India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
★ இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 808.6 கோடி மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். ★ இந்தியாவில் 1,27,760 கிமீ நீள ரயில் பாதைகள் உள்ளன. ★ மிக வேகமான ரயில் வந்தே பாரத். ★ மெதுவாகச் செல்லும் ரயில் நீலகிரி பயணிகள் (மணிக்கு 10 கிமீ). ★ இந்தியாவிற்குள் மிக நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் விவேக் எக்ஸ்பிரஸ் (4,286கிமீ). ★ மிக நீளமான ரயில் நடைமேடை – கர்நாடகாவின் ஹூப்ளி (1507மீ).
UPSC முதன்மைத் தேர்வில் தமிழகத்தில் மொத்தம் 42 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் 2023ஆம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதில், நாடு முழுவதும் மொத்தம் 1,143 பேர் தேர்ச்சியடைந்த நிலையில், தமிழகத்தில் மட்டும் 42 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். புவனேஷ் ராம் என்பவர் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘அன்பே வா’ சீரியலை முடிவுக்கு கொண்டு வருகிறது சன் டிவி. அந்த நேரத்தில் புதிதாக ஒளிபரப்பாகப் போகும் ‘மல்லி’ என்ற சீரியலின் ப்ரோமோவும் வெளி வந்திருக்கிறது. இந்த சீரியலில் விஜய் வெங்கடேஷ், நிகிதா அகியோர் நடிக்கவுள்ளனர். அன்பே வா சீரியலில் இருந்து டெல்னா டேவிஸ் விலகியதால் அது முடிவுக்கு கொண்டு வரப்படுவதாக தெரிகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி வழங்கப்படும் செங்கோலை, கோயில் அறங்காவலர் ருக்மணியிடம் (கைம்பெண்) வழங்கக்கூடாது எனத் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. கோயிலுக்குள் இந்துக்கள் அனைவரும் தானே செல்கிறார்கள்? செங்கோல் வாங்குபவரும் இந்து தானே எனக் கேள்வி எழுப்பிய கோர்ட், இன்றைய நவீன உலகில் பிற்போக்குத்தனமாக வழக்குத் தொடர்வதா என மனுதாரருக்கு கண்டனம் தெரிவித்தது.
வாரத்தின் இரண்டாவது நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 456 புள்ளிகள் குறைந்து, 72,944 புள்ளிகளிலும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 125 புள்ளிகள் சரிந்து, 22,148 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. வங்கி சார்ந்த பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன. நாளை ராமநவமி என்பதால் பங்குச்சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் சர்வீசஸ் தேர்வில் கான்பூர் ஐ.ஐ.டி., முன்னாள் மாணவர் ஆதித்ய ஸ்ரீவத்சவா முதலிடம் பிடித்துள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் 1,016 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இதில் முதலிடம் பிடித்த ஸ்ரீவத்சவா, உ.பி.யின் லக்னோவைச் சேர்ந்தவர் ஆவார். எம்.டெக் முடித்த பின்னர், கோல்ட்மேன் சேக் நிறுவனத்தில் பணியாற்றிய அவர் மக்களுக்கு சேவையாற்ற சிவில் சர்வீசஸ் படிப்பைத் தேர்வு செய்துள்ளார்.
தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் பாஜக மகளிரணி செயலாளர் பானுப்ரியா, விவசாய அணி மண்டல தலைவர் சரவணக்குமார் உள்பட 85 பேர் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தமாகா சார்பில் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுகிறார். வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே உள்ள நிலையில், பாஜகவினர் திமுகவுக்கு தாவியுள்ளனர்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பணிகளுக்கான நடைபெற்ற UPSC முதன்மைத் தேர்வில், தமிழக அளவில் பிரசாந்த் என்பவர் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். சென்னை மருத்துவக் கல்லூரியில் 2022ஆம் ஆண்டு இளங்கலை மருத்துவப் படிப்பை நிறைவு செய்த பிரசாந்த், தேசிய அளவில் 78ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தத் தேர்வில், பார்வை மாற்றுத்திறனாளிகள் 6 பேர் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 1,016 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிரதமர் மோடியின் காலரைப் பிடித்து கேட்காதவரை, அவர் மதவெறியையும், வெறுப்பையும் பரப்புவாரென நடிகர் கிஷோர் காட்டமாக விமர்சித்துள்ளார். தனது இன்ஸ்டா பக்கத்தில், ரஃபேல் முதல் தேர்தல் பத்திரம் வரை மோடியும், பாஜகவும் நமது பணத்தை சாப்பிட்டு விட்டு, யாரோ சாப்பிடும் இறைச்சி குறித்து கேள்வி கேட்கின்றனர். தேர்தல் நடத்தை விதிகளை மீறும் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட என்ன தகுதி இருக்கிறதென அவர் வினவியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் 2 வெற்றி 4 தோல்விகளுடன் மும்பை அணி புள்ளிப் பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் மும்பை அணியின் சுமாரான பவுலிங்கே அந்த அணியின் தோல்விக்கு காரணம் என மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் லாரா கூறியுள்ளார். மேலும், இனி வரும் போட்டிகளில் மும்பை அணி வெற்றிபெற வேண்டுமென்றால் 2- 3 மேட்ச் வின்னிங் பவுலர்களை கண்டறிய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.