India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
RCB – KKR அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. நடந்து முடிந்த 7 போட்டிகளில் 6இல் தோல்வி அடைந்துள்ள பெங்களூரு அணி, எஞ்சியிருக்கும் 7 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தாலும், பெங்களூரு அணி பிளே-ஆப் செல்லும் வாய்ப்பை தவறவிடும். இன்றைய போட்டியில், பெங்களூரு அணி வெற்றி பெறுமா? வெற்றிப் பாதைக்கு திரும்புமா?
தூர்தர்ஷன் இலச்சினையில் காவிக்கறை அடித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சிலைகள் மீது காவி பெயிண்ட் அடித்தவர்கள், வானொலி என்ற தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமாக மாற்றியதாக சாடினார். தான் சொன்னதுபோலவே, அனைத்தையும் பாஜக காவிமயமாக்குவதாக கூறிய அவர், பாசிசத்துக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுவதை தேர்தல் முடிவுகள் உணர்த்தும் என்று கூறினார்.
மக்களவைத் தேர்தல், விளவங்கோடு இடைத் தேர்தல் அறிவிப்பு வந்தது முதல், தேர்தல் நடந்து முடியும் வரையில், தமிழகத்தில் அனைத்து கட்சி அலுவலகங்களும் களை கட்டியிருந்தது. கட்சித் தலைவர்களின் வருகை, ஆலோசனை என அடிக்கடி கூட்டம் நடந்த வண்ணம் இருந்தது. தற்போது தேர்தல் முடிந்து 2 நாள்கள் ஆகி விட்டதால், அந்த அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. சில தொண்டர்களே அங்குமிங்கும் தென்படுகின்றனர்.
வாக்குப்பதிவுக்குப் பிந்தைய நடத்தைக் கொள்கையை தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யக்கோரி மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார். முதல்கட்ட வாக்குப்பதிவுக்கும், கடைசி கட்ட தேர்தலுக்கும் 50 நாள்கள் வேறுபாடு இருப்பதால், நடத்தை விதிகளை முதல்கட்ட தேர்தல் நடந்த இடங்களில் கடைபிடிப்பது வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதை தேர்தல் ஆணையம் மறுபரிசீலணை செய்ய வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 3 மக்களவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகளோடு ஒப்பிடுகையில், இம்முறை குறைவாகவே வாக்குகள் பதிவாகி உள்ளன. 2009இல் 73.02%, 2014இல் 73.74%, 2019இல் 72.47%, 2024இல் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில், 2014 தேர்தலோடு 2019 தேர்தலை ஒப்பிட்டால் 1.27% வாக்குகள் குறைவு. 2019 தேர்தலோடு 2024 தேர்தலை ஒப்பிட்டால் 3.01% குறைவாகும்.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன்.1ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதனிடையே, கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருவதால் மாணவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு மேலும் ஒருவாரம் விடுமுறையை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், ஜூன் 4 வாக்கு எண்ணிக்கை இருப்பதால் பள்ளிகளுக்கு ஒன்றரை மாதம் வரை கோடை விடுமுறை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவின் பரப்புரைக்காகவே 7 கட்டமாக தேர்தல் நடத்தப்படுவதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் ஆணையம் பாஜகவின் உத்தரவுக்கு இணைங்க சேவையாற்றி வருகிறது. பிரதமரும், அவரது சகாக்களும் நாடு முழுவதும் பாஜகவுக்காக பரப்புரையில் ஈடுபட வேண்டும். இதற்காகவே பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுவதாக கூறிய அவர், இந்த அதிகாரப் போக்குக்கு மக்கள் தேர்தல் முடிவில் தண்டனை அளிப்பார்கள் என்று தெரிவித்தார்.
எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம், தனது மின்சார கார்களின் விலையை அமெரிக்கா மற்றும் சீனாவில் குறைத்துள்ளது. அந்த 2 நாடுகளின் டெஸ்லா கார்களின் விற்பனை குறைந்துள்ளது. இதனால் அந்நிறுவன பங்குகளின் மதிப்பு ஏறத்தாழ 40% வீழ்ச்சி கண்டுள்ளது. இதையடுத்து விற்பனையை சீராக்கி மீண்டும் அதிகரிக்கும் நோக்கத்தில் கார்கள் விலையை டெஸ்லா குறைத்துள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த வஹீத் என்ற பெண்ணுக்கு, ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ளது. நேற்று முன்தினம் திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால், ராவல்பிண்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீண்ட நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு, அவருக்கு 4 ஆண், 2 பெண் குழந்தைகள் பிறந்தன. தாயும், குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், இது மிகவும் அபூர்வமானது என்றும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவிப் பேராசியர் மற்றும் இளநிலை ஆய்வு முனைவருக்கான தேசிய குதித் தேர்வுக்கு (UGC-NET) இன்று முதல் விண்ணப்பிக்கலாம். ஜூன் 16ஆம் தேதி நடைபெறும் இத்தேர்வுக்க ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், வரும் மே 10ஆம் தேதிக்குள் <
Sorry, no posts matched your criteria.