India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன. விமான நிலையங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் விமான போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விமான செயல்பாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை அத்தியாவசியமற்ற பயணத்தை தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 30 நிமிடங்களில் வாக்குப் பதிவுக்கான நேரம் நிறைவடைய உள்ளது. சென்னை உள்பட சில மாவட்டங்களில் வாக்குப் பதிவு மந்த நிலையிலேயே இருந்து வந்தது. வெயில் காரணமாக சிலர் வாக்களிக்க வராத நிலையில், தற்போது வெயில் குறையத் தொடங்கியுள்ளதால் மக்கள் அனைவரையும் தவறாமல் வாக்குச் சாவடிக்குச் சென்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும்.
நம் முன்னோர்கள் கட்டிக்காத்த இந்தியாவை மீட்பதற்காக வாக்களித்துள்ளேன் என இயக்குநர் அமீர் கூறியுள்ளார். மதுரை அம்பிகா கல்லூரியில் வாக்களித்த பின் பேசிய அவர், சாதி, மதம் கடந்து நாட்டின் நலன் கருதி வாக்களிக்க வேண்டிய தருணம் இது. நாடு நன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வாக்களிப்பதுதான் சரியாக இருக்கும் என்றார். மேலும், மக்கள் அனைவரும் ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சென்னை திருவல்லிக்கேணி பல்லவன் வாக்குச்சாவடியில் EVM இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் அங்கு வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதையடுத்து பழுதான இயந்திரத்தை சரி செய்யும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். விரைவில் அங்கு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பலரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை என்று அண்ணாமலை குற்றம்சாட்டியிருக்கிறார். தான் போட்டியிடும் கோவை தொகுதியில் பல உதாரணங்களை எடுத்துக் கூறிய அவர், இவ்வாறு பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஒரே வாக்குச்சாவடியில் 850 வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டிருப்பதாக அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.
மக்கள் 100 சதவிகிதம் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். சென்னை பெசன்ட் நகர் வாக்குச் சாவடியில் தனது குடும்பத்துடன் அவர் வாக்கு செலுத்தினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தேனி தொகுதியில் தனக்கான ஆதரவு மிகவும் அமோகமாக இருப்பதாகக் கூறினார். மேலும், நடைபெற்று வரும் தேர்தலில் பாஜக கூட்டணியில் உள்ள தான் நிச்சயமாக வெற்றி பெறுவேன் எனத் தெரிவித்தார்.
நாகாலாந்தில் உள்ள 6 மாவட்டங்களில் பூஜ்ஜிய வாக்குகளே பதிவாகியுள்ளன. கிழக்கு நாகாலாந்து மக்கள் தனி யூனியன் பிரதேச கோரிக்கையை முன்வைத்து தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்க இஎன்பிஓ என்ற அமைப்பின் தலைமையில் மக்கள் முடிவெடுத்திருந்தனர். ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வேண்டுகோளுக்கு இணங்க முடிவு திரும்ப பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாது புதிய தலைமுறை வாக்காளர்கள், பெண்கள், முதியோர் என பலரும் வரிசையில் நின்று தங்கள் வாக்கை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், கோவை தேக்கம்பட்டியை சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற 108 வயது பாப்பம்மாள் பாட்டி வரிசையில் நின்று தனது ஜனநாயகக் கடமையாற்றியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
2026 சட்டப் பேரவைத் தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என நடிகர் கூல் சுரேஷ் அறிவித்துள்ளார். சென்னையில் இன்று வாக்களித்த பின் பேசிய அவர், கூல் சுரேஷ் கட்சி (CSK) என்ற பெயரில் புதிதாக கட்சி தொடங்க உள்ளதாகவும், விரைவில் தனது கட்சிப் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வேன் எனவும் கூறினார். மேலும், 2026 தேர்தலில் போட்டியிடாவிட்டால் தவெகவுக்கு தனது கட்சி ஆதரவளிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு எங்களில் ஒருவர் திருந்துவதற்கான வாய்ப்பு ஏற்படும் என சசிகலா தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாக்குச் சாவடியில் சசிகலா தனது வாக்கினை செலுத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் முடிவுகள் வெளியானப் பிறகு சிலர் போட்ட தப்புக் கணக்கு அவர்களுக்கு புரியும் என மறைமுகமாக எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்தார்.
Sorry, no posts matched your criteria.