news

News April 5, 2024

100 நாள் வேலைத் திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும்

image

முதல்வா் ஸ்டாலின் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை நடத்தி வருவதாக ஆ.ராசா கூறியுள்ளார். அவிநாசியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர், “கொரோனா காலத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.4,000 வழங்கினாா். காலை உணவுத் திட்டம் போன்ற சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். மக்களவைத் தோ்தலில் வென்றால், 100 நாள் வேலைத் திட்டம் 150 நாள்களாகவும், கூலி ரூ.400-ஆகவும் உயா்த்தி வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

News April 5, 2024

தமிழகத்தில் அருள்பாளிக்கும் 18 சக்தி பீடங்கள்

image

இந்தியாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அம்மன் கோயில்கள் உள்ளன. வடக்கே காஷ்மீர் வைஷ்ணவ தேவி, தெற்கே கன்னியாகுமரி பகவதி அம்மன் தேவி, மேற்கே குஜராத்தின் அம்பாஜி மாதா கோயில் காவல் தெய்வங்களாக உள்ளன. மேலும், நாடு முழுவதும் 51 சக்தி பீடங்கள் உள்ளன, குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 18 பீடங்கள் அமைந்துள்ளன. அசாம் மாநிலத்தில் உள்ள காமாக்யா கோயில் முதல் சக்தி பீடமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 5, 2024

இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளை சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து 265 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 55 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இன்று முதல் ஏப்.7ஆம் தேதி வரை 925 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சொந்த ஊர்களிலிருந்து திரும்பவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

News April 5, 2024

திமுக தோல்வி உறுதி

image

திமுக ஆட்சிக்கு வந்தபின் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை சம்பங்கள் தினமும் அரங்கேறி வருகின்றன என்று இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். நீட் தேர்வை கொண்டு வந்தது காங். – திமுக தான். ஆனால், நீட் தேர்வை தடுத்து நிறுத்த போராடியது அதிமுக. தற்போதைய ஸ்டாலின் ஆட்சி மீது மக்கள் கோபமாக இருக்கின்றனர். வரும் தேர்தலில் திமுகவை தோற்கடித்து, வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர் என்று சூளுரைத்தார்.

News April 5, 2024

Apply Now: 968 காலிப் பணியிடங்கள்

image

மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்ப, மத்திய பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் ஆகிய பிரிவுகளில் டிகிரி அல்லது டிப்ளமோ படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ₹35,400 – 1,12,400. தகுதியுள்ளவர்கள் <>ssc.gov.in<<>> என்ற இணையதளத்தில் ஏப்.18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News April 5, 2024

நீலகிரி தொகுதியின் விருந்தாளி எல்.முருகன்

image

நீலகிரி தொகுதியின் விருந்தாளி எல்.முருகன் என ஆ.ராசா தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் முறைகேடு செய்ய வேண்டும் என்பதற்காக பல சட்டங்களை மத்திய அரசு மாற்றியதாக கூறிய அவர், எதற்கு சட்டங்களை திருத்துகிறார்கள் என்று கூட எம்.பிக்களான எங்களிடம் தெரிவிக்கவில்லை என்றார். மேலும் பேசிய அவர், உச்சநீதிமன்றம் இதை கூறிய உடன் சிறிய தவறு நடத்துவிட்டது என பாஜக கூறுவது அயோக்கியத்தனம் என சாடினார்.

News April 5, 2024

நாதக வேட்பாளரை விரட்டியடித்த மக்கள்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கீழமூவக்கரை மீனவ கிராம மக்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேர்தலை புறக்கணிக்கப் போவதாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்ற நாதக வேட்பாளர் காளியம்மாள், “நானும் மீனவ பெண் தான் உங்கள் பிரச்னை எனக்கும் தெரியும்” என கூற, அதற்கு அப்பகுதி மக்கள், “எந்த அரசியல் கட்சியையும் நம்ப போவது இல்லை” எனக் கூறி அவரை விரட்டியடித்தனர்.

News April 5, 2024

IPL: வெற்றிப் பாதைக்கு திரும்புமா CSK?

image

சென்னை – ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான 18ஆவது ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை அணி, டெல்லிக்கு எதிரான கடைசி போட்டியில் தோல்வி அடைந்தது. இதனால், இன்றைய போட்டியில் வெற்றி பெற்று வெற்றி பாதைக்கு திரும்புமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். பலம் வாய்ந்த ஐதராபாத் உடன் மோதுவதால், போட்டி கடுமையாக இருக்கும்.

News April 5, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

▶தமிழ்நாட்டில் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: தேர்தல் அதிகாரி சாகு
▶அண்ணாமலை தமிழ்நாட்டில் ஏன் போட்டியிடுகிறார்?: கனிமொழி கேள்வி
▶தேர்தல் ஆணையம் நாடக கம்பெனி போல் உள்ளது: சீமான் விமர்சனம்
▶வடிவேலுவுக்கு அரசியல் யோகம் அறவே இல்லை: நடிகர் சிங்கமுத்து
▶வார இறுதி விடுமுறையையொட்டி, 925 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு
▶ஐபிஎல்: பஞ்சாப் அணி த்ரில் வெற்றி

News April 5, 2024

தமிழக மீனவர்கள் 24 பேர் விடுதலை

image

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 24 ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு மீனவருக்கு மட்டும் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட 2 விசைப் படகுகளை அரசுடைமையாக்கி இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து, விரைவில் மீனவர்கள் தமிழகம் வருவார்கள்.

error: Content is protected !!