India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரமலான் மாதத்தில் பல இஸ்லாமியர்கள் காலை முதல் மாலை வரை நோன்பு நோற்பார்கள். நோன்பின் போது நீரிழிவு நோயாளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரிட்டன் தொண்டு நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் தங்கள் மருத்துவருடன் கலந்து ஆலோசித்த பின்னரே நோன்பு பற்றி முடிவு செய்ய வேண்டும், என பர்மிங்காம் பல்கலைக்கழக மருத்துவ இயக்குநர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் தொகுதி பாஜக வேட்பாளர் பாலகணபதி உட்பட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மெய்யூர் கிராமத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பாலகணபதி தேசிய கொடியை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேளகாபுரம் வருவாய் ஆய்வாளர் பாலாஜி அளித்த புகாரின்பேரில் பாலகணபதி, பாஜக மாவட்ட தலைவர் சீனிவாசன், ஒன்றிய தலைவர் சாந்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அவர், மேலூர் வெள்ளரிப்பட்டி பகுதியில் பரப்புரை செய்தார். அங்கு, ஆரத்தி எடுத்த பெண்களுக்கு அவர், பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் வரும் 8ஆம் தேதி மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு ஆன்லைனில் தொடங்கியது. டிக்கெட்டுக்கான விலை குறைந்தது ரூ.1,700 முதல் அதிகபட்சமாக ரூ.6,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் பேடிஎம் மற்றும் www.insider.in ஆகிய இணைய தளங்களில் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.
இந்தியா, அமெரிக்கா இடையே நல்லுறவு நீடிப்பதாக இருநாட்டு தலைவர்களும் சொல்லிக் கொண்டாலும், பல நேரங்களில் அவநம்பிக்கை நிலவுகிறது. மோடி அரசு குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்திய போது அமெரிக்கா தனது வேறுபாட்டை வெளிப்படையாக தெரிவித்தது. தற்போது கெஜ்ரிவால் விவகாரத்திலும், காங்கிரஸ் வங்கி கணக்கு முடக்கம் குறித்தும் அமெரிக்கா கருத்து தெரிவிப்பது பாஜக ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஒருவாரமாக உயர்ந்த நிலையில், இன்று குறைந்ததால் மக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.52,080க்கும், கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.6,510க்கும் விற்பனையாகிறது. அதே போல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.85க்கும், கிலோ வெள்ளி ரூ.1000 உயர்ந்து ரூ.85,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முட்டிப் போட்டு இபிஎஸ் முதல்வரானதாக அமமுக நிர்வாகி சிஆர் சரஸ்வதி விமர்சனம் செய்துள்ளார். மதுரை சோழவந்தானில் டிடிவி தினகரனை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், இபிஎஸ்சை முதல்வராக்கும்படி டிடிவி தினகரனே பரிந்துரை செய்தார் என்றும், அதையேற்று சசிகலா அவரை முதல்வராக்கினார் என்றும் தெரிவித்தார். ஆனால் அவர்கள் 2 பேருக்கும் இபிஎஸ் துரோகம் செய்துவிட்டார் என்றும் சிஆர் சரஸ்வதி குற்றம்சாட்டினார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பணப்பட்டுவாடா, மது வழங்குவதை பறக்கும் படை மூலம் தேர்தல் ஆணையம் தடுக்கிறது. அந்த வகையில் கர்நாடகாவின் மைசூரு மாவட்டம் சாமராஜ்நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கலால் துறையினர் 98.52 கோடி ரூபாய் மதிப்பிலான 1.22 கோடி லிட்டர் பீரை பறிமுதல் செய்தனர். அத்துடன் 3.35 கோடி ரூபாபையையும் பறிமுதல் செய்தனர். நாட்டிலேயே ஒரே இடத்தில் இவ்வளவு பீர் பாட்டில் பிடிப்பட்டது இதுவே முதல்முறை.
கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு தொலைக்காட்சியை பாஜக, ஆர்எஸ்எஸ் கூட்டணியின் பிரசார இயந்திரமாக பயன்படுத்தக் கூடாது. வெறுப்பை விதைக்கும் முயற்சிகளை கேரளா ஒருபோதும் அனுமதிக்காது என அவர் தெரிவித்துள்ளார். இப்படம் இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் ரூ.31 கோடி மதிப்புள்ள சொத்துகளை ED முடக்கியுள்ளது. நில அபகரிப்பு முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் ஹேமந்த் சோரன் ஜனவரி 31இல் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஹேமந்த் உள்பட 5 பேரின் மீது ED மார்ச் 30இல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்த நிலையில், சொத்து முடக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் ஜாமின் கோரி விரைவில் மனு தாக்கல் செய்யவுள்ளார்.
Sorry, no posts matched your criteria.