news

News April 26, 2024

ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு விவரங்கள் கசிந்ததால் சர்ச்சை

image

ஐசிஐசிஐ வங்கியின் செயலியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கிரெடிட் கார்டு பயனர்களின் விவரங்கள் கசிந்துள்ளது. பிற பயனர்களின் கிரெடிட் கார்டு எண், சிவிவி எண் போன்றவற்றை பார்க்க முடிந்ததாக சமூகவலைதளங்களில் பலர் பதிவிட்டனர். இதனிடையே ஐசிஐசிஐ வங்கி, புதிய கிரெடிட் கார்டு பயனர்களின் விவரங்கள் தவறுதலாக கசிந்துள்ளது. இதனால் ஏதேனும் நிதியிழப்பு ஏற்பட்டிருப்பின், வங்கி திருப்பியளிக்குமென உறுதியளித்துள்ளது.

News April 26, 2024

வேட்பாளர் மறைவால் தேர்தல் தள்ளிவைப்பு

image

இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலில், 89 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற இருந்தது. ஆனால் மத்தியப் பிரதேசத்தின் பேதுல் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் அசோக் பஹலவி, ஏப்.9 ஆம் தேதி திடீரென மாரடைப்பால் காலமானார். இதனையடுத்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1952இன் படி, பேதுல் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு, மே 7ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

News April 26, 2024

88 இடங்களுக்கு மல்லுக்கட்டும் 1,202 வேட்பாளர்கள்!

image

மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்டமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் சுயேச்சைகள் உள்பட 1,202 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 1.67 லட்சம் வாக்குச்சாவடிகளில், மொத்தம் 15.88 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 8.08 கோடி பேர் ஆண் வாக்காளர்கள், 7.8 கோடி பேர் பெண் வாக்காளர்கள் மற்றும் 5,929 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.

News April 26, 2024

தினம் ஒரு திருக்குறள்!

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: வான் சிறப்பு ▶குறள் எண்: 13
▶குறள்: விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி.
▶பொருள்: உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்.

News April 26, 2024

கனடாவுக்கு முன்னுரிமை தரும் சர்வதேச மாணவர்கள்!

image

அமெரிக்காவை விட கனடாவில் உயர்கல்வி பயில சர்வதேச மாணவர்கள் முன்னுரிமை அளிப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கு அமெரிக்காவில் பணிபுரிய ஹெச்1பி விசா பெறுவதில் கடினமாக இருப்பதும், அதோடு ஒப்பிடுகையில் கனடாவில் குடியுரிமை பெறுவது எளிதாக இருப்பதும் காரணமென கூறப்பட்டுள்ளது. இதனிடையே, அதிக மாணவர்கள் வருவதை கட்டுப்படுத்த, இந்தாண்டு 3.60 லட்சம் பேரை மட்டுமே அனுமதிக்க கனடா அரசு முடிவு செய்துள்ளது.

News April 26, 2024

தென்னிந்தியாவில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும்

image

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை விட இம்முறை தென் மாநிலங்களில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றுமென மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் புவனகிரியில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த பின்னர் பேசிய அவர், தென்னிந்தியா முழுவதும் புதிய ஆற்றல், எழுச்சியை காண்கிறோம். தெலங்கானாவில் இருப்பதைப் போன்று, பிற தென்னிந்திய மாநிலங்களில் எழுச்சியை காணமுடிகிறது’ என்றார்.

News April 26, 2024

4ஆவது டி20 :பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து

image

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 178/7 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 179 ரன்கள் இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில் 174/8 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், 2-1 என்ற புள்ளிக்கணக்கில் நியூசிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.

News April 26, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (ஏப்ரல் 26) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News April 26, 2024

தனிமையில் இனிப்பை அதிகம் விரும்பும் பெண்கள்!

image

தனிமையில் இருக்கும் பெண்கள் அதிகம் கேக், சாக்லேட்டுகள் சாப்பிடுவதாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலை ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது. தனிமையில் இருக்கும், தனிமையை உணரும் 93% பெண்களின் உணவுப் பழக்கத்தை ஆய்வு செய்ததில், அதிக இனிப்பான, கலோரி கொண்ட உணவுகளை உட்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் அதிகரிப்பதை கண்டறிந்துள்ளனர். இதுவே பெண்களின் உடல் பருமன் பிரச்னைக்கு காரணமாக அமைவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

News April 26, 2024

இன்று மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு!

image

மக்களவைத் தேர்தலில் 2ஆம் கட்டமாக 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 89 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் வாக்கு சாவடி மையங்களில் தயார் நிலையில் உள்ளன. இந்த தேர்தலில் ராகுல் காந்தி, ராஜீவ் சந்திரசேகர், சசிதரூர், ஹேமமாலினி, குமாரசாமி, நடிகர் சுரேஷ்கோபி ,அனில் அந்தோணி உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

error: Content is protected !!