news

News April 16, 2024

லோன் வாங்கியோருக்கு அதிர்ச்சி செய்தி

image

நடப்பு நிதியாண்டிலும் (2024-2025) ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்பில்லை என்று மோர்கன் ஸ்டான்லி வங்கி தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு பின்னர் நிலவும் மிக அதிக பணவீக்கம் காரணமாக ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை மிக அதிகமாக (6.5%) நிர்ணயித்துள்ளது. இதனை குறைத்தால்தான் நாம் வாங்கும்/வாங்கிய கடன்களின் மீதான வட்டி குறையும். இந்த அறிக்கை லோன் வாங்கியோரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

News April 16, 2024

முடியாது என நினைத்ததை முடித்துக் காட்டியது திமுக

image

மகளிருக்கு இலவசப் பேருந்து உள்பட செய்ய முடியாது என நினைத்தத் திட்டங்களை செய்து காட்டியது திமுக அரசு என கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி செய்துங்கநல்லூரில் பிரசாரம் மேற்கொண்ட அவர், மாணவர்களின் படிப்பு தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக புதுமைப் பெண் திட்டம் மூலம் மாணவிகளுக்கு ₹1000, நான் முதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கு ₹1000 என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

News April 16, 2024

IPL: கொல்கத்தா அணி பேட்டிங்

image

ஐபிஎல்லில் இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்றுள்ள RR அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் KKR அணி பேட்டிங்கை தொடங்க உள்ளது. புள்ளிப் பட்டியலில் RR முதல் இடத்திலும், KKR 2ஆவது இடத்திலும் உள்ளன. இன்று வெற்றிபெற்றால் KKR முதல் இடத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?

News April 16, 2024

தேர்தலை முன்னிட்டு சிறப்பு ரயில் அறிவிப்பு

image

தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர் செல்பவர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 18, 20 தேதிகளில் மாலை 4:45க்கு தாம்பரத்தில் இருந்து கிளம்பும் ரயில் மறுநாள் குமரியை அடையும். குமரியில் இருந்து ஏப்.19, 21 இல் இரவு 8:30க்கு புறப்படும் ரயில் மறுநாள் சென்னையை அடையும். இதேபோல் ஏப்.18, 20 தேதிகளில் சென்னை – கோவைக்கும், ஏப்.19,21 இல் கோவை – சென்னைக்கும் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 16, 2024

₹200, ₹300, ₹500 கொடுத்து அசிங்கப்படுத்த மாட்டேன்

image

தேனி மக்களை விலைக்கு வாங்க முடியாது என டிடிவி தினகரன் உறுதியளித்தார். மக்களவைத் தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் போடிநாயக்கனூரில் பேசிய தினகரன், “₹200, ₹300, ₹500 பணம் கொடுத்து உறவினர்களை அசிங்கப்படுத்த நினைக்கவில்லை. தான் வெற்றிபெற்றால் தேனி தொகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதாக” உறுதியளித்துள்ளார்.

News April 16, 2024

EVM இயந்திரங்களை தயாரிப்பதே பாஜகவினர் தான்!

image

EVM இயந்திரத்தை தயாரிக்கும் நிறுவனத்தின் இயக்குநர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள் என ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை 100% சரிபார்க்க கோரிய வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றத்தில் மனுதாரர் வாதத்தை முன்வைத்தார். மேலும், தற்போது உள்ள நடைமுறைப்படி ஒப்புகைச் சீட்டு உள்ளே விழுகிறதா? இல்லையா? என்பது கூட தெரியவில்லையெனவும் முறையிட்டார். தொடர்ந்து, உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.

News April 16, 2024

அதிமுக எம்.எல்.ஏக்களால் எம்.பியானவர் அன்புமணி

image

அதிமுக எம்.எல்.ஏக்கள் ஓட்டு போட்டதால் தான் அன்புமணி எம்.பியாக இருக்கிறாரென அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பதிலடி அளித்துள்ளார். தர்மபுரியில் அதிமுக வேட்பாளர் அசோகனை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பாக அதிமுக பிறப்பித்த உத்தரவை திமுக நீட்டிக்கவில்லை. நீட் தேர்வை கொண்டு வந்தது பாஜக. அமல்படுத்தியது பாஜக. அவர்களுடன் தான் பாமக கூட்டணி வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

News April 16, 2024

ரஜினி படத்தில் இணையும் தெலுங்கு நடிகர்?

image

தற்போது ‘வேட்டையன்’ படத்தின் நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் ஸ்ருதிஹாசன், சத்யராஜ் ஆகியோர் நடிப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

News April 16, 2024

18 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை

image

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்களுக்கும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையேயான மோதலில் 18 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கன்கெர் மாவட்டத்தில் நடைபெற்ற பயங்கர மோதலில் பாதுகாப்புப் படையினர் 3 பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்களிடம் இருந்து ஏகே-47 ரக துப்பாக்கிகள், நவீன ஆயுதங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

News April 16, 2024

முற்பகல் 11 மணிக்குள் தடுப்பூசி செலுத்த அறிவுரை

image

மருந்து சேமிப்பு கிடங்குகள், குளிர் பதனக் கிடங்குகளைக் காற்றோட்டமாக வைத்திருக்க மாவட்ட சுகாதார அலுவலர்களுக்குப் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான சுற்றறிக்கையில், வெயில் காரணமாகத் தடுப்பூசியின் வீரியம் குறையாமல் இருப்பதற்காக, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை முற்பகல் 11 மணிக்கு முன்பே நிறைவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!