India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேர்தல்களை மட்டும் காரணமாக வைத்து, 144 தடை அமல்படுத்தப்படுவதை உச்சநீதிமன்றம் ஆய்வு செய்யவுள்ளது. ராஜஸ்தானின் பார்மரில் தேர்தலை காரணமாக வைத்து அமல்படுத்தப்பட்ட 144 தடையை எதிர்த்து தாக்கலான மனுவில், வாக்காளர் விழிப்புணர்வு கூட்டம் நடத்த அனுமதிக்கவில்லை என கூறப்பட்டிருந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், கூட்டத்தை அனுமதிப்பது குறித்து 3 நாளில் முடிவெடுக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மீண்டும் தேர்தல் பத்திரத் திட்டம் கொண்டு வரப்படும் என்று நிர்மலா சீதாராமன் சூசகமாக தெரிவித்துள்ளார். அந்தத் திட்டத்தை சட்டவிரோதம் எனக் கூறி, உச்சநீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து அரசியல் கட்சிகள் பெற்ற நிதி விவரம் வெளியாகி சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில் கருத்தரங்கு ஒன்றில் பேசிய நிர்மலா, அந்தத் திட்டம் திரும்ப கொண்டு வரப்பட சாத்தியமிருப்பதாக கூறினார்.
தமிழகத்தில் 2019 மக்களவைத் தேர்தலை விட 2024 தேர்தலில் 3% வரை வாக்குப் பதிவு சரிந்துள்ளது. இதுகுறித்து இன்று காலை சென்னை தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் நிலவிய கடும் வெயில் காரணமாக வாக்குப்பதிவு சரிந்ததாக விளக்கமளித்துள்ளார். ஆனால் நேற்றைய தினம் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, கடும் வெயில் இருந்தாலும் வாக்குப்பதிவு பாதிக்கவில்லை, வாக்கு சதவீதம் அதிகரித்ததாக கூறியிருந்தாா்.
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு தொடர்பாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று பிற்பகல் 12 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளிக்க இருந்தார். ஆனால், நேற்று 7 மணி வரை 72.09% வாக்குகள் பதிவானதாக முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், நள்ளிரவில் 69.46% மட்டுமே வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. இதனால், குழப்பம் எழுந்த நிலையில், சாகுவின் செய்தியாளர்கள் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் வட சென்னையில் 60.13%, தென் சென்னையில் 54.27%, மத்திய சென்னையில் 53.91% வாக்குகள் பதிவானதாக நள்ளிரவில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுவே, நேற்று மாலை இறுதியாக வெளியான அறிவிப்பில், வட சென்னையில் 69.26%, தென் சென்னையில் 67.82%, மத்திய சென்னையில் 67.35% என அறிவிக்கப்பட்டது. மாலை வெளியான அறிவிப்பிற்கும், நள்ளிரவில் வெளியான அறிவிப்பிற்கும் 13% வரை வாக்கு சதவீதம் மாறுபடுகிறது.
பாலஸ்தீனத்தை ஐ.நா. சபையின் உறுப்பினராக்க பரிந்துரைத்த தீர்மானத்தை அமெரிக்கா முறியடித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 12 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். சுவிஸ் & இங்கிலாந்து ஆகிய 2 நாடுகள் வாக்களிக்கவில்லை. தீர்மானத்துக்கு ஆதரவாக பெருவாரியான வாக்குகள் கிடைத்தபோதிலும், அமெரிக்கா தனது ‘வீட்டோ’ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்தில் (காலை 10 மணி வரை) 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். ஆனாலும், இன்றும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வெப்ப அலை வீசும். எனவே, பிற்பகல் நேரத்தில் முதியோர்கள் வெளியே வர வேண்டாம். நேற்று வெயில் தாக்கத்தால் 3 முதியோர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தேர்தலையொட்டி ஏப்.17, 18ஆம் தேதிகளில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்ட 7,299 பேருந்துகளில் 4.03 லட்சம் பேர் பயணித்துள்ளனர். 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது அரசுப் பேருந்துகளில் பயணித்தவர்களை விடவும் இத்தேர்தலுக்கு 1.48 லட்சம் பேர் கூடுதலாகப் பயணித்துள்ளனர். அதேபோல், தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின் போது அரசுப் பேருந்துகளில் பயணித்தவர்களின் எண்ணிக்கைய விட இது கூடுதல் ஆகும்.
இவிஎம், விவிபேட் இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகள், வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள் முன்னிலையில் சீலிடப்பட்டன. வாக்குப்பதிவு முடிந்ததும் வாகனங்களில் இயந்திரங்கள் எடுத்து செல்லப்பட்டு, ஸ்ட்ராங் ரூம்களில் வைத்த நடைமுறையை நேரம் வாரியாக தேர்தல் ஆணையம் வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்தது. பயன்படுத்தாத இவிஎம், விவிபேட் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டன.
இவிஎம் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவிஎம் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம்களுக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்புப் படையினர் 24 மணி நேர காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழக காவல்துறை அதிகாரிகள் 2வது கட்ட பாதுகாப்புப் பணியிலும், காவலர்கள் 3ஆவது கட்ட பாதுகாப்பு பணியிலும் அமர்த்தப்பட்டுள்ளனா்.
Sorry, no posts matched your criteria.