news

News April 7, 2024

வாழ்வளித்த அனைவருக்கு துரோகம் செய்துள்ளார்

image

எடப்பாடி பழனிசாமி தனக்கு வாழ்வளித்த அனைவருக்கும் துரோகம் செய்துள்ளதாக டிடிவி.தினகரன் விமர்சித்துள்ளார். இபிஎஸ் தனது சுயநலத்துக்காக பாஜக கூட்டணியில் இருந்து விலகி உள்ளார். தன்னை முதல்வர் ஆக்கிய சசிகலாவுக்கும், தனது ஆட்சியை காப்பாற்ற உறுதுணையாக இருந்த ஓபிஎஸ்க்கு துரோகம் செய்தார் என்று கூறிய அவர், எடப்பாடி பழனிசாமி தற்போது உச்சகட்ட அதிகார மமதையில் இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.

News April 7, 2024

உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் நடைபயிற்சி

image

ஒரே இடத்தில் அமராமல் அடிக்கடி எழுந்து நடக்க வேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கருப்பு நிற உடை அணிவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், உடலில் வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். குளிர் காலங்களில் கருப்பு உடை அணிவதால் தவறில்லை. நடைபயிற்சியை விட சிறந்த பயிற்சி உடலுக்கு வேறு எதுவும் இல்லை.

News April 7, 2024

இன்றைய பொன்மொழிகள்

image

➤வந்த வழியை மறந்துவிட்டோமானால் போகும் வழி புரியாமல் போய்விடும். ➤ சக்தி குறைந்தவர்களிடம் வீரத்தைக் காட்டுவது சரியல்ல.
➤நல்லவன் என்று பேர் எடுப்பது மிகவும் சிரம்மமான காரியம். ➤புகழை நாம் தேடிச் செல்லக்கூடாது. அதுதான் நம்மைத் தேடி வரவேண்டும்.
➤ அனுபவித்த துன்பங்களை நினைவில் கொண்டால்தான் கடமையைச் சரிவர நிறைவேற்ற முடியும்.
➤சொந்தக் காலில் நிற்பது மட்டுமல்ல, நடைமுறைக்குத் தேவையானதும் ஆகும்.

News April 7, 2024

ஆச்சரியப்படுத்தும் தேனீக்களின் சுறுசுறுப்பு

image

அதிநுட்பமான நுண்ணறிவு கொண்டவை தேனீக்கள். சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதை நுகர்ந்து தெரிந்து கொள்ளமுடியும். ஒரு தேனீக்கு 5000 நாசித்துவாரங்கள் உள்ளன. ஒரு பவுண்டு தேனை சேகரிக்க எறக்குறைய 80,000 கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது. 60,000 மலர்களுக்கு முப்பத்தேழு லட்சம் தடவை தேனீக்கள் பறந்து செல்ல வேண்டியிருக்கிறது. மனிதகுலம் தேனீக்களின் மகத்துவத்தை அறிந்து தேனை பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.

News April 7, 2024

விராட் கோலியின் மோசமான சாதனை

image

அதிக பந்துகளை சந்தித்து சதமடித்த வீரர் பட்டியலில் விராட் கோலி இணைந்துள்ளார். நேற்றைய ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 67 பந்துகளை சந்தித்து கோலி சதமடித்தார். இதன் மூலம் அதிக பந்துகளை சந்தித்து சதமடித்த வீரர்கள் பட்டியலில் மணீஷ் பாண்டேவுடன் இணைந்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் இதற்கு முன்னதாக 66 பந்துகளை சந்தித்து சச்சின், பட்லர், வார்னர் உள்ளிட்ட மூவரும் சதமடித்துள்ளனர்.

News April 7, 2024

வரலாற்றில் இன்று

image

➤1946 – பிரான்சிடம் இருந்து சிரியாவின் விடுதலை அங்கீகரிக்கப்பட்டது.
➤1948 – உலக சுகாதார அமைப்பு ஐக்கிய நாடுகள் அவையால் தொடங்கப்பட்டது.
➤1948 – சீனாவில் ஷாங்காயில் பௌத்த மத தலம் எரிந்ததில் 20 புத்த குருக்கள் உயிரிழந்தனர்.
➤1990 – எசுக்காண்டினாவியன் ஸ்டார் பயணிகள் கப்பல் தீப்பிடித்ததில் 159 பேர் உயிரிழந்தனர். 2003 – அமெரிக்கப் படைகள் பக்தாதைக் கைப்பற்றின.

News April 7, 2024

கர்ப்பிணிகளின் கவனத்திற்கு…

image

கர்ப்பிணிகள் காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும், அடிக்கடி மயக்கமும் வராது. வயிற்றில் குழந்தை வளர வளர அதிகமாக சாப்பிட முடியாது, சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்களை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும். கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று, அதுகுறித்து பயப்பட தேவையில்லை.

News April 7, 2024

எடிட் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்

image

தேர்தல் அதிகாரியை மிரட்டியதாக வெளியான வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளதாக திருப்பூர் பாஜக வேட்பாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார். வாகன சோதனையில் ஈடுபட்ட அதிகாரியை மரியாதையாக பேசுமாறு கூறினேன். ஆனால், அந்த வீடியோவில் பல காட்சிகள் எடிட் செய்து போட்டுள்ளார்கள். இது குறித்து தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளேன் என அவர் கூறியுள்ளார். முன்னதாக, தேர்தல் அதிகாரியை அவர் மிரட்டும் வீடியோ வெளியானது.

News April 7, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: அடக்கமுடைமை ▶குறள் எண்: 127 ▶குறள்: யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. ▶விளக்கம்: காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டும்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.

News April 7, 2024

பாஜகவை நாட்டை விட்டே விரட்ட வேண்டும்

image

பாஜகவுடன் முதல்வர் நட்பு பாராட்டியிருந்தால் அதிமுக என்ற கட்சியே இருந்திருக்காது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். எத்தனை நெருக்கடி வந்தாலும் அந்த நெருக்கடிகளை எதிர்கொள்ள தயார் என்ற நெஞ்சுரத்தோடு பாஜகவை முதல்வர் எதிர்த்து வருகிறார். திமுக இருக்கக் கூடாது என மோடி, அமித்ஷா நினைப்பதாக கூறிய அவர், யார் என்ன நினைத்தாலும் மதவெறி பாஜகவை முதல்வர் நாட்டை விட்டு விரட்டி அடிப்பார் எனக் கூறினார்.

error: Content is protected !!