news

News April 20, 2024

எலான் மஸ்க் பயணம் ரத்துக்கு பாஜக காரணமா?

image

எலான் மஸ்க்கின் பயணம் தொடர்பாக சிவசேனா தலைவர் பிரியங்கா சதுர்வேதி பாஜகவை விமர்சித்துள்ளார். ஏப்ரல் 22ஆம் தேதி இந்தியாவில் பிரதமர் மோடியை, எலான் மஸ்க் சந்திப்பதாக இருந்த நிலையில், அந்த பயணத்தை அவர் தற்போது ஒத்திவைத்துள்ளார். இது தொடர்பாக பேசிய பிரியங்கா, “தன்னுடைய பயணத்தின் மூலம் பாஜக அரசியல் ஆதாயம் அடைய முயற்சிக்கும் என்பதால் எலான் பயணத்தை ஒத்திவைத்திருப்பாரோ”? என்று சந்தேகம் எழுப்பியுள்ளார்.

News April 20, 2024

இஸ்ரேல் – ஈரான் போரில் இந்தியாவின் சவால்

image

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் வெடித்துள்ள சூழலில் இரு நாடுகளுக்கும் இந்தியர்கள் பயணிக்க வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேல் – ஈரான் மோதலில் மேற்கு ஆசிய நாடுகளில் வசிக்கும் இலட்சக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பே இந்தியாவிற்கு பெரும் சவாலாக இருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர். தற்போது இஸ்ரேலில் சுமார் 18 ஆயிரம் இந்தியர்களும், ஈரானில் சுமார் 10 ஆயிரம் இந்தியர்களும் வசிக்கின்றனர்.

News April 20, 2024

அந்நியச் செலாவணி கையிருப்பு சரிவு

image

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஏப்ரல் 12ஆம் தேதி நிலவரப்படி, $5.40 பில்லியன் சரிந்து $643.16 பில்லியனாக குறைந்துள்ளது. அதற்கு முந்தைய வாரம் $648.56 பில்லியன் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியிருந்தது. தங்க கையிருப்பு $1.24 பில்லியன் அதிகரித்து $55.79 பில்லியனாக உள்ளது. Special Drawing Rights பொறுத்தமட்டில், $93 மில்லியன் சரிந்து $18.07 பில்லியனாக உள்ளது.

News April 20, 2024

பணப்பட்டுவாடா இல்லாத நேர்மையான தேர்தல்

image

தென்காசியில் பணப்பட்டுவாடா இல்லாமல் நேர்மையான முறையில் தேர்தல் நடந்ததாக புதக தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், குண்டூசி அளவுகூட பிரச்னை ஏற்படாமல் தேர்தலை நடத்திய மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு நன்றி எனத் தெரிவித்தார். மேலும், தென்காசியில் எந்தக் கட்சியும் பணம் கொடுக்கவில்லை எனக்கூறியவர், பணப்பட்டுவாடா செய்தால்தான் வெற்றிபெற முடியும் என்ற நிலை மாறியுள்ளது என்றார்.

News April 20, 2024

அதிக வாக்குப்பதிவு தேர்தல் முடிவுகளை பாதிக்குமா?

image

வாக்குப்பதிவு அதிகமாக இருந்தால் ஆட்சி மாற்றம் நடக்கும் எனப் பொதுவாகப் சொல்வதுண்டு. ஆனால், வாக்குப்பதிவு சதவீதத்திற்கும் தேர்தல் முடிவுகளுக்கும் சம்பந்தமில்லை என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். அதே நேரம், வாக்குப்பதிவு அதிகமாக உள்ள தொகுதிகளில் போட்டி கடுமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இரு தரப்பு மக்கள் தங்கள் தரப்பை வெற்றிப் பெறச் செய்ய பெருமளவில் வாக்களிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

News April 20, 2024

7 தனித் தொகுதியிலும் 2019ஐ விட மந்தமான வாக்குப்பதிவு

image

கடந்த 2019 தேர்தலை விட இந்த 2024 தேர்தலில் தமிழகத்தில் உள்ள 7 தனித் தொகுதிகளின் வாக்கு சதவீதமும் குறைந்துள்ளது. திருவள்ளூர் (72.33 – 68.31%), காஞ்சிபுரம் (75.28 – 71.55%), விழுப்புரம் (78.62 -76.44%), நீலகிரி (73.99 – 70.93%), சிதம்பரம் (77.91 – 75.32%), நாகை (76.88 – 71.55% ), தென்காசியில் (71.37 – 67.55%) வாக்குகள் பதிவாகியுள்ளன. நாகையில் கடந்த தேர்தலை விட 5% வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது.

News April 20, 2024

பறவைக் காய்ச்சல் எப்படி பரவும்? அறிகுறிகள் என்ன?

image

பறவைக் காய்ச்சல் பண்ணைக் கோழிகள் மட்டுமல்லாமல், வீட்டில் வளர்க்கப்படும் கோழிகளுக்கும் எளிதாக பரவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கோழிகள் மூலமாக தான் இந்த காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுகிறது. பறவைக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் அனைத்தும் சாதாரண சளி, காய்ச்சல் மற்றும் கொரோனா அறிகுறிகளுடன் ஒத்துப்போகின்றன. அதாவது, இருமல், வயிற்றுப்போக்கு, மூச்சுத் திணறல், தலைவலி, தசை வலி, தொண்டை வலி போன்றவை தான்.

News April 20, 2024

கோழிப் பண்ணைகளில் கண்காணிப்பு தீவிரம்

image

நாமக்கல் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கோழிப் பண்ணைகளிலும், கோழிகளை தீவிரமாக கண்காணிக்க கால்நடை நோய் தடுப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. கேரளா குட்டநாடு பகுதியில் வாத்துகள் கொத்து கொத்தாக செத்து மடிந்தன. அவற்றை பரிசோதித்ததில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள கோழிப் பண்ணைகளில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

News April 20, 2024

பாஜகவை விட ஆபத்தானவர் நிதிஷ்

image

பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பை விட பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆபத்தானவர், மோசமானவர் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றம்சாட்டியுள்ளார். பீகாரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், கட்சியைத் தொடங்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை இருக்குமென்றும், ஆனால் நிதிஷுக்கு எந்தக் கொள்கையும் கிடையாது என்றும் தெரிவித்தார். நிதிஷ் பலமுறை கூட்டணிக்கு துரோகம் இழைத்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

News April 20, 2024

லோகேஷ் கனகராஜின் ‘LCU’ குறும்படம்

image

‘LCU’-வின் ஆரம்பக் கதையைக் கூறுவதற்காக, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது ஒரு குறும்படத்தை இயக்கி வருகிறார். இதில், நரேன், காளிதாஸ் ஜெயராம், அர்ஜூன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது. குறும்படத்தின் மொத்த நீளம் வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே. இக்குறும்படம் இன்னும் சில மாதங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!