India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶ஏப்ரல் – 20 | ▶ சித்திரை – 07
▶கிழமை: சனி | ▶திதி: துவாதசி
▶நல்ல நேரம்: காலை 07:30 – 08:30 வரை, மாலை 04:30 – 05:30 வரை
▶கெளரி நேரம்: காலை 10:30 – 11:30 வரை, மாலை 09:30 – 10:30 வரை
▶ராகு காலம்: காலை 09:00 – 10:30 வரை
▶எமகண்டம்: பிற்பகல் 01:30 – 03:00 வரை
▶குளிகை: காலை 06:00 – 07:30 வரை
▶சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்
▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்
ஒவ்வொரு வாக்காளர்களும், வாக்குச்சாவடியில் உள்ள ஆவணத்தில் கையெழுத்து போட்டு தான் வாக்களிக்க செல்ல வேண்டும் என்பது விதி. ஆனால், பல வாக்குச் சாவடிகளில் அப்படி செய்யாமல், அலுவலர்கள் ஆவண நோட்டீனை தங்கள் பக்கம் வைத்தே தலைகீழாக கையெழுத்து வாங்கினர். ஒவ்வொருவரிடமும் நோட்டினை அவர்கள் பக்கம் காண்பித்து கையெழுத்து வாங்குவதற்கு தாமதமாவதாகக் கூறி, சோம்பல்பட்டு இது போல செய்துள்ளனர்.
இந்திய அளவில் எந்தவொரு கூட்டணியிலும் இணையப் போவதில்லை என்று மிசோரம் முதல்வரும் மக்கள் முன்னணி தலைவருமான லால்டுகோமா அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நாங்கள் எங்கள் அடையாளத்தைத் தக்க வைத்துக்கொள்ள விரும்புகிறோம். டெல்லியில் இருந்து யாரும் எங்களைக் கட்டுப்படுத்த வேண்டாம். மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றால், எப்போதும் போல சுதந்திரமாக செயல்படவே விரும்புகிறோம் எனக் கூறினார்.
தேர்தலுக்கு மத்தியிலும் இந்தியா நிதி ஒழுங்கை பராமரித்து வருகிறது என்று ஐ.எம்.எஃப் ஆசிய-பசிபிக் துறை இயக்குநர் கிருஷ்ண சீனிவாசன் பாராட்டியுள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், மற்ற நாடுகளில் தேர்தல் ஆண்டில் நிதியை தாறுமாறாக பயன்படுத்துவது வழக்கம். ஆனால், இந்தியாவில் அப்படி நடக்கவில்லை. இத்தகைய காரணங்களால் இந்தியப் பொருளாதாரம், தொடர்ந்து உலகத்திலேயே பிரகாசமான இடத்தில் இருக்கும் என்றார்.
சிறுநீரகத்தில் உள்ள கற்கள் & நச்சுக்களை வெளியேற்றி, உடலைத் தூய்மைப்படுத்த (Detox) இளநீர் ஊறலை பருகலாம் என்று மருத்துவர் கௌதமன் பரிந்துரைக்கிறார். இரவு தூங்கப்போகும் முன் இளநீரை வெட்டி, அதில் நெருஞ்சில் & வெள்ளரி விதைகளை போட்டு மூடிவிடவும். 12 மணி நேரம் கழித்து, அந்த நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் 45 நாள்கள் குடித்து வந்தால் போதும், உடல்சூடு தணிவதுடன் சிறுநீரகக் கோளாறுகளும் நீங்கும்.
கார்த்தி நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் பான் இந்தியா முறையில் ‘சர்தார் 2’ படம் உருவாக இருப்பது தெரிந்ததே. கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கவிருக்கும் இந்தப் படத்தின் கதைக்களம் இந்தியாவையே ஆட்டிப்படைக்கும் போதை மாஃபியா கும்பல்களைப் பற்றிய அதிர்ச்சிகர செய்திகளை போட்டு உடைக்கும் வகையில் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் வடிவமைத்து உள்ளதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.
பிறந்து ஐந்தே மாதங்களான பச்சிளம் குழந்தை ஒன்று ₹4.2 கோடியை ஈட்டியுள்ளது என்று சொன்னால் நம்பமுடிகிறதா? தனது பேரக் குழந்தையான எக்கிராஹா ரோஹனுக்கு இன்போசிஸ் நாராயண மூர்த்தி ₹240 கோடி மதிப்பு கொண்ட 15 லட்சம் பங்குகளை பரிசாக கொடுத்திருந்தார். அவற்றுக்கான 2024 நிதியாண்டுக்கான சிறப்பு ஈவுத்தொகையாக ரூ.28 (20+8) அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அவருக்கு ₹4.2 கோடி கிடைக்க உள்ளது.
➤1534 – யாக்குவஸ் கார்ட்டியே தனது முதலாவது கடற்பயணத்தை ஆரம்பித்தார். ➤1902 – பியேர், மேரி கியூரி ஆகியோர் ரேடியம் குளோரைடைத் தூய்மைப்படுத்தினர். ➤1939 – ஈழத்து எழுத்தாளர் பிரமீள் பிறந்த நாள். ➤1946 – லீக் ஆஃப் நேஷன் கலைக்கப்பட்டு, அதன் பெரும்பாலான அதிகாரங்கள் ஐ.நா அவைக்கு வழங்கப்பட்டன. ➤1998 – 28 ஆண்டுகள் இயங்கிய ஜெர்மனியின் சிவப்பு இராணுவம் என்ற தீவிரவாத அமைப்பு கலைக்கப்பட்டது.
ஐ.பி.எல் தொடரில் அசத்தும் சஞ்சு சாம்சன் போன்ற நல்ல பார்மில் இருக்கும் வீரர் இந்திய டி20 அணிக்கு அவசியம் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எவ்வளவு பெரிய நட்சத்திர வீரர்கள் இருந்தாலும் அவர் முக்கிய வீரராக இருப்பதை நான் விரும்புகிறேன். அது போலவே ரிங்கு சிங்கை தேர்வுக் குழுவினர் மறந்து விடக் கூடாது என்றார்.
இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே பாஜகவை போன்று அதிகளவில் பொய் சொல்லக் கூடிய கட்சி வேறெதுவும் இல்லை என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். கவுதம் புத் நகரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், முதல் கட்ட வாக்குப்பதிவில் பாஜக முழுமையாக தோற்கும் என்றே தகவல்கள் வருகின்றன. பிரபஞ்சத்திலேயே மிகப்பெரிய பொய்யர்களான மோடி, அமித்ஷா சொல்வதை மக்கள் கேட்க விரும்பவில்லை என்றார்.
Sorry, no posts matched your criteria.