news

News April 6, 2024

2024 தேர்தலில் களமிறங்கிய திரை நட்சத்திரங்கள் (2)

image

இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான், வேலூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். திரைப்படங்களில் வில்லன், கதாநாயகன், குணச்சித்திர நடிகர் என பல வேடங்களில் அசத்திய மன்சூர் அலிகான், தற்போது வேலூர் தொகுதியில் வாக்குசேகரித்து வருகிறார். மீன் கடைகளுக்கு சென்று மீன்களை வெட்டி கொடுத்தல் உள்ளிட்ட நூதன வழிகளில் அவர் வாக்கு கேட்டு வருகிறார்.

News April 6, 2024

2024 தேர்தலில் களமிறங்கிய திரை நட்சத்திரங்கள் (3)

image

கேரளாவில் பிரபல நடிகர் சுரேஷ் கோபி, பாஜக சார்பில் திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார். கொல்லம் தொகுதியில் இடதுசாரி கட்சிகள் சார்பில் நடிகர் முகேஷ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக, பிரபல நடிகர் கிருஷ்ணகுமாரை களமிறக்கியுள்ளது.
இதனால் மக்களவைத் தேர்தலில் கேரளாவில் 3 திரைநட்சத்திரங்கள் போட்டியிடுகின்றனர். அங்கு சட்டப்பேரவைத் தேர்தலில் 4 நடிகர்கள் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

News April 6, 2024

2024 தேர்தலில் களமிறங்கிய திரை நட்சத்திரங்கள் (4)

image

பாஜக சார்பில் இந்தி நடிகைகள் ஹேமா மாலினி மதுராவிலும், கங்கனா ரனாவத் ஹிமாச்சல் பிரதேசத்தின் மண்டி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். பிரபல நடிகர் சத்ருகன் சின்ஹா திரிணாமுல் வேட்பாளராக அசான்சோல் தொகுதியில் களமிறங்கியுள்ளார். தொலைக்காட்சியில் ராமாயணம் தொடரில் ராமர் கதாபாத்திரத்தில் நடித்த அருண் கோவில், உத்தர பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்.

News April 6, 2024

BREAKING: மோடி இமேஜ் தகரும் .. ஸ்டாலின் அட்டாக்

image

மக்களவைத் தேர்தல் பிரதமர் மோடி மட்டுமின்றி RSS இமேஜையும் தகர்க்கும் என்று முதல்வர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். மக்களின் மத உணர்வை கிளறிவிட்டு, வெறுப்புணர்வை விதைத்து அரசியல் குளிர்காயும் RSS கருத்தியலே பாஜகவின் கொள்கை. ஜனநாயகம் பற்றி அதிகம் பேசும் பாஜகவினர், அதனை நடைமுறையில் பின்பற்றுவதில்லை என தாக்கிய அவர், நிர்வாக சிக்கலை பேசித் தீர்க்க மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விமர்சித்தார்.

News April 6, 2024

தமிழ் புத்தாண்டில் வெளியாகும் ‘ராயன்’ டீசர்

image

தனுஷ் இயக்கி, நடித்து வரும் திரைப்படம் ‘ராயன்’. இதில் எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன் உள்ளிட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழ் புத்தாண்டு தினத்தில் படத்தின் டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

News April 6, 2024

மதிமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது

image

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்.19ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடக்க உள்ளது. இதையொட்டி, தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளன. மேலும், தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், நேற்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில், இன்று மதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகிறது. இத்தேர்தலில் திமுக கூட்டணியில் திருச்சி தொகுதியில் மதிமுக போட்டியிடுகிறது.

News April 6, 2024

விடுமுறையில் மாற்றம்.. குழப்பம்

image

பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அடுத்தடுத்த அறிவிப்பால் ஆசிரியர்கள், மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர். முன்னதாக, ஏப்.12 வரை பள்ளிக்கு வர வேண்டும். 13ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, தேர்தல் பணிகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதால், ஏப்.15 -19 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக புதிய அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

News April 6, 2024

கச்சத்தீவு மட்டுமல்ல இந்தியாவே மீட்கப்படும்

image

I.N.D.I.A கூட்டணி ஆட்சி அமைந்தால் கச்சத்தீவு மட்டுமல்ல இந்தியாவே மீட்கப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். சமூக நீதி, மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் பாதுகாப்பு என அனைத்து அம்சங்களையும் கொண்டதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை அமைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், அனைத்து வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

News April 6, 2024

₹2.01 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு

image

ஜிஎஸ்டி அதிகாரிகள் ₹2.01 லட்சம் கோடி வரி ஏய்ப்பு நடைபெற்றிருப்பதை கண்டுபிடித்துள்ளனர். 2023-2024 நிதியாண்டில் ₹20.18 லட்சம் கோடி வருவாய் கிடைத்தது. இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 11.6% அதிகம். இந்நிலையில் 2023-2024 நிதியாண்டில் ₹2.01 லட்சம் கோடி வரி ஏய்ப்பு நடந்ததையும், அதில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் ₹83,588 கோடி வரிஏய்ப்பு செய்திருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

News April 6, 2024

பள்ளி குழந்தைகளிடம் தீண்டாமை பார்க்கும் திமுக

image

பழனியில் ஆதி திராவிட மாணவர் நல விடுதி மேற்கூரை இடிந்து விழுந்து 5 மாணவிகள் காயமடைந்தனர். இதுகுறித்து அண்ணாமலை, தமிழகம் முழுவதுமே ஆதி திராவிடர் நலப் பள்ளிகளும், விடுதிகளும் மோசமான நிலையில் தான் உள்ளன. உதட்டளவில் சமூகநீதி பேசி ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுக அரசு, பள்ளிக் குழந்தைகளிடம் தீண்டாமை பார்ப்பதாக விமர்சித்துள்ளார். மேலும், மாணவிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுத்தார்.

error: Content is protected !!