India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 266 ரன்கள் எடுத்துள்ளது. அதிரடியாக ஆடிய டிராவிஸ் ஹெட் 89, அபிஷேக் ஷர்மா 46, ஷாபாஸ் 59* ரன்கள் எடுத்தனர்.DC சார்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதையடுத்து DC அணிக்கு 267 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் மூன்றாவது முறையாக SRH 250+ ரன்கள் எடுத்துள்ளது.
தமிழ்நாடு மகிளா காங்., தலைவராக இருந்த சுதா ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டு ஹசீனா சையத் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனத்திற்கு கார்கே ஒப்புதல் அளித்துள்ளதாக காங்., பொதுச்செயலாளர் KC வேணுகோபால் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்பாக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டு செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார். தற்போது தேர்தல் முடிந்த மறுநாளே மகிளா காங்கிரசுக்கும் தலைவர் மாற்றப்பட்டுள்ளார்.
பாரிசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி பெற்றுள்ளார். ஒலிம்பிக் போட்டிகள் பாரிசில் ஜூலை 26 – ஆகஸ்ட் 11 வரை நடைபெறுகிறது. இதில் மல்யுத்த விளையாட்டிற்கான தகுதிப் போட்டிகள் கிர்கிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் 50 கிலோ எடைப்பிரிவில், கஜகஸ்தான் வீராங்கனை லாராவை வீழ்த்தி தகுதி பெற்றுள்ளார் வினேஷ் போகத்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டிங்கில் உள்ளது. காமெடி, சென்டிமெண்ட் கலந்த குடும்ப கதையான இந்த சீரியலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இந்த சீரியலில் மனோஜ் என்ற பெயரில் காமெடி ரோலில் நடித்து வரும் ஸ்ரீதேவாவுக்கு சினிமா வாய்ப்பு வந்துள்ளது. அவருக்கு ஜோடியாக நடிகை திவ்யா துரைசாமி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
பினராயி விஜயன் காங்கிரஸை மட்டுமே தாக்கி பேசி வருவதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். கேரளாவின் பத்தினம் திட்டா வேட்பாளரை ஆதரித்து அவர் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், பினராயி விஜயன் பாஜகவிடம் சமரசம் ஆகிவிட்டார். ராகுலை விமர்சிக்கவே அவருக்கு நேரம் சரியாக இருக்கிறது. பாஜகவுக்கு எதிராக பினராயி விஜயன் எதையும் பேச மறுப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனத் தெரிவித்தார்.
இடஒதுக்கீட்டை ரத்து செய்ய பாஜக அனுமதிக்காது என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தாக காங்கிரஸ் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான கட்சி என்ற அவர், நாடாளுமன்றத்தில் இடஒதுக்கீடு குறித்த விவாதத்தின் போது, ராஜீவ் காந்தி அதற்கு எதிராக இரண்டரை மணி நேரம் பேசினார் என்றார். மேலும், 27% இடஒதுக்கீடு அமலானதற்கு பாஜக முக்கிய காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஊபர் டாக்ஸியில் உடைமைகளை மறந்து விட்டுச் சென்ற வாடிக்கையாளர்கள் குறித்து அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, டெல்லி வாடிக்கையாளர்கள் அதிக உடைமைகளை மறந்து சென்று 2ஆவது ஆண்டாக முதல் இடம் பிடித்துள்ளனர். மும்பை 2ஆவது இடத்தையும், பெங்களூரு 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. அதிகபட்சமாக போன்கள், பணப்பைகள், மேலாடைகள், சாவிகள், கண்ணாடிகள், நகைகள் போன்றவற்றை மறந்து விட்டு சென்றுள்ளனர்.
தன்னை ஆட்சியில் இருந்து அகற்ற இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள சக்திவாய்ந்தவர்கள் கைகோர்த்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகாவின் சிக்கபல்லாபுரா பகுதியில் பிரசாரம் செய்த அவர், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பாடுபட்டு வருவதாகக் கூறினார். தாய்மார்கள், சகோதரிகள், மகள்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கிறேன். மகளிரின் ஆசீர்வாதத்தால் சவால்களை எதிர்த்து வெற்றி பெறுவேன் என்றார்.
கேரளா மாநிலம் பாலக்காட்டில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ரோடு ஷோ நடத்தினார். பாலக்காடு தொகுதி பாஜக வேட்பாளர் கிருஷ்ணகுமாருக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்ட அவர், ரோடு ஷோவில் கலந்துகொண்டு ஆதரவு திரட்டினார். அண்ணாமலை போட்டியிட்ட கோவை தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 26ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடக்க உள்ள கேரளாவில் அவர் பரப்புரையை தொடங்கியுள்ளார்.
டெல்லிக்கு எதிரான போட்டியில் 46 ரன்னில் ஆட்டமிழந்த அபிஷேக் ஷர்மா புதிய சாதனை படைக்கும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். 11 பந்துகளில் 46 ரன்கள் இருந்த அவர், 50 ரன்கள் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 12ஆவது பந்தில் ஆட்டமிழந்தார். ஒரு பவுண்டரி அடித்திருந்தால் IPL இல் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்திருப்பார். ஜெய்ஸ்வால் 13 பந்தில் 50 ரன்கள் எடுத்ததே சாதனையாக உள்ளது
Sorry, no posts matched your criteria.