India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நகரி சட்டமன்ற தொகுதியில் நடிகையும், ஆந்திர அமைச்சருமான ரோஜா வேட்புமனு தாக்கல் செய்தார். ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்ற தொகுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பில் 3ஆவது முறையாக போட்டியிடும் அவர், தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். கடந்த 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல்களில் இதே தொகுதியில் இருந்து குறைவான வாக்கு வித்தியாசத்தில் இவர் வெற்றி பெற்றார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த 45,509 பேருக்கு விரைவில் ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விண்ணப்பதாரர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் எனக் கூறியுள்ள அதிகாரிகள், அதன் பிறகு உணவு வழங்கல் துறை அலுவலகத்தில் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம் எனக் கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு ஐந்து மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, இரவு 7 மணி வரை ஈரோடு, கிருஷ்ணகிரி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் ஆங்காங்கே மழை பெய்துவருவதால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
தூர்தர்ஷனின் லோகோ, சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு ஊடக வல்லுநர்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஜவகர் சிர்கார், லோகோ மட்டுமல்ல தூர்தர்ஷன் முழுவதுமே காவிமயமாகியுள்ளது. பாஜகவின் செய்திகள் மட்டுமே ஒளிபரப்பப்படுகின்றன எனப் பதிவிட்டுள்ளார்.
400 இடங்கள் என்று பாஜக காண்பித்து வந்த படம், முதல் கட்ட வாக்குப்பதிவின் போதே தோல்வி அடைந்துவிட்டதாக தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார். பிகாரில் ஜமுய், நவாடா, கயா மற்றும் அவுரங்காபாத் ஆகிய 4 தொகுதிகளில் நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் 48.88 சதவீத வாக்குகள் பதிவாகின. இதுகுறித்து பேசிய தேஜஸ்வி, பீகார் மக்கள் தேர்தல் முடிவில் பாஜகவுக்கு வரலாறு காணாத அதிர்ச்சியை தர இருக்கிறார்கள் என்று கூறினார்.
கடலூர் மாவட்டத்தில் 1993 இல் போலீசாரின் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட ராஜாக்கண்ணு குடும்பத்திற்கு இறுதி இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதில் தமிழக அரசின் நிலையை தெரிவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கெனவே இடைக்கால இழப்பீடு வழங்கப்பட்டது. இந்த உண்மை சம்பவத்தைத் தழுவி ‘ஜெய் பீம்’ திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய மதுபானக் கொள்கை முறைகேட்டு வழக்கில் ஆம் ஆத்மி மூத்த தலைவர் மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறையினர் கடந்த ஆண்டு கைது செய்தனர். தற்போது திஹார் சிறையில் இருக்கும் அவர், நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இன்று அந்த மனுவை விசாரித்த நீதிபதி, இருதரப்பு வாதங்களையும் கேட்டபின் தீர்ப்பை வரும் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
பாஜக வேட்பாளர்கள் தோல்விக்கு முன்னுரை பாடத் தொடங்கி விட்டதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது அறிக்கையில், தங்களுக்கு தோல்வி உறுதி என்றவுடன் வாய்ப்பறை கொட்டிய அண்ணாமலை, தமிழிசை, வினோஜ் பி.செல்வம் போன்றவர்கள் ஒப்பாரி வைப்பதாக விமர்சித்துள்ளார். தேர்தல் ஆணையம் யாருடைய அதிகாரத்தின்கீழ் வருகிறது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
உலகளவில் நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வருவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவது குறித்து பதில் அளித்த அவர், டாலருக்கு நிகரான ரூபாய் மட்டுமல்ல, மற்ற நாடுகளின் நாணயங்களின் மதிப்பும் ஏற்ற இறக்கமாக இருப்பதாகத் தெரிவித்தார். அமெரிக்க பொருளாதாரமும், டாலரின் நிலையும் கடினமடையும் போது ரூபாய் மதிப்பில் ஏற்ற இறக்கம் இருக்கும் என்றார்.
கடன் வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம், கடன் குறித்த தகவல்களை முழுமையாக தெரிவிக்க வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. வட்டி, கூடுதல் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கவும், குறிப்பிடப்படாத எந்த ஒரு கட்டணத்தையும் அவர்களிடம் இருந்து வசூலிக்கவும் கூடாது என உத்தரவிட்டுள்ள ரிசர்வ் வங்கி, இந்த நடைமுறையை அக்டோபர் 1 முதல் பின்பற்ற வேண்டும் எனக் கூறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.