news

News April 25, 2024

கெஜ்ரிவாலுக்கு எதிராக ED பிரமாணப் பத்திரம்

image

கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை எதிர்த்து ED பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், 9 முறை சம்மன்கள் அனுப்பியும் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, இந்தக் காரணத்திற்காகவும், விசாரணை அதிகாரியிடம் இருந்த ஆதாரத்தின் அடிப்படையிலுமே கைது செய்யப்பட்டுள்ளார் என்று ED தெரிவித்துள்ளது.

News April 25, 2024

பாஜகவை திருப்திப்படுத்த ஆணையம் இப்படி செய்ததா?

image

பாஜகவை திருப்திப்படுத்தவே தேர்தலை 7 கட்டங்களாக நடத்த தலைமைத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். அஸ்கிராமில் பிரசாரம் செய்த அவர், வழக்கமாக மே 3ஆம் தேதியில் பொதுத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுவிடும். ஆனால், இந்த ஆண்டு 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடும் வெப்ப அலை வீச்சுக்கு மத்தியிலும் பாஜகவை வீழ்த்த வேண்டுமென போராடுகிறோம் என்றார்.

News April 25, 2024

CSK அணியின் முதல் ஐபிஎல் கோப்பை நினைவிருக்கா?

image

2010ஆம் ஆண்டு இதே நாளில், சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களது முதல் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. மும்பைக்கு எதிரான இந்தப் போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சுரேஷ் ரெய்னாவின் (57*) அதிரடியான ஆட்டத்தால், சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 168/5 ரன்கள் எடுத்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 146/9 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.

News April 25, 2024

அமித் ஷாவுக்கு பவார் கேள்வி

image

விவசாயிகள் தற்கொலையை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து அமித் ஷாவுக்கு சரத் பவார் கேள்வியெழுப்பியுள்ளார். மத்தியில் வேளாண் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் நேரிட்ட விவசாயிகள் தற்கொலைக்கு சரத்பவார் மன்னிப்பு கேட்க அமித் ஷா வலியுறுத்தியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள சரத் பவார், கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அதைத்தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து அவர் முதலில் பதிலளிக்க வேண்டுமென கோரியுள்ளார்.

News April 25, 2024

ட்ரோனை கண்டுபிடித்தது யார் தெரியுமா?

image

போர், டெலிவரி என அனைத்திலும் ட்ரோன் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதை கண்டுபிடித்தது யார் தெரியுமா? ஈராக்கில் 1937இல் பிறந்து, பிறகு இஸ்ரேலில் குடியேறிய யூதரான ஆபிரஹாம் கரேம்தான் அதனைக் கண்டுபிடித்தார். 1973இல் இஸ்ரேல்- அரேபிய நாடுகள் இடையேயான போரின் போது ட்ரோனை கண்டுபிடித்தார். பிறகு அவர் அமெரிக்காவில் குடியேறினார். இந்த கண்டுபிடிப்புக்காக, ட்ரோன் தொழில்நுட்ப தந்தை எனப் போற்றப்படுகிறார்.

News April 25, 2024

250ஆவது போட்டியில் வெற்றி காணுமா RCB?

image

RCB-SRH இடையேயான ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. இது பெங்களூரு அணியின் 250ஆவது ஐபிஎல் போட்டி ஆகும். நடப்பு ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள பெங்களூரு அணி, ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் புள்ளிப் பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால் கூட, முதல் அணியாக தொடரில் இருந்து RCB அணி வெளியேறிவிடும்.

News April 25, 2024

லுங்கி அரசியலில் சிக்கிய பாஜக

image

மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் லுங்கி அணிந்து வீடியோ மூலம் பரப்புரை செய்தார். அதை பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான தர்மேந்திர பிரதான் கிண்டல் செய்தார். இந்நிலையில், அதற்கு பதிலடி தரும் வகையில் பிஜூ ஜனதாதளம் கட்சியினர், ஒடிசாவின் பாரம்பரியமான சம்பல்புரி லுங்கி கைத்தறி நெசவையும், கலாசாரத்தையும் பாஜக அவமதித்து விட்டதாக பிரசாரம் செய்ய தொடங்கியுள்ளனர்.

News April 25, 2024

இப்படி ஏ.சி. பயன்படுத்தினால் மின்கட்டணத்தை சேமிக்கலாம்

image

ஏசி பயன்படுத்துபவரா நீங்கள்? அப்படியெனில் கீழ்காணும் வழிகளை கடைபிடித்தால், மின்சாரக் கட்டணத்தை சேமிக்கலாம். 1) ஏர் பில்டர்களை 6 மாதத்துக்கு ஒரு முறை மாற்றவும் 2) ஸ்மார்ட் தெர்மோஸ்டாட் (அ) ஏசி கன்ட்ரோலர் பயன்படுத்தவும் 3) அறையின் ஜன்னல், கதவை மூடிவிடவும் 4) சரியான டெம்ப்ரேச்சரை செட் செய்யவும் 5) அறையின் அளவுக்கேற்ற ஏசி வாங்கவும் 6) இரவில் ஸ்லீப்பிங் மோடில் பயன்படுத்தவும்

News April 25, 2024

”பாஜக தோல்வி அடையும்” : பாஜக அமைச்சர் கஜேந்திர சிங்

image

முதல் கட்டத் தேர்தலில் பாஜக மோசமாக செயல்பட்டுள்ளதாக ராஜஸ்தான் மாநில அமைச்சர் கஜேந்திர சிங் பேசிய <>வீடியோ <<>>சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்ல, நாகௌர் மக்களவைத் தொகுதியில் INDIA கூட்டணியிடம் பாஜக தோல்வியை தழுவும். மற்ற இடங்களையும் இழக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். பாஜக அமைச்சர் ஒருவரே இவ்வாறு பேசியது பாஜகவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

News April 25, 2024

CSKvsSRH: டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

image

CSK-SRH இடையேயான ஐபிஎல் போட்டி, வரும் 28ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.40 மணிக்கு, CSK மற்றும் பேடிஎம் இன்சைடர் இணையதளங்களில் தொடங்க உள்ளது. டிக்கெட் விலையில் எந்த மாற்றமுமின்றி, ₹1,700, ₹2,500, ₹3,500, ₹4,000, ₹6,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள CSK அணி, சொந்த மண்ணில் வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

error: Content is protected !!