India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் நடக்கும் கடைசி தேர்தல் இதுதான் என எம்.பி.கனிமொழி கூறியுள்ளார். விருதுநகரில் பிரசாரம் மேற்கொண்ட அவர், “தமிழ்நாட்டிற்கு பாஜக அரசால் எந்த திட்டமும் வராது. மழை, வெள்ளம் வந்தால், நிவாரணம் கூட வராது. நாம் கஷ்டப்பட்ட சமயத்தில் ஒரு முறை கூட வராத பிரதமர் மோடி, தற்போது தேர்தலுக்காக தமிழ்நாட்டையே சுற்றி சுற்றி வருகிறார்” எனத் தெரிவித்தார்.
தனுஷூடன் சண்டை போட்டு 6 வருடங்கள் பேசாமல் இருந்ததாக நடிகர் ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “சில நடிகர்கள், இயக்குநர்களுடன் மட்டும் தான் சினிமாவைத் தாண்டிய நட்பு அமையும். அப்படியான நல்ல நட்பு எனக்கும் தனுஷூக்கும் உண்டு. நண்பர்கள் என்றால் சண்டை வருவதும் சகஜம் தான். இப்போது எல்லாப் பிரச்சினைகளும் சரியாகி விட்டது. பழையபடி நல்ல நண்பர்களாக இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: அடக்கமுடைமை
▶குறள் எண்: 126
▶குறள்: ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.
▶விளக்கம்: ஒரு பிறப்பில் ஆமையைப் போல 5 பொறிகளையும் அடக்கி வாழும் வல்லமை பெற்றிருந்தால், அது காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும்.
I.N.D.I.A. கூட்டணியினர் கேலிக் கூத்து செய்து கொண்டிருப்பதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். நாமக்கல்லில் பிரசாரம் மேற்கொண்ட அவர், “அமைச்சர் உதயநிதி, பிரதமர் மோடியை 29 பைசா மோடி என அழைப்பாராம். அடிப்படையில் எதுவுமே தெரியாத தற்குறி அவர். எனவே, நாமும் உதயநிதி ஸ்டாலினுக்கு பெயர் வைப்போம். கஞ்சா உதயநிதி ஸ்டாலின் என பெயர் வைப்போம். முதல்வருக்கு விலை உயர்வு முதல்வர் என பெயர் வைப்போம்” எனத் தெரிவித்தார்.
விஜய் தேவரகொண்டா, மிர்னால் தாகூர் நடித்துள்ள ‘ஃபேமிலி ஸ்டார்’ திரைப்படம், நாளை (ஏப். 5) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும், வல்லவன் வகுத்ததடா, வொயிட் ரோஸ், டபுள் டக்கர், ஒரு தவறு செய்தால், இரவின் கண்கள் உள்ளிட்ட சிறிய பட்ஜெட் படங்களும் நாளை திரைக்கு வருகின்றன. இதனைத் தொடர்ந்து, தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர் நடித்த ‘ஹனுமான்’ திரைப்படம், ஹாட்ஸ்டார் OTT தளத்தில் நாளை வெளியாகிறது.
இன்று (ஏப்ரல் 5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் வீரர் ஷஷாங் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார். நேற்றைய போட்டியில், 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என விளாசி 61 ரன்கள் குவித்த அவர், அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் அணியால் தவறுதலாக வாங்கப்பட்ட இவர், தற்போது அணிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடி தந்துள்ளார். இதனால் பஞ்சாப் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்.
கோடை காலத்தை முன்னிட்டு, சென்னை – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எழும்பூரில் இருந்து நாளை (ஏப்.5) 6, 7, 12, 13, 14, 19, 20, 21, 26, 27, 28 ஆகிய தேதிகளில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
திமுகவில் உழைத்து ஓடாய் தேய்ந்தவர்களுக்கு பதவி கிடைக்காது, வாரிசுகளுக்கு தான் பதவி கிடைக்கும் என இபிஎஸ் கூறியுள்ளார். கோவையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர், “நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரசும், திமுகவும் தான். ஆனால், திமுகவினர் பொய் பேசி நீட் தேர்வை எதிர்க்கின்றனர். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர்” எனத் தெரிவித்தார்.
இன்று (ஏப்ரல் 5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
Sorry, no posts matched your criteria.