news

News April 6, 2024

ராஜஸ்தான் அணிக்கு 184 ரன்கள் இலக்கு

image

ஜெய்ப்பூரில் நடைபெற்றுவரும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி 183/3 ரன்கள் விளாசியுள்ளது. அதிரடியாக ஆடிய விராட் கோலி 67 பந்துகளில் சதம் அடித்தார். டூபிளெசிஸ் (44), மேக்ஸ்வெல் (1) ரன்னில் ஆட்டமிழந்தனர். ராஜஸ்தான் தரப்பில் சாஹல் 2, பர்கர் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து ராஜஸ்தான் அணிக்கு 184 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

News April 6, 2024

சதம் விளாசினார் விராட் கோலி

image

ஐபிஎல் 2024ன் 19ஆவது லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி 67 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார். இதன் மூலம் இந்த சீசனின் அதிகபட்ச ரன்களை கோலி அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 6, 2024

நயனை சந்தித்தது எப்படி? மனம் திறந்த விக்னேஷ் சிவன்

image

தனுஷ் மூலமாகவே நயன்தாரா அறிமுகமானதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் மனம் திறந்துள்ளார். இது குறித்து பேட்டி அளித்த அவர், நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க ஒரு தயாரிப்பாளராக தனுஷ் பரிந்துரைத்ததாக கூறினார். தனுஷ் உதவியுடன் நயன்தாராவை சந்தித்த விக்னேஷ் சிவன், கதை சொல்லி ஓகே வாங்கி இருக்கிறார். நயன்தாரா நடிக்க ஒப்புக்கொண்டதாலேயே விஜய் சேதுபதி அப்படத்தில் கமிட் ஆனதாகவும் கூறினார்.

News April 6, 2024

புகழேந்தி உடலுக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி

image

விக்கிரவாண்டி தொகுதி திமுக MLA புகழேந்தி, உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அதைத் தொடர்ந்து விழுப்புரத்தில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், வைக்கப்பட்டுள்ள பூத உடலுக்கு மக்கள் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதையடுத்து புகழேந்தியின் சொந்த ஊரான திருவாதித்தினை கிராமத்திற்கு நாளை காலை 8 மணிக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

News April 6, 2024

இனி ஏழைகளே இருக்க மாட்டார்கள்

image

ஏழைப் பெண்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் செலுத்தப்போவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளை விளக்கிப் பேசிய அவர், மகாலட்சுமி திட்டம் இந்தியாவின் புரட்சிகர திட்டம் என பெருமை தெரிவித்தார். ஏழை குடும்பங்களின் வங்கி கணக்கில் நேரடியாக ரூ.1 லட்சம் செலுத்தப்போகிறோம். இதனால் குறைந்த வருமானம் கொண்ட ஏழைகளே இனி இருக்க மாட்டார்கள் என்றார்.

News April 6, 2024

ஸ்டாலினால் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த காங்கிரஸ்!

image

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அடுத்த பிரதமர் ராகுல் தான் என ஸ்டாலின் சொன்னதால், எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் இழந்ததாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார். திருச்சியில் அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், ‘ஸ்டாலின் எந்த கூட்டணியில் சேர்ந்தாலும், அங்கு ஏழரைச்சனி பிடித்துக் கொள்ளும். ஸ்டாலின் அப்படி ராசியானவர். ஸ்டாலின் செல்வாக்கை இழந்துவிட்டார்’ என்றார்.

News April 6, 2024

சமூகநீதி கூட்டணி தான் இன்றைக்கு தேவை

image

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவிலேயே ஜனநாயகம் இருக்காதென முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடலூரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ‘பாஜக – பாமக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. I.N.D.I.A கூட்டணி தான் சமூகநீதி கூட்டணி. சமூகநீதி கூட்டணி தான் இன்றைக்கு தேவை. வரலாறு தெரியாமல் பேசும் இபிஎஸ் நாவடக்கத்துடன் பேச வேண்டும். மோடியின் திட்டத்தை இபிஎஸ் செயல்படுத்தி வருகிறார்’ என்றார்.

News April 6, 2024

ஐபிஎல்லில் 7500 ரன்கள் குவித்தார் விராட் கோலி

image

ஐபிஎல் போட்டிகளில் இதுவரை 7500 ரன்களை குவித்து விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். ரன் மெஷின் என அழைக்கப்படும் கோலி, கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். அந்த வகையில், மொத்தம் 17 சீசன்களிலும் சேர்த்து அவர் 7500க்கும் அதிகமான குவித்துள்ளார். இந்தப் பட்டியலில் 6755 ரன்களுடன் ஷிகர் 2ஆவது இடத்திலும், 6545 ரன்களுடன் டேவிட் வார்னர் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.

News April 6, 2024

திமுக அரசு மக்களுக்கு நன்மை எதுவும் செய்யவில்லை

image

‘ஜனவரி, பிப்ரவரி’யை தவிர அனைத்து வரிகளையும் திமுக அரசு உயர்த்தி விட்டதாக அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளரும் நடிகருமான சிங்கமுத்து கூறியுள்ளார். சிவகங்கையில் பேசிய அவர், “திமுக பொதுமக்களிடம் வசூலிக்கும் வரிப் பணத்தில், மக்களுக்கு நன்மை எதுவும் செய்வதில்லை. திமுக ஆட்சியில்தான் கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்கள் தமிழகத்துக்கு வந்தன. திமுக அரசு மக்களை போதைக்கு அடிமையாக்கிவிட்டது” என்றார்.

News April 6, 2024

விபத்தில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீராங்கனைகள்

image

பாக்., கிரிக்கெட் வீராங்கனைகள் பயணித்த கார் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் பிஸ்மா மரூப், குலாம் பாத்திமா ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக பாக்., கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், இவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும், மருத்துவ அறிக்கைக்குப் பின்னே இவர்கள் போட்டியில் பங்கேற்பது குறித்து தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!