news

News April 17, 2024

22 ஓவர்களில் 60 டாட் பால்…

image

17ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக துஷார் தேஷ்பாண்டே அதிக டாட் பால்களை வீசி சாதனை படைத்துள்ளார். மொத்தம் 22 ஓவர்களில் 60 டாட் பால்கள் வீசி அசத்தியுள்ளார். முன்னதாக, மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 4 ஓவர்கள் வீசி வெறும் 29 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

News April 17, 2024

அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைய தாமதமாகும்

image

அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்து வருவதால், வட்டி விகித குறைப்பு நடவடிக்கை மேலும் தாமதமாக வாய்ப்புள்ளதாக அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவெல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பணவீக்க விகிதம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 2 சதவீதத்திற்குள் தொடர்ந்தால் மட்டும் வங்கிகளுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும். இதனால் இந்தியாவிலும் ரெப்போ விகிதம் மாற்றமின்றி தொடர வாய்ப்புள்ளது.

News April 17, 2024

மோடியால் ஏன் இதைச் செய்ய முடியவில்லை?

image

நாட்டின் மிகப்பெரும் பணக்காரர்கள் 25 பேரின் ரூ.16 இலட்சம் கோடி கடனை மோடி தள்ளுபடி செய்துள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பிரசாரம் செய்த அவர், பணக்காரர்களின் கடனைத் தள்ளுபடி செய்த மோடியால் ஏழை விவசாயிகளின் கடனை ஏன் தள்ளுபடி செய்ய முடியவில்லை என மக்கள் கேட்பதாகத் தெரிவித்தார். மேலும், அந்தப் பணம் 25 ஆண்டுகளுக்கான 100 நாள்கள் வேலைத் திட்டத்திற்கான பணத்துக்குச் சமம் என்றார்.

News April 17, 2024

தமிழ்நாட்டில் இதுவரை ரூ.1,297 கோடி பறிமுதல்

image

தமிழ்நாட்டில் இதுவரை ₹1,297 கோடி மதிப்பிலான பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும், 39 தொகுதிகளில் 8,400 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகப்பட்சமாகத் திருச்சியில் 3,369 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுவோர் நாளை (ஏப்.18) வரை தபால் வாக்குகளைச் செலுத்தலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

News April 17, 2024

அமேதியில் போட்டி? ராகுல் விளக்கம்

image

அமேதியில் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் கட்சி முடிவு செய்யும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கேரளாவின் வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள அவர், கடந்த தேர்தலை போல மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிடுவாரா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில் ராகுல் இவ்வாறு விளக்கமளித்துள்ளார். 2004 முதல் 2014 வரை அங்கு வென்ற ராகுல், கடந்த தேர்தலில் பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார்.

News April 17, 2024

பாஜகவில் தலைவர்கள் இல்லை என்றால் அதிமுகவுக்கு வாங்க

image

பாஜகவில் தலைவர்கள் இல்லையென்றால் அனைவரும் அதிமுகவுக்கு வந்துவிடலாம் என ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். இத்தனை நாள்களாக அதிமுக தலைவர்கள் சிலைக்கு பாஜகவை தேர்ந்த யாரும் மரியாதை செய்யாத நிலையில், தேர்தல் வெற்றிக்காக தற்போது பாஜகவினர் நடிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக இன்று காலை பாஜக மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி செல்வம் ஜெயலலிதா நினைவிடம் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

News April 17, 2024

2553 மருத்துவர்களுக்கான காலிப் பணியிடங்கள்

image

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள தற்காலிக மருத்துவர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், 2553 மருத்துவருக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. மருத்துவத் துறையில் எம்.பி.பி.எஸ் (MBBS) முடித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தவர்கள், <>mrb.tn.gov.in<<>> என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மாதம் ₹56,100-1,77,500 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது.

News April 17, 2024

பாஜக ஆட்சியில் மொபைல் கட்டணம் குறைவு

image

பாஜக ஆட்சியில் மொபைல் ரீசார்ஜ் கட்டணம் குறைவாக இருப்பதாக மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். திரிபுராவில் பிரசாரம் செய்த அவர், பாஜக ஆட்சியில் ரீசார்ஜ் கட்டணம் ரூ.400 – ரூ.500ஆக உள்ளது. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் ரூ.4,000 – ரூ.5,000க்கு குறையாமல் வரும் என்றார். வடகிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் வாக்குகளுக்காக மட்டுமே பயன்படுத்தியது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒரே கொள்கை ‘கொள்ளை’ மட்டுமே என்றார்.

News April 17, 2024

ஒளிமயமான எதிர்காலத்திற்கு ஆட்சி மாற்றமே தீர்வு

image

அதிகார மமதையில் ஆட்டம் போடும் ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்டுவதற்கான தேர்தல் இது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில், நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது ஒன்றே தீர்வு என வலியுறுத்தியுள்ளார். மேலும், தமிழகத்தின் பகைவர்களை, தமிழக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் எதிரிகளை வீழ்த்துவோம் என சூளுரைத்துள்ளார்.

News April 17, 2024

சத்தீஸ்கரில் போலி என்கவுன்டர்கள்

image

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே நேற்று நடந்த தாக்குதலில் 29 நக்சல்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் நக்சலைட்டுகளுக்கு எதிராகத் தங்கள் அரசு திறம்பட நடவடிக்கை எடுத்து வந்ததாக சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் கூறியுள்ளார். மேலும், தற்போது மாநிலத்தில் போலி என்கவுன்டர்கள் நடப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

error: Content is protected !!