news

News April 26, 2025

நயன்தாராவால் நெட்பிளிக்ஸ் தலையில் விழுந்த துண்டு?

image

நயன்தாரா, மாதவன், சித்தார்த் நடித்து நேரடி OTT ரிலீசாக நெட்பிளிக்ஸில் வெளிவந்த ‘டெஸ்ட்’ படம் பயங்கர நெகட்டிவ் ரிவ்யூவையே பெற்றது. இந்த படத்தை வாங்கி, வெளியிட்ட நெட்பிளிக்ஸ் தளம் தற்போது தலையில் துண்டு போட்டுக்கொண்டு உட்கார்ந்துள்ளது. ஆம், இந்த படத்தை ₹55 கோடிக்கு வாங்கி வெளியிட்ட நெட்பிளிக்ஸுக்கு ₹5 கோடி கூட திரும்ப கிடைக்கவில்லையாம். படம் பார்க்காமலா OTT தளங்களிலும் வாங்குறாங்க?

News April 26, 2025

செந்தில் பாலாஜிக்கு பதில் இவரா?

image

அமைச்சர் பதவியா?, ஜாமினா? என்று உச்சநீதிமன்றம் செக் வைத்ததால், செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை, அவருக்கு பதில் ரகுபதி தாக்கல் செய்தார். இதனால், செந்தில் பாலாஜி ராஜினாமா செய்வார் என கருதப்படுகிறது. இதனால், அவரிடம் இருக்கும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை இலாகாவை ரகுபதியிடமும், மின்வாரிய இலாகாவை முத்துசாமியிடமும் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News April 26, 2025

CSK ஏலத்தில் தவறு? ஒப்புக்கொண்ட ஃப்ளமிங்

image

நடப்பு ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடி வரும் அணியாக CSK உள்ளது. நேற்றைய SRH அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு CSK ஏலம் குறித்து பேசிய அணியின் ஹெட் கோச் ஸ்டீபன் ஃபிளமிங், எங்கள் விளையாட்டைப் பார்க்கையில், ஏலத்தில் சரியாகச் செயல்பட்டோமோ என்ற கேள்வி எழுவது சரியானதே எனக் கூறியுள்ளார். மேலும், ஃபார்ம் பிரச்னைகள், கைகூடாத யுக்திகள் என பல பின்னடைவுகள் இருந்ததாகவும் ஃபிளமிங் கூறியுள்ளார்.

News April 26, 2025

கார்ல்சனுக்கு காத்திருக்கும் சவால்.. ஆனந்த் நம்பிக்கை

image

நார்வே செஸ் 2025 போட்டி மே 26 – ஜூன் 6 வரை ஸ்டாவங்கரில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன், இந்தியாவின் டி குகேஷ் மற்றும் அர்ஜுன் எரிகேசி ஆகியோருடன் விளையாடுவதை, ஒரு சவாலாக எதிர்நோக்கி இருப்பார் என விஸ்வநாதன் ஆனந்த் கூறியுள்ளார். கடந்தாண்டு, உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை இளம் வயதிலேயே பெற்ற குகேஷ், மிகவும் பலம் பொருந்தியவராக மாறியுள்ளார்.

News April 26, 2025

குழந்தைகளின் சிகிச்சை முடியட்டும்.. கெஞ்சும் Pak. தந்தை!

image

இந்திய அரசு பாகிஸ்தானியர்களின் விசாவை ரத்து செய்துள்ளது. இதனால், தற்போது தன் 2 குழந்தைகளின் இதய பிரச்னையின் சிகிச்சைக்காக இந்தியா வந்துள்ள ஒரு பாகிஸ்தானிய தந்தை தவித்து நிற்கிறார். டெல்லியில் அடுத்த வாரம் ஆப்ரேஷன் நடக்க இருக்கும் நிலையில், அவர்களை வெளியேறும்படி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் யாராவது கொஞ்சம் தயவு பண்ணுங்க என கெஞ்சுகிறார். யாரோ செய்த தவறுக்கு, யாரோ தண்டனை அனுபவிப்பதா?

News April 26, 2025

ஹாலிவுட் நடிகை மரணம்… காரணம் தெரிந்தது

image

ஹாலிவுட் நடிகை லார் பார்க் லிங்கன் (63) மறைவுக்கு புற்றுநோயே காரணம் என்று அவரின் மகள் தெரிவித்துள்ளார். த்ரில்லர் படங்களான Friday the 13th Part VII: The New Blood, “House II: The Second Story” உள்ளிட்டவற்றில் நடித்தவர் லார் பார்க் லிங்கன். அண்மையில் அவர் மரணம் அடைந்தார். அதற்கான காரணம் தெரியாமல் இருந்தது. இந்நிலையில், மார்பக புற்றுநோய் பாதிப்பே காரணம் என்று மகள் பைபர் லிங்கன் கூறியுள்ளார்.

News April 26, 2025

திமுக-வின் அலட்சியத்தால் உயிரிழப்பு: இபிஎஸ்

image

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் திமுக ஆட்சியில் கோயில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை எனவும் குற்றம்சாட்டினார். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரண உதவியை உயர்த்தி வழங்கவும் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

News April 26, 2025

கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல்

image

இஸ்ரோ Ex தலைவர் <<16213450>>கஸ்தூரி ரங்கன்<<>> மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். விண்வெளி துறையில் இந்தியா மிகப் பெரும் உயரங்களை அடைவதற்கு வித்திடும் வகையில் பணியாற்றியவர் அவர் என புகழாரம் சூட்டியுள்ளார். விஞ்ஞானியாக மட்டுமின்றி திட்டக்குழு உறுப்பினர் உள்ளிட்ட உயர் பொறுப்புகளை அவர் வகித்துள்ளதாக தெரிவித்த CM ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

News April 26, 2025

இந்தியாவின் பாக். மருமகளுக்கு அடைக்கலம் கிடைக்குமா?

image

2023-ல் பாக். ல் இருந்து நேபாளம் வழியாக உ.பி வந்து தனது காதலரான சச்சின் மீனாவை மணந்தவர் சீமா ஹைதர். இந்த தம்பதிக்கு சமீபத்தில் குழந்தையும் பிறந்தது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானியர்களின் விசாக்களுக்கு இந்தியா கெடு விதித்துள்ள நிலையில், தான் பாகிஸ்தானின் மகள், ஆனால் இந்தியாவின் மருமகள் எனக் கூறும் சீமா, தன்னை இங்கேயே இருக்க அனுமதிக்குமாறு அரசிடம் சட்ட ரீதியாக முறையிட்டுள்ளார்.

News April 26, 2025

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்; நீரஜ் சோப்ரா தவிர்ப்பு

image

மே இறுதியில் தென் கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய தடகள சாம்பியன்ஷிப் (AFI) 2025 தொடரிலிருந்து ஈட்டி எறிதல் சாம்பியன் நீரஜ் சோப்ரா விலகியுள்ளார். டைமண்ட் லீக், உலக சாம்பியன்ஷிப் மற்றும் நீரஜ் சோப்ரா கிளாஸிக் 2025 போட்டியிலேயே அவர் கவனம் செலுத்தி வருவதால் இம்முடிவை எடுத்துள்ளார். அதேநேரம், 2017 ஆசிய போட்டியில் நீரஜ் தங்கம் வென்றிருந்தார். அதுவே அவரது கடைசி ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியாகும்.

error: Content is protected !!