India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கல்வி, வேலைவாய்ப்புகளில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு 50%ஆக உயர்த்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அதன் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது. இடஒதுக்கீடு வரம்பை அதிகரிக்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட பணி இடங்கள் ஓராண்டில் நிரப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
பாஜக மீது ஆம் ஆத்மி ஊழல் குற்றச்சாட்டு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், மதுபான கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டது பாஜகதான் என்றும், பாஜக மூத்த தலைவர்கள் பலருக்கு அதில் தொடர்பு உள்ளது என்றும் தெரிவித்தார். ஆனால் இந்த வழக்கில் சதி செய்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்திருப்பதாகவும் சஞ்சய் சிங் கூறினார்.
மார்ச் 2024 வரை பெறப்பட்ட அனைத்து கல்விக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் காங்., கட்சி அறிவித்துள்ளது. நீட், CUET தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பத்திற்கு ஏற்ப நடத்திக் கொள்ளலாம். மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்த பிறகே புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும். மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி, தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்படும். பொருளாதாரத்தில் நலிவடைந்த அனைத்து சமூகத்தினருக்கும் 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும். சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை மீண்டும் வழங்கப்படும். ஏழைகளுக்கான மருத்துவ காப்பீடு ரூ.25 லட்சமாக அதிகரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
அடுத்தடுத்து தொடர் வெற்றி படங்களை வழங்கி கோலிவுட்டில் கொடிக்கட்டி பறப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் ரஜினியின் தலைவர் 171 படத்தை இயக்குவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இப்படத்தின் கதை 2013ஆம் ஆண்டில் ஹாலிவுட்டில் வெளியான The Purge படத்தின் இன்ஸ்பிரேஷன் எனக் கூறப்படுகிறது. முன்னதாக லோகேஷ் இயக்கத்தில் வெளியான லியோ படம், History of Violence படத்தின் இன்ஸ்பிரேஷன் என்பது குறிப்பிடத்தக்கது.
2025 நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி 7% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார். 2025 நிதியாண்டின் முதல் நிதி கொள்கையை வெளியிட்டு பேசிய அவர், நாட்டில் பணவீக்கம் டிசம்பரில் 5.7%ஆக இருந்ததாகவும், அது ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 5.1%ஆக குறைந்துள்ளதாகவும், வரும் நாள்களில் 4% இலக்கை எட்ட வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் திமுக 18, காங்., 8, அதிமுக 4, பாஜக 3, பாமக 1, மற்றவை 5 இடங்களில் வெற்றி பெறும் என்று சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்பில் கூறப்பட்டது. இதுவரை வெளியான கருத்துக்கணிப்புகளில் மற்றவை என்பது சீமானை குறிக்க பயன்படுத்தப்பட்டது. அப்படி என்றால் நாதக 5 இடங்களில் வெல்லுமா என அக்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒருவேளை இது நடந்தால், தமிழக அரசியல் முற்றிலும் மாறிவிடும்.
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடாபோன், பிஎஸ்என்எல் ஆகியவை செல்போன் சேவை வழங்கி வருகின்றன. இதில் மற்ற 3 நிறுவனங்கள் 4ஜி சேவையை வழங்கி வரும் நிலையில், பிஎஸ்என்எல் 4ஜி சேவையை தொடங்கவே இல்லை. ஏப்ரலில் தமிழகத்தில் தொடங்கப்படும் என அறிவித்த நிலையில், அடுத்த அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் பிஎஸ்என்எல்லின் 4ஜி சேவை இந்த மாதம் தொடங்கப்படுமா, இல்லையா என வாடிக்கையாளர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் அளித்துள்ளது. மணப்பாறையில் கரூர் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து பேசிய உதயநிதி, “அடுத்த 4 மாதங்களில் விடுபட்ட 40 லட்சம் பேருக்கு புதிதாக மகளிர் உரிமைத் தொகை தரப்படும்” என்று கூறினார். இவரின் இந்த உறுதி மொழி தேர்தல் விதிமுறைகளை மீறியதாக இருப்பதாக அதிமுக நிர்வாகிகள் தற்போது புகார் கொடுத்துள்ளனர்.
2008இல் வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சராக இருந்தபோது முறைகேடாக வீடு ஒதுக்கீடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்து, மீண்டும் விசாரிக்க வேண்டும் என ஐகோர்ட் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த அமைச்சர், அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்திருந்தார். இதை ஏற்று ஏப்.8ம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.