news

News April 5, 2024

அரசுப் பள்ளிகளில் ‘டிஜிட்டல்’ வழியில் கற்பித்தல்

image

அரசு நடுநிலைப் பள்ளிகளில் ‘டிஜிட்டல்’ வழி கற்பித்தலுக்கு முக்கியத்துவம் தருமாறு ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பல பள்ளிகளில் ஒரே ஆசிரியர் மட்டும் பணியில் இருப்பதால் கற்பித்தல் பணியை மேம்படுத்த முடியவில்லை. இதனால் மாணவர் சேர்க்கையும் குறைகிறது. எனவே, ஒவ்வொரு பள்ளியிலும் டிஜிட்டல் வழி பாடம் நடத்தும் வகையில் பிராட்பேண்ட் இணையதள இணைப்பை பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

News April 5, 2024

பையா-2 படம் குறித்து லிங்குசாமி புது அப்டேட்

image

பையா-2 திரைப்படம் குறித்து இயக்குநர் லிங்குசாமி புதிய தகவலை வெளியிட்டுள்ளார். கார்த்தி, தமன்னா நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான பையா படம், நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து லிங்குசாமி கூறுகையில், “பையா 2 கதையை தயார் செய்துவிட்டேன். பையா 2இல் வேறு காதலர்கள் உண்டு. அந்த படத்திலும் கார் உண்டு” என்றார்.

News April 5, 2024

தொடர் தோல்வி கண்டும் துவளாதவர்கள் (1)

image

தேர்தல்களில் பலமுறை போட்டியிட்டு தோல்வியை சந்தித்தாலும், மனம் தளராமல் தொடர்ந்து போட்டியிடுவதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். மேட்டூரை சேர்ந்த கே. பத்மராஜன், இதுவரை 238 முறை தோல்வியடைந்துள்ளார். இதில் வாஜ்பாய், நரசிம்மராவ், மன்மோகன், கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு எதிராக தோல்வியடைந்ததும் அடங்கும். அதிகமுறை தோற்றதால் லிம்கா சாதனை புத்தகத்திலும் அவர் இடம்பிடித்துள்ளார்.

News April 5, 2024

தொடர் தோல்வி கண்டும் துவளாதவர்கள் (2)

image

ம.பி.யின் இந்தூரைச் சேர்ந்த பரமானந்த் தோலானி இதுவரை 18 முறை போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். 8 முறை மக்களவைத் தேர்தலிலும், 8 முறை சட்டப்பேரவைத் தேர்தலிலும் தோல்வியை சந்தித்துள்ளார். அவரது தந்தையும் 30 ஆண்டுகளாக போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். அவர் மறைவுக்கு பிறகு தோலானி போட்டியிடுகிறார். குடும்பத்தில் யாரேனும் எம்பி, எம்எல்ஏ ஆகும் வரை போட்டியிடுவேன் என தோலானி கூறியுள்ளார்.

News April 5, 2024

தொடர் தோல்வி கண்டும் துவளாதவர்கள் (3)

image

மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த விஜய் பிரகாஷ் கோடேகர், இதுவரை 24 முறை போட்டியிட்டு தோல்வியை சந்தித்துள்ளார். முன்னாள் மாநில அரசு ஊழியரான அவர், ஒவ்வொரு தேர்தலிலும் வேறுவேறு பெயரில் போட்டியிட்டுள்ளார். இதேபோல், ஹைதராபாத்தை சேர்ந்த ஐடி ஊழியரான ரவீந்தர் உப்புலா, 2014 முதல் தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறார். இந்த மக்களவைத் தேர்தலிலும் அவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

News April 5, 2024

தொடர் தோல்வி கண்டும் துவளாதவர்கள் (4)

image

உத்தர பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்த காகா ஜோகிந்தர் சிங், 300 முறை தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்துள்ளார். இதில் முன்னாள் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவுக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியடைந்தது, 14 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்ததும் அடங்கும். பலமுறை டெபாசிட் இழந்துள்ளார். இவர் கடந்த 1998ஆம் ஆண்டில் காலமானார்.

News April 5, 2024

டாஸ்மாக் கடை திறப்பு நேரத்தை குறைங்க

image

தேர்தல் பரப்புரை விறுவிறுப்பு அடைந்துள்ள அதே நேரம் டாஸ்மாக் கடைகளில் சரக்கு விற்பனையும் சூடுபிடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், தேர்தல் பரப்புரைக்கு வருவோருக்கு அரசியல் கட்சியினர், குவாட்டர் கொடுப்பதுதான் என்று புகார் எழுந்த போதிலும், தேர்தல் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது டாஸ்மாக் நேரத்தை குறைத்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News April 5, 2024

நவக்கிரகங்களின் தோஷம் நீக்கும் நவ திருப்பதி ஆலயங்கள்

image

நவகிரக தோஷங்களை போக்கும் நவ திருப்பதி ஆலயங்கள், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி கரையோரம் அமைந்துள்ளன. அதனை பார்க்கலாம். ஸ்ரீவைகுண்டம் (சூரியன்), வரகுணமங்கை (சந்திரன்), திருக்கோளூர் (செவ்வாய்), திருப்புளியங்குடி (புதன்), ஆழ்வார்திருநகரி (குரு), தென்திருப்பேரை (சுக்ரன்), பெருங்குளம் (சனி), தொலவில்லிமங்கலம் ( ராகு), தொலவில்லிமங்கலம் (கேது).

News April 5, 2024

கொதித்த பாஜக; கூலாக பதிலளித்த ஆம் ஆத்மி

image

கெஜ்ரிவால் புகைப்படத்தை தியாகிகள் படங்களுடன் வைத்ததற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. கெஜ்ரிவால் கைது தொடர்பாக நேற்று வீடியோ வெளியிட்டு அவரின் மனைவி சுனிதா பேசினார். அப்போது, அவரின் பின்புறம் பகத் சிங், அம்பேத்கர் படங்களுக்கு இடையே கெஜ்ரிவால் படம் இருந்தது. இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள அக்கட்சி, பாஜகவின் சர்வாதிகாரத்தை எதிர்த்து போராட வேண்டியிருப்பதை அந்த படம் தெரிவிப்பதாக பதிலளித்துள்ளது.

News April 5, 2024

ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் ஷ்ரேயஸ் ஐயர் முதலீடு

image

கேகேஆர் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். Curelo ஹெல்த்கேர் நிறுவனம் கடந்த 2022ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. நோயாளிகளுக்கு வீடு தேடி சென்று பல்வேறு சோதனைகளை நடத்தும் சேவையை அந்நிறுவனம் வழங்கி வருகிறது. அந்நிறுவனத்தில் ஷ்ரேயஸ் ஐயர் முதலீடு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் எவ்வளவு முதலீடு செய்துள்ளார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

error: Content is protected !!