பரமக்குடியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

News April 16, 2024

இந்திய பங்குச் சந்தைகள் இன்றும் வீழ்ச்சி

image

இஸ்ரேல்-ஈரான் போர்ப் பதற்றத்தால், இந்திய பங்குச் சந்தைகள் இன்றும் சரிவைச் சந்தித்துள்ளன. ஈரான்- இஸ்ரேல் இடையே போர் மூளலாம் என எதிர்பார்க்கப்படுவதால், உலகப்பங்குச்சந்தைகளில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இதனால் இந்திய பங்குச்சந்தைகள் 2ஆவது நாளாக இன்றும் சரிவைச் சந்தித்தன. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 286 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 68 புள்ளிகளும் வீழ்ச்சியடைந்துள்ளன.

News April 16, 2024

IPL: சிறிது காலம் ஓய்வெடுக்க மேக்ஸ்வெல் முடிவு

image

உடலளவிலும், மனதளவிலும் நலம் பெற வேண்டியுள்ளதால், நடப்பு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில் விளையாடப்போவதில்லை என RCB வீரர் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், என்னால் சிறப்பாக விளையாட முடியவில்லை. அதனால் எனக்கு பதிலாக வேறு யாராவது விளையாடட்டும் என டு பிளெஸிஸ் மற்றும் பயிற்சியாளர்களிடம் கூறினேன். உடல் மற்றும் மனதளவில் முன்னேற்றம் இருந்தால், நிச்சயம் விளையாடுவேன் எனக் கூறினார்.

News April 16, 2024

செவ்வாயன்று கேட்டதெல்லாம் அருளும் சிறுவாபுரி முருகன்

image

சென்னை அருகே செங்குன்றத்தில் இருந்து சில கி.மீ. தூரத்தில் வயல்வெளிகளுக்கு இடையே அமைந்துள்ளது சிறுவாபுரி பாலமுருகன் கோயில். அக்கோயில் இருக்கும் பகுதியில் புராண காலத்தில் ராமருக்கும், மகன்கள் லவ குசனுக்கும் இடையே போர் நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்தில் செவ்வாயன்று மனமுருக வேண்டினால் வீடு, நிலம் தொடர்பான அனைத்து கோரிக்கைகளும் முருகனால் நிறைவேற்றி தரப்படுவதாக கூறுகின்றனர் பக்தர்கள்.

News April 16, 2024

5 பேரும் டம்மி ஓபிஎஸ்கள்; நான் தான் ஒரிஜினல் ஓபிஎஸ்

image

தான் மட்டுமே உண்மையான ஓபிஎஸ், மற்ற 5 பேரும் டம்மியாக நிறுத்தப்பட்டுள்ள ஓபிஎஸ் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். எத்தனை ஓபிஎஸ்கள் இருந்தாலும், அம்மா அவர்களால் 3 முறை முதலமைச்சர் ஆக்கப்பட்டு, 12 ஆண்டுகள் தொடர்ந்து அதிமுக பொருளாளராக இருந்தது, இந்த ஓபிஎஸ் மட்டும் தான் என்று கூறிய அவர், எத்தனை ஓபிஎஸ் வந்தாலும் அம்மாவின் நம்பிக்கை பெற்ற தன்னை வெல்ல முடியாது எனக் கூறினார்.

News April 16, 2024

பாஜகவால் பூத் ஏஜெண்டை கூட போட முடியாது

image

தினமும் பேட்டி கொடுப்பதில் தான் பாஜக போட்டி போடுவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விமர்சித்துள்ளார். கோவையில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக எந்த பூத்திலும் பூத் ஏஜெண்டுகள் இதுவரை நியமிக்கப்படவில்லை. ஆனால், பாஜக வெற்றிபெறும் என ஏ.சி ரூமில் உட்கார்ந்து கொண்டு சிலர் கருத்துக்கணிப்பு சொல்கிறார்கள். களத்தில் பாஜக என்ற கட்சியே இல்லை என்ற அவர், அதிமுக வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றார்.

News April 16, 2024

சற்றுமுன்: இன்று இரவு முதல் டாஸ்மாக் இயங்காது

image

ஏப்ரல்19ஆம் தேதி மக்களவைத் தேர்தலையொட்டி இன்று இரவு வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்கும். நாளை முதல் அடுத்த மூன்று நாள்களுக்கு ஏப்.19 வரை விடுமுறை தான். தேர்தல் முடிந்த மறுநாள் ஏப்.20ஆம் தேதி மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும். அதன்பின், ஏப்.21 மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அன்றும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதாவது இன்று இரவு முதல் ஏப்.21-க்கு இடையில் ஒருநாள் மட்டுமே டாஸ்மாக் இயங்கும்.

News April 16, 2024

கடன்: வங்கிகளுக்கு RBI புது உத்தரவு

image

கடன் கட்டணங்கள் உள்ளடக்கிய விரிவான அறிக்கையை வாடிக்கையாளர்களுக்கு அக்.1 முதல் அளிக்க வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் RBI உத்தரவிட்டுள்ளது. அதில், கடனுக்கு ஒரு ஆண்டு முழுவதும் வசூலிக்கப்படும் கட்டணம், கடன் மீட்பு கொள்கைகள், பிறரிடம் கடனை ஒப்படைப்பது தொடர்பான விவரங்களும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்க RBI இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

News April 16, 2024

தேர்தல் பத்திர ஊழலின் மூளையே மோடிதான்

image

தேர்தல் பத்திர ஊழலின் மூளையே மோடிதான் என்று ராகுல் சாடியுள்ளார். தேர்தல் பத்திரத்தை முடக்கினால், அனைவரும் வருந்துவர் என மோடி தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடியாக, உலகத்திலேயே மிகப்பெரிய பணப்பறிப்பு இதுதான்,. சிபிஐ வழக்குப்பதிந்த அடுத்த நாளில், பாஜகவுக்கு தேர்தல் பத்திர நிதி வந்தது குறித்தும், அதன்பிறகு சிபிஐ வழக்கை முடித்தது குறித்தும் மோடி பதிலளிக்க வேண்டுமென ராகுல் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!